பேச்சு:அருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருவி என்பதும் நீர்வீழ்ச்சி என்பதும் ஒன்றா?--Sivakumar \பேச்சு 04:50, 13 ஏப்ரல் 2007 (UTC)

நீர்வீழ்ச்சி என்பது waterfallsன் நேரடி மொழிபெயர்ப்பு என்று நீங்கள் தான் எனக்கு எப்போதோ விளக்கியதாக நினைவு. அதனால் அருவியையே முதன்மைப்படுத்தலாம். அருவியும் நீர்வீழ்ச்சியும் ஒன்று தானே?--ரவி 09:24, 13 ஏப்ரல் 2007 (UTC)

நீர்வீழ்ச்சி என்பது நேரடி மொழி பெயர்ப்புப் போல் தெரிந்தாலும் கூட எனக்குத் தெரிந்து அருவி என்ற சொல்லுக்குப் பதிலாக நீர்வீழ்ச்சி என்றுதான் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றது. சென்னைத் தமிழ்ப் பல்கலைக் கழக அகராதியிலும் இச் சொல் இதே பொருளில் உள்ளது.
  • நீர்வீழ்ச்சி (p. 2308) [ nīrvīẕcci ] n nīr-vīḻcci . < id. +. Water fall; மலையருவி. Mod.
  • மலையருவி (p. 3109) [ malaiyaruvi ] n malai-y-aruvi . < id. +. Mountain torrent; waterfall; மலையினின்று விழும் நீர்வீழ்ச்சி.
waterfall என்பதற்கு அருவி என்ற சொல் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை. நீரூற்று என்ற பொருளிலேயே பயன்பட்டு வருகிறது.
  • அருவி¹ (p. 0136) [ aruvi¹ ] n aruvi . < அருவு-. [M. aruvi.] 1. Waterfall; மலையின் வீழ்புனல். (பிங்.) 2. River's mouth; கழிமுகம். (பிங்.) 3. Water; நீர். அருவியாம்பல். (பதிற். 71.) 4. Spring at the foot of a hill; நீரூற்று. (F.) 5. Row, arrangement; ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக. 291). Mayooranathan 10:39, 13 ஏப்ரல் 2007 (UTC)

இலங்கைத் தமிழில் அருவி என்பதைச் சிற்றாறு அல்லது போன்று பயனபடுத்துகின்றார்கள். எடுத்துக்காட்டாக அருவி ஆறு (சிங்களம் மல்வத்து ஓயா). அருவியை நீர்வீழ்ச்சியுடன் ஒன்றாகப் பாவிப்பது குழப்பத்தை உண்டுபண்ணும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. --Umapathy 10:59, 13 ஏப்ரல் 2007 (UTC)

அருவிக்கு இத்தனை பொருள் உள்ளது இப்ப அகராதி பார்த்து தான் தெரியும். தமிழ்நாட்டுப் பெருவழக்கில் அருவி என்றால் அது waterfalls தான். பிற பயன்பாடுகள் இல்லவே இல்லை என்று சொல்லலாம்--ரவி 11:30, 13 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அருவி&oldid=123366" இலிருந்து மீள்விக்கப்பட்டது