தானியங்கி விற்பனை இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானியங்கி விற்பனை இயந்திரம் (vending machine) என்பது நடத்துனர் அல்லது உரிமையாளர் அருகில் இல்லாமலேயே, தேவையானப் பொருற்களை கொள்முதல் செய்துக்கொள்வதற்கான தானியங்கி இயந்திரமாகும். ஆரம்ப காலங்களில் இந்த "தானியங்கி விற்பனை இயந்திரம்" ஊடாக குளிர்பானம், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போன்றவற்றை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், தற்போது அநேகமான பொருற்களை இந்த தானியங்கி விற்பனை இயந்திரம் மூலம் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.

இவ்வியந்திரங்கள் பெரும்பாலும் கடைகள் இல்லாத இடங்களில்; மற்றும் பேருந்து, தொடருந்து, வங்கி, பாடசாலை, மருத்துவமனை, திரையரங்கு போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வியந்திரத்தின் ஊடாக மக்கள் தமக்கு தேவையான பொருட்களை எவரின் உதவியும் இன்றி, தாமாகவே தனக்கு தேவையான பொருளின் கீழ் உள்ள விலையின் மேல் அழுத்திவிட்டு, குறிப்பிட்டத் தொகையை அளித்தால், குறிப்பிட்ட பொருளை இந்த தானியங்கி விற்பனை இயந்திரம் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை தொடுகையுணர் செலுத்தல் ஊடாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஹொங்கொங்கில்[தொகு]

ஹொங்கொங்கில் இந்த தானியங்கி விற்பனை இயந்திரத்திற்கு ஒக்டோப்பஸ் செலவட்டை ஊடாக கட்டணத்தைச் செலுத்தலாம்.