சென்னை முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை முள்ளெலி[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Erinaceomorpha
குடும்பம்: Erinaceidae
துணைக்குடும்பம்: முள்ளெலிகள் [note 1]
பேரினம்: Paraechinus
இனம்: P.m.nudiventris[note 2]
இருசொற் பெயரீடு
Paraechinus nudiventris
ஆர்சுபீல்டு [note 3], 1851)

சென்னை முள்ளெலி அல்லது வெற்று வயிறு முள்ளெலி (Bare-bellied Hedgehog/Madras Hedgehog)(விலங்கியல் பெயர் பாரெசினுசு நுடிவெண்டிரிசு) என்பது தென் கிழக்கு இந்தியாவின் வறண்டப் பகுதிகளில் காணப்படும் முள்ளெலி இனம் ஆகும். இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான தமிழ் நாட்டில் மட்டும் காணப்படுகிறது.

  • Paraechinus micropus nudiventris என்பதே இதன் முழு விலங்கியல் பெயர். Paraechinus micropus என்ற, வேறு இனத்தைப் போன்றே இருக்கும்.ஆனால், அவ்வினத்தின் கீழ்வரும் சிற்றினம் ஆகும். இந்த இரண்டு இனங்களுக்குமிடையே, குறைந்த வேறுபாடுகளே இருக்கின்றன

சென்னை முள்ளெலி என்ற இம்முள்ளெலிச் சிற்றினம், உலக விலங்கியல் அறிஞரால் அழிந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், இவ்வினம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் என்ற சரணாலயத்தில் கண்டறிந்துள்ளனர். இச்சிற்றினத்தைப் பற்றிய ஆய்வு விவரங்கள் அதிகமில்லை. அழியும் நிலையுள்ள முள்ளெலி இனமாக, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Erinaceinae - முள்ளெலிகள்
  2. Paraechinus micropus nudiventris = Paraechinus nudiventris - Paraechinus micropus என்பதன் கீழ்வரும் சிற்றினம்
  3. Thomas Horsfield - ஆர்சுபீல்டு

மேற்கோள்கள்[தொகு]

  1. சென்னை முள்ளெலி - Hemiechinus nudiventris[தொடர்பிழந்த இணைப்பு] - அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. Chakraborty, S.; Srinivasulu, C.; Molur, S. (2008). "Paraechinus nudiventris". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/39594/0. பார்த்த நாள்: 10 April 2010. 
  3. "பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பின் செம்பட்டியலிலுள்ள முள்ளெலிகள் விவரம்". Archived from the original on 2011-08-18. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.

இதர இணைய இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_முள்ளெலி&oldid=3555881" இலிருந்து மீள்விக்கப்பட்டது