பேச்சு:முத்துராமலிங்கத் தேவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துராமலிங்கத் தேவர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முத்துராமலிங்கத் தேவர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திருத்தம்[தொகு]

2409:4072:404:8A7A:0:0:EC0:B0AD 01:25, 30 சூன் 2020 (UTC)'சிறை வாசத்திற்கு பின்'தலைப்பில்,1950 இல் 'மீண்டு'>>மீண்டும் 'போது',>>பொது என்று திருத்த வேண்டும். நன்றி! (2409:4072:404:8A7A:0:0:EC0:B0AD 02:03, 30 சூன் 2020 (UTC))[பதிலளி]

என்பதில்,கட்டுரையை முத்துராமலிங்கம் என்ற தலைப்புக்கு மாற்றலாமா? கட்டுரையில் வேண்டுமானால், ஒருவரியாக "இவர் பரவலாக முத்துராமலிங்கத் தேவர் என அறியப்பட்டார்" எனத் தரலாம்--ரவி 07:15, 21 மார்ச் 2007 (UTC)

முக்குலத்தோர் சமூகம் என்கிற அடிப்படையிலேயே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எனக் குறிப்பிட்டிருந்தோம். படையெடுத்து வந்த ஆங்கிலேயரை விரட்டும் பொருட்டு கணக்கில்லா தியாகங்களை இச்சமூகம் தமிழ் சமுதாயத்துக்காக செய்துள்ளது. இன்று நாம் நமது அடையாளத்துடன் வாழ்வதற்கு இச்சமூகம் நம் மக்களைக் காப்பதை தம் கடமையெனக் கருதிச் செய்ததும் ஒரு முக்கிய காரணமாகும். வளமோடு சீரும் சிறப்புமாக வாழ்ந்த இச்சமூகம் அந்நியருக்கு அடிபணிய மறுத்த ஒரே காரணத்துக்காக தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டு தமது வளங்களை எல்லாம் பறிகொடுத்தது. இத்தகைய சமூகத்தின் வழி தோன்றல்களுக்கும் நாம் கடமைப் பட்டுள்ளோம். இன்று நாம் நமது பெயருக்கு பின் அடைமொழியிட்டுக் கொள்வதை தவிர்த்தாலும் இவர்களது செயலகளை நினைவூட்டும் விதமாக நமது இம்முன்னோர்களின் அடைமொழிகள் நீடிக்கட்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Amachu 12:41, 23 மார்ச் 2007 (UTC)

அமாச்சு!!! கட்டுரையில் அதி கூடிய தேவையேற்பட்டால் மட்டுமே அவரது சாதி பற்றி குறிபிடல் வேண்டும். இது தவியில் வழக்கமாக உள்ளது. எனவே உங்கள் கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.--டெரன்ஸ் \பேச்சு 02:16, 21 மார்ச் 2007 (UTC) இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு சாதியினரால் முக்குதோரோ என்னவோ எடுக்கப்பட்தாகவும் நிங்கள் கூறியுள்ள பகுதிகளுக்கு ஆதாரம் தர முடியுமா? என்னைப் பொருத்தவரை எவரது சாதனைகளையும் சாதிப் பெயரால் நீட்டிப்பார்ப்பதை தவியில் அனுமதிக்க முடியாது கூடாது. சாதி என்ற புற்றுநோயை அகற்றும் போது கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் தவியில் ஆதாரமற்று அதனை நீடிப்பது அனுமதிக்க முடியாது. மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சாதி சாயம் பூச வேண்டாம். --டெரன்ஸ் \பேச்சு 14:53, 23 மார்ச் 2007 (UTC)

