உற்பத்திக் காரணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியலில் உற்பத்திக் காரணிகள் என்பது பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்வதில் பயன்படும் வளங்களைக் குறிக்கின்றது.

செந்நெறிப் பொருளியல் அணுகுமுறை[தொகு]

செந்நெறிப் பொருளியல் மூன்று வகையான காரணிகளைப் பற்றிப் பேசுகின்றது:

  • நிலம் அல்லது இயற்கை வளம் - பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மண் மற்றும் கனிப்பொருள்கள் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள். நிலத்துக்கான கொடுப்பனவு வாடகை ஆகும்.
  • உழைப்பு - பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மனித முயற்சி உழைப்பு ஆகும். இது தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் திறமைகளையும் உள்ளடக்குகிறது. உழைப்புக்கான கொடுப்பனவு கூலி எனப்படுகின்றது.
  • மூலதனப் பொருட்கள் - வேறு பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மனிதனால் ஆக்கப்பட்ட பொருட்கள். இவை, இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. பொதுவாக, மூலதனத்துக்கான கொடுப்பனவு வட்டி எனப்படுகின்றது.

நாலாம் காரணி[தொகு]

அறிவுப் பொருளாதாரத்தின் தோற்றத்துடன் நவீன பகுப்பாய்வுகள், முன் குறிப்பிட்ட பொருள்சார் மூலதனங்களை (physical capital) மனித மூலதனம், அறிவுசார் மூலதனம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றன. பின் குறிப்பிட்ட மனித மூலதனம், அறிவுசார் மூலதனம் ஆகியவற்றின் மேலாண்மைக்குப் புலன்சாரா மேலாண்மை (intangible management) சார்ந்த நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

1966 ஆம் ஆண்டில், லென் ராஜர்ஸ் (Len Rogers) என்பவர் தகவல் என்பதை நான்காவது காரணியாக முன்வைத்தார். நிலம், உழைப்பு, மூலதனம் முதலியவற்றை வைத்திருக்க முடியும் என்றும், ஆனால், பல மடங்காக அதிகரித்துவரும் தொழில்நுட்பச் சூழலில் செய்நுட்ப அறிவு (know how) ஒரு முக்கியமான காரணியென்றும் அவர் வாதிட்டார். அணுக்கருக் கருவிகளின் உற்பத்தியை அவர் நடப்பு எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பத்திக்_காரணிகள்&oldid=1989120" இலிருந்து மீள்விக்கப்பட்டது