எபிரேயத் தமிழியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

எபிரேயத் தமிழியல் (Hebrew Tamil Studies) என்பது யூதர் மற்றும் எபிரேய மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் புனித நூலாகிய எபிரேய விவிலியம் அல்லது தனாக் (Tanakh) தமிழ் சொற்களை பாவித்திருப்பதாக கருதப்படுகின்றது.[1][2] திருவிவிலியத்தில் (1 அரசர்கள் 10:22) மயில் என்பதை தமிழில் உள்ள சொல்லான தோகை எனும் உச்சரிப்புசார் துகி என பாவிக்கப்பட்டுள்ளது.[3][4] மயிலை யூதர்களின் அரசனாகிய சாலமோன் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார் என்னும் இடத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசன் சாலமோன் தமிழ்நாட்டிலிருந்து அதனைப் பெற்றார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகவுள்ளது.[5][6][7][8] இந்தியாவிற்கும், (குறிப்பாக தமிழ்நாட்டிற்கும்) யூத நாட்டிற்கும் இடையில் அக்காலத்தில் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் காணப்பட்டன என்பதை யூத வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[9][10][11] திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாலமோன் கால தர்ஷிஸ் தமிழகத்தின் அல்லது வட ஈழத்தின் குதிரைமலை அல்லது திருக்கேதீச்சரம் எனவும் அறிஞர்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன.[12][13]

தமிழில் உள்ள அம்மா, அப்பா என்னும் உச்சரிப்புக்கள் எபிரேயத்தில் முறையே இம்மா (imma), அபா (abba) என பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழிலும் எபிரேயத்திலும் காணப்படும் சொற்களின் அட்டவணை பின்வருமாறு:[14]

தமிழ்ச் சொல் எபிரேயச் சொல்
ஆறு யோர்
உரு ஊரு
ஊர் ஆர், ஈர்
சுவர் ஷூர்
நாட்டு நாத்தா
பால் (பிரிவு) பா
மெத்தை மித்தாஹ்
வா போ
சீறு ஷாரக்
அவா அவ்வாஹ்

உசாத்துணை[தொகு]

  1. The Wiley-Blackwell Companion to Inter-Religious Dialogue. John Wiley & Sons. 2013. பக். 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-52994-2. https://archive.org/details/wileyblackwellco0000unse_c9s6. 
  2. Between Jerusalem and Benares: Comparative Studies in Judaism and Hinduism. SUNY Press. 2012. பக். 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4384-0437-0. 
  3. Locating Ophir -- The Search for the Biblical El Dorado
  4. The Tamil Language
  5. Smith, William, A dictionary of the Bible, Hurd and Houghton, 1863 (1870), pp.1441
  6. Ramaswami, Sastri, The Tamils and their culture, Annamalai University, 1967, pp.16
  7. Gregory, James, Tamil lexicography, M. Niemeyer, 1991, pp.10
  8. Fernandes, Edna, The last Jews of Kerala, Portobello, 2008, pp.98
  9. Rabin, Chaim. 1971. “Loanword Evidence in Biblical Hebrew for Trade between Tamilnad and Palestine in the First Millennium B.C. In Proceedings of the Second International Seminar of Tamil Studies. Madras, International Association of Tamil Research, pp. 432-440.
  10. "Sanskrit and Tamil loan words are found in the Hebrew Bible". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
  11. Jewish Virtual Library
  12. Richard Leslie Brohier (1934). Ancient irrigation works in Ceylon, Volumes 1-3. pp. 36
  13. A dictionary of the Bible by Sir William Smith published in 1863 notes how the Hebrew word for peacock is Thukki, derived from the Classical Tamil for peacock Thogkai: Ramaswami, Sastri, The Tamils and their culture, Annamalai University, 1967, pp. 16, Gregory, James, Tamil lexicography, M. Niemeyer, 1991, pp. 10, Fernandes, Edna, The last Jews of Kerala, Portobello, 2008, pp. 98, Smith, William, A dictionary of the Bible, Hurd and Houghton, 1863 (1870), pp. 1441
  14. தமிழ் வரலாறு - தேவநேயப் பாவாணர்

வெளி இணைப்புகள்[தொகு]

மேலதிக வாசிப்பு[தொகு]

  • Mariaselvam, Abraham (1988), The Song of Songs and Ancient Tamil Love Poems: Poetry and Symbolism, Rome: Pontificium Institutum Biblicum, ISBN 88-7653-118-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிரேயத்_தமிழியல்&oldid=3739682" இலிருந்து மீள்விக்கப்பட்டது