விக்கிப்பீடியா பேச்சு:வெளி இணைப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கொள்கை 25 அக்டோபர் 2010 அன்று இங்கு நடந்த உரையாடலின் விளைவாக உருவானது.--சோடாபாட்டில் 11:26, 25 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

வலைப்பதிவுக் கட்டுரை தரமாக இருந்தால் அதை இணைக்கலாம். தமிழில் வலைப்பதிவு அல்லாத இணைப்புக்களைப் பெறுவது கடினம். இது ஒரு பொருளாதாரப் புறச் சூழ்நிலை. --Natkeeran 04:16, 25 அக்டோபர் 2010 (UTC)

நற்கீரன், இங்கு பலர் அவர்கள் எழுதிய வலைப்பதிவுகளுக்கே இணைப்பு கொடுக்கிறார்கள். இதை அனுமதிப்பதும், ஊக்குவிப்பதும் சரியன்று (அவர் துறை சார் வல்லுனராக இருந்தாலும்). விக்கியின் வெளிப்புற இணைப்புக் கொள்கை விக்கியின் விமர்சகர்களால் கடுமையாகச் சாடப்படும் விஷயங்களில் ஒன்று. There is a vocal and serious complaint that wiki editors game the system to use external links to generate traffic to their personal websites. இதனால் தரமான கட்டுரையென்றாலும் அவரவர் சொந்தப் பதிவுக்கு வெளி இணைப்பு தரும் பழக்கத்தை தடுக்க வேண்டுமென்று கருதுகிறேன். இன்றைய தமிழ் வலைப்பதிவுலகிலும் பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்ட இந்த மாதிரி வேலைகளை பலர் செய்கிறார்கள். நாம் கொஞ்சம் இறுக்கமாக நடந்து கொள்வது தான் நல்லது. --சோடாபாட்டில் 04:51, 25 அக்டோபர் 2010 (UTC)

சோடா பாட்டில் கருத்தை ஆமோதிக்கிறேன். பலரும் அவர்கள் வலைப்பதிவுக்கு / தளத்துக்கு அவர்களே இணைப்பு தருகிறார்கள். இது நடுநிலை அல்ல. தரமான இணைப்பை அதற்குத் தொடர்பு இல்லாதவர் தந்தால் ஒப்பலாம்--இரவி 05:54, 25 அக்டோபர் 2010 (UTC)

ஆம், அதுதான் நல்லது. தொடக்க நாட்களில் (கிட்டத்தட்ட என் சொந்த ஆய்வுக்கு) வேறு சான்று கிடைக்காததால் பெர்ள் கட்டுரையில் என் வலைப்பதிவைச் சான்றாகக் காட்டியுள்ளேன். இதையும் மீளாய்வு செய்ய வேண்டும். சரியல்ல என்றால் நீக்கி விடலாம். -- சுந்தர் \பேச்சு 08:43, 25 அக்டோபர் 2010 (UTC)

தங்களுக்குத் தாமே இணைப்பு தரும் வேலையை நிறைய தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் வலைத்தளம் நடத்துபவர்களும் செய்கிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியாவின் நடுநிலைக்கும் தரத்துக்கும் உகந்தது அல்ல என்று தனிப்பட பேசும் போது சிலர் முறையிட்டுள்ளார்கள். எனவே, இது குறித்த விசயங்களை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தன்னுடைய தளத்துக்குத் தானே இணைப்பு தரக்கூடாது. தரமான இணைப்பாக இருந்தாலும், நன்கு அறியப்பட்ட பிற தமிழ் விக்கியர்கள் இணைப்பு தருவது நன்று என்பதனை ஒரு கொள்கை வழிகாட்டாக அறிவிக்கலாம்.--இரவி 10:54, 25 அக்டோபர் 2010 (UTC)

இங்கே இதற்கான கொள்கை வரைவுப் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறேன். இக்கொள்கையினை விரிவு படுத்த உதவுங்கள். ஓரளவு வளர்ந்தபின், யாருக்கும் மறுப்பில்லையெனில், கொள்கையாக ஏற்றுக் கொள்வோம்.--சோடாபாட்டில் 11:25, 25 அக்டோபர் 2010 (UTC)
சோடா பாட்டில் கருத்தை ஆமோதிக்கிறேன்.--Natkeeran 20:26, 25 அக்டோபர் 2010 (UTC)


நல்ல முயற்சி. பொதுவாக எனக்கும் ஒப்புதலான கருத்துகளே. --செல்வா 00:25, 26 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
யூடியூப்பில் காப்புரிமைச் சிக்களை கையாளுகிறார்கள். எனவே நாம் அதில் எவை காப்புரிமை மீறப்பட்டவை என்று தீர்மானிக்க முடியாது. எனவே அது தவறான எடுத்துக் காட்டு. --Natkeeran 00:45, 26 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நீங்கள் சொவது மிகவும் சரி. நான் தமிழ்த்திரைப்பட பாடல்கள்/துண்டுகளை மட்டும் கருத்தில் கொண்டு பொதுவாக அப்படி சேர்த்து விட்டேன். இப்போது அந்த எ. காட்டை நீக்கி விட்டேன். --சோடாபாட்டில் 03:52, 26 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள், உசாத்துணைகளில் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்த்தல்[தொகு]