ஒரு வரலாறு எழுதும் போது ஆள்பவர்கள்தான் அதனை எழுவார்கள். இதன் போது மேலாதிக்க சாதியினர் தாம் செய்ததாக எழுதியதிலோ அல்லது அதனை சிலர் பிற்காலத்தில் ஒரு புத்தகமாக வெளியிடுவதிலோ நியாயப்படுத்த முடியாது. மேலும் நற்கீரன் கூறியது போல சாதி அடிக்குறிப்பை தேவர் குலத்தவர் அல்லது பிள்ளைக்கும் மட்டும் இட்டு ஏனைய சாதியினருக்கு இடாவிட்டால் அது சமச்சீரற்ற நிலையாகும். எனது கருத்து என்னவென்றால் தேவர் சாதியினர் சுதந்திரத்துக்காக ஏனையவரைவிட குறிப்பிடத்தக்கள்வு போரடியிருப்பின் அதை குறிக்க வேண்டிய இடம் இந்திய சுதந்திர போராட்ட்த்தில் தேவர் சாதியினரின் பங்கு போன்ற தனிக் கட்டுரையே தவிர, முத்துலிங்கம் தேவர் சாதியில் பிறந்தார் என்பது அல்ல. சாதியை surname போல பாவித்த சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய இடங்களில் இது தவிர்க்கப்பட வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 15:19, 23 மார்ச் 2007 (UTC)
சாதி அடிக்குறிகளை தவிர்ப்பதா இல்லையா என்று நோக்கினால், முடியுமானல் நீக்கினால் நன்று. ஏன் என்றால் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து பிறந்தவர் தான் இந்த சாதி என்று கோடிட்டு காட்ட முயலமாட்டார். உயர் சாதிகளில் பிறந்தவர்கள், அவர்களின் சாதிகளை காட்ட முயல்வது ஒரு அதிகாரவர்க்க செயல்பாடாகும். இருப்பினும், வரலாற்று ரீதியாக சிலபெயர்களை அதன் அடிக்குறிகளைத் தவிர்த்து அடையாளம் காண்பது சிரமம். --Natkeeran 15:29, 23 மார்ச் 2007 (UTC)

டெரன்ஸ், நற்கீரன், அமாச்சு - இதை தேவர், முத்துஇராமலிங்கம் என்ற நோக்கில் உரையாடினால் விவாதம் எளிதாக திசை மாறும். பொதுவாக, 17-20 நூற்றாண்டுக் காலப் பகுதியில் தமிழகத்தில் சாதிப் பெயர்களுடன் இணைத்து அறியப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த சாதிப் பெயர்களை அப்படியே விக்கிபீடியா கட்டுரையில் தருவதா என்பது தான் விவாதமாக இருக்க முடியும். என்ன முடிவு எடுத்தாலும் அதை எல்லா சாதிப் பெயர்களுக்கும் எல்லாருக்கும் (அவர்கள் பின்புலம், வரலாற்று முக்கியத்துவம் தாண்டி)ஆன முடிவாக விக்கிபீடியா முழுக்க நடப்பில் கொண்டு வர வேண்டும். --ரவி 15:21, 23 மார்ச் 2007 (UTC)


கட்டுரைத் தலைப்புகள், உள்ளடக்கத்தில் சாதிப் பெயர்கள் குறித்த ஒரு முற்றுப் பெறாத முன்னைய உரையாடல் - பேச்சு:ருக்மிணி தேவி அருண்டேல்--ரவி 15:02, 23 மார்ச் 2007 (UTC)

தேவர் என்ற சொல் பெயருடன் இயல்பாக இணைந்திருந்தால், இருப்பதில் பிரச்சினை இல்லை. அப்படி இல்லையென்றால் பல இடங்களில் பிள்ளை என்ற சாதி அடிக்குறி, குருக்கள், சாமி போன்ற அடிக்குறிகளும் நீக்கப்பட வேண்டி வரலாம். டெரன்ஸ், உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் தெளிவில்லை.--Natkeeran 15:12, 23 மார்ச் 2007 (UTC)


இரவி கூறியது போல "என்ன முடிவு எடுத்தாலும் அதை எல்லா சாதிப் பெயர்களுக்கும் எல்லாருக்கும் (அவர்கள் பின்புலம், வரலாற்று முக்கியத்துவம் தாண்டி)ஆன முடிவாக விக்கிபீடியா முழுக்க நடப்பில் கொண்டு வர வேண்டும். " இது கீழ் மேல் என சாதி பற்றிய கருத்துக்கள் இருக்குவரை சாத்திய மற்றது. நாம் சமூக கருத்துக்களில் திடிர் மாற்றம் கொண்டுவரமுடியாது. தவியில் சிறந்த்து சாதியை முற்றிலும் பெயரி தவிர்பதேயாகும்.--டெரன்ஸ் \பேச்சு 15:28, 23 மார்ச் 2007 (UTC)

இது விதயத்தில் மேலே நான் குறிப்பிட்டுள்ள ருக்மிணி தேவி அருண்டேல் கட்டுரையின் பேச்சுப் பக்க உரையாடல் முக்கியமானது.

