காதரின் பூத் மருத்துவ மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதரின் பூத் மருத்துவ மனை (Catherine Booth Hospital - CBH, புத்தேரி ஆஸ்பத்திரி) என்பது, இரட்சணிய சேனை என்னும் கிறித்தவ தொண்டு நிறுவனத்தால், தமிழ்நாடு, நாகர்கோவில் நகரில் இயங்கி வரும் பொது சேவை மருத்துவ மனையாகும். இது இரட்சணிய சேனையின் நிறுவனர் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பூத் (1829-1912) (அவர்களின் மனைவியார் காதரின் பூத் (1829-1890) என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

இந்த மருத்துவமனை கன்னியாகுமரியில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள நாகர்கோவில் நகரத்தின், வடசேரி என்னுமிடத்தின் அருகிலுள்ள, புத்தேரியில் அமைந்துள்ளது.

இது 1895 ஆம் ஆண்டு மிஷனரி ஹாரி ஆண்ட்ரூஸ் என்பவரால் ஒரு சிறிய குளியலறையில் தொடங்கப்பட்டு, இன்று 300 படுக்கையறைகளுடன், மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப் பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை என எல்லாவித சிறப்பு பிரிவுகளுடன், சிறந்த பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மற்றும் தாதியர்களுடன் சேவை செய்து வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]