நாட்ராம்பள்ளி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்ராம்பள்ளி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தொகுதி எண் 40 ஆக இருந்த இத் தொகுதி 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பிற்குப் பின் நீக்கப்பட்டுவிட்டது. இது ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி அமைந்திருந்தது. பெரம்பூர், திருப்பத்தூர், பர்கூர், அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 தி. சி. திம்மராய கவுண்டர் திமுக 29215 52.18 ஆர். சி. எசு. கவுண்டர் காங்கிரசு 26776 47.82
1971 தி. சி. திம்மராய கவுண்டர் திமுக 33303 55.33 கே. சண்முகசுந்தரம் ஸ்தாபன காங்கிரசு 26882 44.67
1977 தி. அன்பழகன் அதிமுக 31015 44.43 எம். மாரப்பன் திமுக 14960 21.43
1980 தி. அன்பழகன் அதிமுக 42786 49.82 என். கே. இராசா திமுக 36161 42.11
1984 தி. அன்பழகன் அதிமுக 56503 58.55 என். கே. இராசா திமுக 27293 28.28
1989 ஆர். மகேந்திரன் திமுக 36774 32.00 எ. ஆர். இராசேந்திரன் அதிமுக (ஜெ) 27193 23.66
1991 ஆர். இந்திரகுமாரி அதிமுக 81446 68.05 என். கே. இராசா திமுக 33917 28.34
1996 ஆர். மகேந்திரன் திமுக 50118 39.65 டி. அன்பழகன் சுயேச்சை 46897 37.10
2001 எசு. நடராசன் பாமக 67046 48.96 டி. அன்பழகன் எம் ஜி ஆர் கழகம் 54958 40.13
2006 என். கே. ஆர். சூரியகுமார் திமுக 78689 --- கே. ஜி. சுப்பரமணி அதிமுக 61446 ---
  • 1977ல் ஜனதாவின் ஆர். வி. லட்சுமதிபதி கவுண்டர் 14294 (20.48%) வாக்குகள் பெற்றார்.
  • 1984ல் சுயேச்சை துரை ஜெயராமன் 11000 (11.40%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் டி. அன்பழகன் 21558 (18.76%) & காங்கிரசின் வி. கே. கமலாலயக்கண்ணன் 18906 (16.45%) வாக்குகள் பெற்றனர்.
  • 1996ல் அதிமுகவின் எச். டி. அனுமந்தன் 24321 (19.24%) வாக்குகள் பெற்றார். .
  • 2006ல் தேமுதிகவின் எ. பயசு பாசா 8951 வாக்குகள் பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.