வடமேற்குக் காக்கேசிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்டிக், அப்காஸ்-அத்யாகே, சிர்க்காசியன் போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படும் வடமேற்குக் காக்கேசிய மொழிகள், சிறப்பாக, ரஷ்யா, ஜோர்ஜியா, துருக்கி, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் பரந்துள்ள சிறு சமுதாயங்கள் மத்தியில் காணப்படும் மொழிக் குடும்பம் ஆகும்.

வகைப்பாடு[தொகு]

வடமேற்குக் காக்கேசிய மொழிக் குடும்பத்தில் அடையாளம் காணப்பட்ட ஐந்து மொழிகள் உள்ளன. அப்காஸ், அபாஸா, காபர்டியன் அல்லது கிழக்கு சிர்காசியன், ஆதிகே அல்லது மேற்கு சிர்காசியன், உபிக் ஆகியவை இம் மொழிகளாகும். இவை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன: