ஃபிரடரிக் ஆசுட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்
பிரடரிக் ஆசுட்டன்
Frederick Ashton
பிறப்புபிரடரிக் வில்லியம் மாலண்டைன் ஆசுட்டன்
(1904-09-17)17 செப்டம்பர் 1904
உவயாகில், ஈக்குவடார்
இறப்பு18 ஆகத்து 1988(1988-08-18) (அகவை 83)
சாண்டோசு விடுதி, இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
பணிநடன இயக்குநர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிம்போனிக் மாறுபாடுகள், (1946), சிந்தரல்லா (1948), சில்வியா (1952), ஆண்டைன் (1958), லா பில்லெ மால்கார்டி (1960)

சர் ஃபிரடெரிக் வில்லியம் மல்லண்டெய்ன் ஆஷ்டன் (Sir Frederick William Mallandaine Ashton)17 செப்டம்பர் 1904  – 18 ஆகஸ்ட் 1988) ஒரு பிரித்தானிய பாலே நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். இவர் நடன இயக்குனராகவும் பணியாற்றினார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

ஜார்ஜ் ஆஷ்டன் 1864 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் ஹாஸ்தனுக்கும் அவரின் இரண்டாவது மனைவி ஜார்ஜியாவிற்கும் இவர் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். ஆஷ்டன் மத்திய மற்றும் தென் அமெரிக்க கேபிள் நிறுவனத்தின் மேலாளராகவும், குயாகுவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் துணைத் தூதராகவும் இருந்தார்.[1]

1907 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் பெருவில் உள்ள லிமாவுக்கு குடிபெயர்ந்தது, அங்கு ஆஷ்டன் ஒரு தொமினிக்கன் சபைபள்ளியில் பயின்றார். அவர்கள் 1914 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு ஆங்கில காலனியின் குழந்தைகளுக்கான பள்ளியில் பயின்றார். 1917 ஆம் ஆண்டு இவர் அனா பாவ்லூவாவின் நடனத்தினைப் பார்த்தார். அதன் பிறகு தானும் ஒரு நடனம் ஆடுபவர் ஆக வேண்டும் எனத் தீர்மானித்தார்.[1]

அந்த சமயத்தில் நடனம் என்பது ஒரு தொழிலாக பரவலாக அறியப்படவில்லை. இந்த சமயத்தில் இவரின் குடும்பத்தினர் இவரின் முடிவினை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு தயக்கம் இருந்ததாகக் கூறினார்.1919 ஆம் ஆண்டு இவரின் தந்தை கல்வி கற்பதற்காக இவரை இலண்டனுக்கு அனுப்பினார். ஆனால் அங்கு பேசும் மொழி மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் போன்ற பல காரணங்களால் அவரால் அங்கு சரியாக கல்வி கற்க இயலவில்லை.[2]

அவர் கல்வியில் இவருக்குப் போதுமான ஆர்வம் இல்லை. அதனால் 1921 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டு வெளியேறும்போது ஆஷ்டன் ஒரு வணிக நிறுவனத்தில் சேர வேண்டும் என்று அவரது தந்தை முடிவு செய்தார். அவர் லண்டன் நகரத்தில் ஒரு இறக்குமதி-ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.அங்கு பணிபுரியும் போது எசுப்பானியம் மற்றும் பிரஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறனைப் பெற்றார்.ஜனவரி 1924 இல் ஜார்ஜ் ஆஷ்டன் தற்கொலை செய்து கொண்டார்.

மரபுரிமை[தொகு]

ஆஷ்டன் மற்றும் அவரது கூட்டு நடனத்தின் பாரம்பரியத்தை நிலைநாட்ட, ஃபிரடெரிக் ஆஷ்டன் எனும் பெயரில் 2011 ஆம் ஆண்டில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. இது சுயாதீனமானது, ஆனால் ராயல் பாலேவுடன் இணக்கமாக செயல்படுகிறது.[3]

மரியாதைகள்[தொகு]

1962 ஆம் ஆண்டில் இளங்கலை நைட் பட்டமும் , 1967 ஆம் ஆண்டில் கம்பானியன் ஆப் ஹானர் ஆகிய மாநில விருதுகளைப் பெற்றார். 1960 ஆம் ஆண்டில் பிரான்ஸ் அரசின் செவாலியே விருது மற்றும் 1964 ஆம் ஆண்டில் ஆர்டர் ஆஃப் டேனெபிராக் விருது, 1959 ஆம் ஆண்டில் ராயல் அகாதமி ஆஃப் டான்ஸ் வழங்கிய இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விருதினைப் பெற்றார். 1962 ஆம் ஆண்டில் டர்ஹாம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. மேலும் இவர் 1967 இல் கிழக்கு அங்கிளியா 1970 அம் ஆண்டில் ஹல் மற்றும் 1976 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.[4]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Walker, Kathrine Sorley, "Ashton, Sir Frederick William Mallandaine (1904–1988)", Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004, accessed 31 March 2013 (subscription or UK public library membership required)
  2. "Sir Frederick Ashton – Great Choreographer and founder-figure of British ballet" TheTimes 20 August 1988
  3. Frederick Ashton Foundation Launched", Royal Opera House, 10 October 2011
  4. "Ashton, Sir Frederick (William Mallandaine)", Who Was Who, A & C Black, online edition, Oxford University Press, December 2012, accessed 6 July 2013 (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரடரிக்_ஆசுட்டன்&oldid=3924452" இலிருந்து மீள்விக்கப்பட்டது