17-20 ம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் பிள்ளை, முதலியார், தேவர், ஐயர், ஐயங்கார், நாடார் போன்ற சில சாதியினர் மட்டும் சாதிப் பெயர்களைத் தம்முடன் இணைத்து சொல்லி இருக்கின்றனர். இவர்களும் இப்படியே அறியப்பட்டிருக்கின்றனர். ஆனால், இதை surname என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவது என்று தெரியவில்லை. இந்தப் பெயர்களை தலைப்பில் இருந்து விடுத்து எழுதுவது ஒரு வகையில் வரலாற்றுச் சிதைப்பு, வரலாற்றைப் பதிவதே நம் வேலை, திருத்துவது அல்ல என்று முன்னர் சந்தோஷ் குரு தெரிவித்திருந்த கருத்தும் முக்கியமானது. இந்த ஆவணப்படுத்தல் நோக்கில் தான் இந்தப் பிரச்சினையை நோக்க முடியும்.

தனிப்பட்ட அளவில், கட்டுரைத் தலைப்பில் அல்லாமல், கட்டுரையில் ஒரு வரித் தகவலாக இவர் இப்படி அறியப்பட்டார் என்று தருவது தகும் என்று நினைக்கிறேன். சாதிகளால் இருக்கிற பிரச்சினையே போதும். நம் முன்னோர்களை இந்தியர்கள், தமிழர்கள், மனிதர்களாக வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதே நலம். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சாதிக்கும் சார்பாளர் ஆக்கி சிறப்பிக்க அவசியமில்லை. --ரவி 15:29, 23 மார்ச் 2007 (UTC)

இருப்பினும், வரலாற்று ரீதியாக சிலபெயர்களை அதன் அடிக்குறிகளைத் தவிர்த்து அடையாளம் காண்பது சிரமம். --Natkeeran 15:29, 23 மார்ச் 2007 (UTC)

ஒருவரின் சாதி ஒருவரைப் பற்றிய கட்டுரைக்கு முக்கியமில்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்ல முடியாது. ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதிக்கு ஆதரவாக இயங்கினார் என்றால் அந்த தகவலை இணைப்பது முக்கியமாக இருக்கலாம். ஒருவர் ஒரு சாதியை முன்னிறுத்தி செயற்பட்டார் என்றால் அந்த தகவலும் பதியப்படவேண்டும். இங்கு தகவல் இருட்டிப்பு கூடாது. அடிமைத்தனம் போல சாதிக்கட்டமைப்பை த.வி நோக்கலாமா...அது சரியா என்பதில் கூட தெளிவில்லை. --Natkeeran 15:36, 23 மார்ச் 2007 (UTC)

முத்துஇராமலிங்கம் போன்றோரின் சாதி அடையாளங்கள் தவிர்க்க இயலாதவை. அவற்றை தமிழ் விக்கிபீடியாவில் மறைக்கவும் கூடாது. கட்டுரைப் பெயரில் சாதிப் பெயரைத் தருவதா வேண்டாமா என்பது தான் என் கேள்வி. கட்டுரையில், இவ்வாறு அறியப்பட்டார் என்று கண்டிப்பாக குறிப்பிட வேண்டாம். சாதி சார்ந்து சாதி தொடர்பாக வரக்கூடிய ஒருவருடைய செயல்பாடுகளை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டும்--ரவி 15:44, 23 மார்ச் 2007 (UTC)


ம்ம்ம்.. நல்லது... இனி பெரும்பாலோனோருக்கு இப்படிப் பட்ட பெயர் இருக்கப் போவதில்லை. மேலும் முத்துராமலிங்கத் தேவர் என்றுதான் இவரது பெயர் அரசாங்கக் குறிப்புகளில் இருப்பதோடு, அனைவராலும் ஏற்கவும் பட்டுள்ளார். இவரது பதிவு செய்யப் பட்ட பெயர் இதுவாக இருக்கும் போது அதனை அப்படியே வழங்கலாம்.

