ஃபளட் ஆஃப் ஃபயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Flood of Fire
நூலாசிரியர் Amitav Ghosh
நாடு India
மொழி English
தொடர் Ibis trilogy
வகை Novel
வெளியீட்டாளர் John Murray
வெளியிடப்பட்ட திகதி
28 May 2015
ஊடக வகை Print (hardback)
பக்கங்கள் 624
ISBN 978-0-670-08216-2
முன்னைய நூல் River of Smoke

ஃபளட் ஆஃப் ஃபயர் என்பது இந்திய எழுத்தாளர் 'அமித்தாவ் கோஷ்' எழுதிய ஒரு ஆங்கில நாவலாகும். இந்த நாவலானது, முறையே 2008 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் வெளியிடப்பட்ட 'ஸீ ஆஃப் பாப்பீஸ்' மற்றும் 'ரிவர் ஆஃப் ஸ்மோக்' ஆகிய நாவல்களின் வரிசையில் வெளிவந்த முத்தொகுப்பின் இறுதி வடிவமாகும்.இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 19 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஓப்பியம் வர்த்தகத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.இந்த புத்தகம் முதன்முதலில் ஆங்கில வெளியீட்டாளர் ஜான் முர்ரே அவர்களால் வெளியிடப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் ஃபாரர், ஸ்ட்ராஸ் மற்றும் கிராக்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டது.இந்த நாவலானது த ஹிந்து இலக்கிய பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, 2015 ஆம் ஆண்டிற்கான குறுக்கெழுத்து புத்தகம் ஜூரி விருது பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

'ஸீ ஆஃப் பாப்பீஸ்' மற்றும் 'ரிவர் ஆஃப் ஸ்மோக்' ஆகிய நாவல்களின் கதைவரிசையில் இக்கதையானது 1839ல் தொடங்குகிறது. தீட்டியின் சகோதரர் கேசரி சிங்கிற்கு, தீட்டி தனது கணவருடன் உடன்கட்டை ஏற மறுத்து எங்கோ சென்றுவிட்டாள் என்று தெரிய வருகிறது. தீட்டி தாழ்ந்த ஜாதி தொழிலாளியுடன் ஓடி விடுகிறாள். இச்சம்பவம் கேசரி சிங் குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கேசரி சிங் பிரிட்டிஷ் இராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்கிறார். அவர் கிழக்கு இந்திய கம்பெனிக்காக பணிபுரிகிறார். அங்கு அவரது மேலாளராக டீட்டியின் இறந்த கணவரின் சகோதரர் பணிபுரிகிறார். ஒரு குவாட்ரன் தாய் மற்றும் ஒரு வெள்ளைக்கார தந்தைக்கு மகனாக பிறந்த ஜேக்கரி ரீட் என்ற அமெரிக்க சிப்பாய், வெள்ளைக்காரர் போல தன்னைக்காட்டி கொண்டு வர்த்தக வியாபாரத்தை தொடங்குகிறார்.ஷிரெயன் மோடி என்ற ஒரு இந்திய பார்சி பெண், தனது கணவருக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தையைத் தேடி சீனாவிற்கு சென்றிருக்கிறார்.அப்போது அவளுக்கு உதவி செய்யும் அவள் கணவரின் நெருங்கிய நண்பர் மீது அவள் காதல் கொள்கிறாள். இந்த ஆர்மீனிய நண்பருடனான அவரது உறவு அவரது மரபார்ந்த பார்சி சமூகத்தால் கண்டனம் செய்யப்படுமென அவள் அறிந்திருந்தாள்.பிரிட்டானியரால் கைது செய்யப்பட்டபின் நீல் ராட்டான் ஹால்டர் தனது மகனைப் பிரிந்து விடுகிறார். பெர்ஹாமின் தவறான மோசடி குற்றச்சாட்டுகளால் சிறையில் அடைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக நீல் எங்கோ ஓடி விடுகிறார். இந்நிலையில் முதல் ஓப்பியம் போர் தொடங்குகிறது மற்றும் கதை இந்த நிகழ்வுகளின் மத்தியில் நகர்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபளட்_ஆஃப்_ஃபயர்&oldid=2378116" இருந்து மீள்விக்கப்பட்டது