ஃபின் பேலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபெர்கல் டேவிட் [1] (Fergal Devitt) (பிறப்பு: சூலை 25, 1981) [2][3]  என்பவர் ஓர் ஐரிய தொழில்முறை மற்போர் வீரர் ஆவார்.  இவர் ஃபின் பேலர் எனும் எனும் மேடைப் பெயராலேயே பரவலாக அறியப்படுகிறார். தற்போது இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் சுமாக்டவுன் நிகழ்ச்சியில் ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.

தனது தொழில் வாழ்க்கையில் நியூ சப்பான் புரோ ரெஸ்லிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அங்குவிளையாடிய போது மூன்று முறை இளையோர் மிகு கன வாகையாளர் பட்டத்தினையும் ஆறு முறை கூட்டு வாகையாளர் பட்டத்தினையும் வென்றார். அதில் நான்கு முறை ருசூக் டக்குசியுடனும் இரு முறை மினோருவுடனும் இணைந்து கூட்டு வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார்.  மேலும் இருமுறை 2010 மற்றும் 203 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பெஸ்ட் ஆஃப் சூப்பர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில்  இரு முறை வென்றார்.

பின்பு உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் மற்றொரு நிகழ்ச்சியான என் எக்ஸ் டி யில் இனைந்த போது ஃபின் பேலர் என்பதனை தனது மேடைப் பெயராகத் தேர்வு செய்தார். அவர் ஒரு முறை என் எக்ஸ் டி வாகையாளராகத் தேர்வாகினார்.[4] மேலும் அதிக நாட்கள் வாகையாளர் பட்டத்தினை தக்க வைத்துக் கொண்டவர் எனும் புதிய சாதனையும் படைத்தார். அவர் 292 நாட்கள் அந்த வாகையாளர் பட்டத்தினை தன் வசம் வத்திருந்தார். உலக மற்போர் நிறுவனம் இதனை 293 நாட்களாக அறிவித்தது.  இந்த நிறுவனத்தின் முதல் டஸ்டி ரோட்ஸ் கூட்டு வாகையாளர் கிளாசிக் எனும் வாகையாளர் பட்டத்திற்கான முதல் போட்டியில் சுமாவோ ஜோவுடன் இணைந்து கூட்டு வாகையாளர் பட்டம் பெற்றார். பின்பு உலக மற்போர் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக என் எக்ஸ் டி யில் இருந்து விலகி இவர் சுமாக்டவுனில் கலந்து கொண்டார். இவர் கலந்து கொண்ட தனது முதல் பே பெர் வியூ நிகழ்ச்சியிலேயே வாகையாளர் பட்டம் பெற்றார்.[5] 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்மர் சிலாம் எனும் நிகழ்ச்சியில் இவர் உலக வாகையாளர் பட்டம் பெற்றார்.[6] ஒப்பந்தாமாகி27 நாட்களில் இவர்  இந்தப் பட்டத்தினைக் கைப்பறியதன் மூலம்  மிகக் குறைந்த நாட்களிலேயே சாகையாளர் பட்டம் பெற்றவரானார்.

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்[தொகு]

சூலை 19, 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வீரர்கள் தேர்வில் இவர் உலக  மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ரா எனும் நிகழ்ச்சியில் தேர்வானார்.[7][8] சூலை 25 இல் நடைபெற்ற ராவில் தனது 35 ஆம் பிறந்தநாளின் போது இவர் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[9] புதியதாக உலக வாகையாளர் எனும் வாகையாளர் எனும் பட்டத்தினை அந்த நிறுவனம் அறிவித்தது. அதற்காக நான்கு வீரர்கள் பங்குபெறும் ஃபேடல் ஃபோர் வே  எனும் போட்டியில் ரூசவ், சிசாரோ மற்றும் கெவின் ஓவன்சுவுடன் இணைந்து இவர் போட்டியிட்டார். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்மர்சிலாம் எனும் நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இவர் உலக வாகையாளர் பட்டம் பெற்றார். ஒப்பந்தாமாகி27 நாட்களில் இவர்  இந்தப் பட்டத்தினைக் கைப்பறியதன் மூலம்  மிகக் குறைந்த நாட்களிலேயே சாகையாளர் பட்டம் பெற்றவரானார். அந்தப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். அந்த சமயத்தில் அவரின் வாகையாளர் பட்டத்தினை திரும்பக் கொடுக்க  இருப்பதாக ரா நிர்வாக மேலாளரான மிக் ஃபோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.[10][11]

சான்றுகள்[தொகு]

 1. "WWE officially announces acquisition of Fergal Devitt". பார்க்கப்பட்ட நாள் 20 August 2017.
 2. "Fergal Devitt profile". Online World of Wrestling. பார்க்கப்பட்ட நாள் 8 July 2009.
 3. "Fergal Devitt · TheJournal.ie". TheJournal.ie.
 4. "NXT Championship". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
 5. "SummerSlam (2016) (Finn Bálor vs. Seth Rollins)". 'SummerSlam'. WWE Network. 200 minutes in. “Finn Bálor becomes the first Superstar to ever win a world title in his debut match on a pay-per-view.”
 6. Laboon, Jeff. "Finn Bálor def. Seth Rollins". WWE. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
 7. Currier, Joseph (19 July 2016). "WWE Raw and SmackDown live rosters". Wrestling Observer Newsletter. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
 8. "2016 WWE Draft results: WWE officially ushers in New Era". WWE. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
 9. "Finn Balor joins the main roster as a Raw superstar". WWE. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
 10. Caldwell, James. "BREAKING – Finn Bálor relinquishes Universal Title, out six months". Pro Wrestling Torch. Minnesota. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
 11. Caldwell, James. "8/22 WWE Raw Results – CALDWELL'S Complete Live TV Report". Pro Wrestling Torch. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபின்_பேலர்&oldid=2915203" இலிருந்து மீள்விக்கப்பட்டது