சரி முக்குலத்தோர் என்ற தலைப்பில் கட்டுரை வரைந்தால்? Thevar Pasumpon_Muthuramalinga_Thevar

இன்றளவும் பசும்பொன்னில் அக்டோபர் 30 வருடம் தோறும் நடைபெறும் விழா தேவர் குரு பூஜா என்றே அழைக்கப் படுகின்றது. விழாக்கள் என்ற பகுப்பில் இதனை எழுத முற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது?

Amachu 16:22, 23 மார்ச் 2007 (UTC)

தேவர், முக்குலத்தோர், தேவர் குரு பூசை போன்ற தலைப்புகளில் நிச்சயம் எழுதலாம். உள்ளடக்கம் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்--ரவி 16:29, 23 மார்ச் 2007 (UTC)

ஆமாம் சாதி பற்றி எழுதும்போது நடுநிலையாக இருந்தால் சரி. சாதி பற்றிய தகவல்களை ஆவனப்படுத்துவது நோக்கமாக இருக்கவேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 00:36, 24 மார்ச் 2007 (UTC)

தேவர் ஜெயந்தி பரவலாக எல்லா அரசியல்வாதிகளாலும் கொண்டாடப்படுகிறது.

http://athikalai.files.wordpress.com/2011/10/thevar-adimaikal.jpg 122.174.111.189 10:09, 2 மே 2012 (UTC)[பதிலளி]


இப்பகுதியில் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஒரு இஸ்லாமியப் பெண்ணால் பாலூட்டப்பட்டதாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவருக்குப் பாலூட்டியவர் அவரது பெரியம்மாவே. அதற்கான ஆதாரங்களும் உள்ளது. ஆகையால் அதைத் திருத்தவும் −முன்நிற்கும் கருத்து Ashraf Bhayee (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தேவர் முஸ்லிம் உறவு[தொகு]

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய தாயார் மூன்று மாதத்தில் இறந்து விடுகிறார் கமுதியில் வாழ்ந்த ஆயிஷா பிவி அம்மாள் என்ற ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் தாய்ப்பால் கொடுத்து வளர்ந்தார்..💯❤️

பால் குடித்தாயின் பாசத்தை மறக்காத முத்துராமலிங்கத் தேவர்

வரலாற்றைத் தெளிவாக பதிவிடுங்கள் விக்கிபீடியாவில்

அனைவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் முத்துராமலிங்க தேவருக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்ந்தது இஸ்லாமிய பெண் என்ற அனைவருக்கும் தெரியும் இது வரலாறு

தேவர்- முஸ்லிம் உறவு[தொகு]

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தாய்ப்பால் கொடுத்தது அவரது பெரியம்மா என்று விக்கிபீடியாவில் கூறப்பட்டுள்ளது அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் 2409:4072:6E94:5E10:A428:50E9:219A:D54C 09:43, 25 ஏப்ரல் 2023 (UTC)

தேவர்-முஸ்லிம் உறவு[தொகு]

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தாய்ப்பால் கொடுத்தது அவரது பெரியம்மா என்று விக்கபீடியாவில் கூறப்பட்டுள்ளது அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் இது அனைத்து மக்களின் கோரிக்கை ஆனால் முத்துராமலிங்க தேவருக்கு தாய்ப்பால் கொடுத்தது ஒரு இஸ்லாமிய பெண்2409:4072:6E94:5E10:A428:50E9:219A:D54C 09:45, 25 ஏப்ரல் 2023 (UTC)

தேவர் -முஸ்லிம்[தொகு]

ஆதாரம் இதோ நான் இருக்கிறேன் எனது தந்தை வழி பாட்டியின் தாயை பெற்றவர்தான் சாந்த் பீவி என்று அழைக்கப்படும் ஆயிஷா பீவி இவருக்கு சிக்கந்தரம்மாள் என்ற பெயரும் உண்டு இவர்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பால் கொடுத்தவர் அதன் மூலம் என் பாட்டிக்கு திருமணத்தின் போது தாய்மாமன் சீராக பல ஏக்கர் நிலங்களையும் தந்துள்ளார் 2409:4072:6E94:5E10:A428:50E9:219A:D54C 09:55, 25 ஏப்ரல் 2023 (UTC)