மேற்கோள்கள், உசாத்துணைகள் போன்ற கட்டுரையின் இதர பகுதிகளிலும் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்த்தலை ஒரு கொள்கையாக ஆக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, ஒரு புத்தக்கத்தை மேற்கோளாகத் தருவது என்றால் அதன் பெயர், ISBN விவரங்கள் தந்தால் போதும். அதனை விற்கும் தளத்துக்கு இணைப்பு தர வேண்டியதில்லை. தற்போது இவ்வாறு பல கட்டுரைகள் உள்ளதால் துப்புரவு செய்ய வேண்டி உள்ளது.--இரவி (பேச்சு) 11:05, 8 ஏப்ரல் 2014 (UTC)

மாற்றுக் கருத்து ஏதும் இல்லையெனில், இன்னும் ஒரு வார காலத்தில் இச்சேர்க்கை கொள்கைப் பக்கத்தில் இடம்பெறும். நன்றி.--இரவி (பேச்சு) 11:03, 13 ஏப்ரல் 2014 (UTC)
வணிக வெளி இணைப்புகள் என்பவை எவை. கூகிளின் பல சேவைகளுக்கும் வெளி இணைப்புகள் தரப்பட்டால் அவை வணிக இணைப்புகளா? ஒரு நூலைப் பற்றி வெளியிட்ட நிறுவனத்தின் தகவல் தளத்துக்கு இணைப்புத் தருவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. ஆங்கில விக்கியில் இப்படிச் செய்யப்படுகிறது. எ.கா en:Decision Points. --Natkeeran (பேச்சு) 18:20, 13 ஏப்ரல் 2014 (UTC)

// வணிக வெளி இணைப்புகள் என்பவை எவை. கூகிளின் பல சேவைகளுக்கும் வெளி இணைப்புகள் தரப்பட்டால் அவை வணிக இணைப்புகளா?//

இது பற்றி விக்கிப்பீடியா பேச்சு:வணிக இணைப்புகள் கண்காணிப்பு பக்கத்தில் விரிவாக உரையாடியுள்ளோமே?

//ஒரு நூலைப் பற்றி வெளியிட்ட நிறுவனத்தின் தகவல் தளத்துக்கு இணைப்புத் தருவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே//

ஒரு நூலைப் பற்றிய கட்டுரையில், அதன் பதிப்பாளர் பெயர் தகவல் பெட்டியில் குறிப்பிடப்படுகிறது. நூலுக்கு என்று அலுவல் முறை இணையத்தளம் இருந்தால் அதனையும் வெளியிணைப்பாகத் தரலாம். அத்தளத்தில் நூல் விற்றாலும் பரவாயில்லை.

ஆனால், கட்டுரையில் உள்ள தகவலைக் காட்டிலும் வேறு எந்தக் கூடுதல் தகவலையும் தராத பதிப்பாளரின் தளத்துக்கு வெளியிணைப்பு தரத் தேவையில்லை. குறிப்பாக, அது நூலை விற்கும் பக்கமாகவும் இருந்தால் வணிக நோக்காக காண இயலும். தமிழ்ச்சூழலில், பல எழுத்தாளர்கள் / பங்களிப்பாளர் தங்கள் நூல்களின் விற்பனைத் தளங்களுக்குத் தாங்களே இணைப்பு தரும் நலமுரணையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனினும், இந்த உரையாடல் மேற்கோள் / உசாத்துணை / ஆதாரம் பகுதியில் வணிகத் தளத்துக்கு இணைப்பு தருவதை பற்றி மட்டுமே பேசுகிறது. அங்கு அந்த ஆதாரத்தை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய தரவை மட்டும் தந்தால் போதுமானது. வெளியிணைப்பு தரத் தேவையில்லை. இது நூல்கள் அவை போன்றவற்றின் முதன்மைக் கட்டுரைகளைப் பற்றிப் பேசவில்லை. ஒரு கருத்துருவாக்கத்தினைப் பற்றிய கட்டுரையிலும் தரப்படும் ஆதாரங்களைப் பற்றி பேசுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 20:08, 13 ஏப்ரல் 2014 (UTC)

விளங்கவில்லை. ஒரு நூலுக்கு தனியே ஒரு தளம் இருந்தால் வெளி இணைப்பு இருந்தால் இணைப்புத் தாருங்கள். ஆனால், தகவல் பக்கங்களுக்கு தரவேண்டாம். தமிழ்ச் சூழலில், பெரும்பான்மையாக, ஏன், எந்த நூலுக்கும் கூட தனி வலைத்தளம் அமைக்கப்படுவதில்லை. வெளியீட்டாளர் தகவல் பக்கத்துக்கு வெளி இணைப்புத் தருவதில் என்ன சிக்கல்? எப்படி ஒரு product பற்றிய கட்டுரையில் அதன் அல்லது அது பற்றியதன் வலைத்தளதுக்கு வெளி இணைப்புத் தருகிறோமோ, அது போலவே அந்தப் product நூலாக இருக்கும் போது அது பற்றிய வணிக தளப்பக்கத்துக்கு இணைப்புத் தரலாம் என்று கூறுவது consistent/ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையாக இருக்கும் அல்லவா. மேலே சுட்ட்பட்ட எனது எடுத்துக்காட்டில் Amazon.com's book reviews and description என்பதற்கான இணைப்புத் தரப்பட்டு இருப்பதையும் பார்க்கவும். --Natkeeran (பேச்சு) 20:28, 13 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன்,

https://en.wikipedia.org/wiki/Wikipedia:External_links#Links_normally_to_be_avoided கூறுவது

1. Any site that does not provide a unique resource beyond what the article would contain if it became a featured article.

கூறுவது போல் அப்படி சிறப்பான தகவல் எதையும் நூல் விற்பனைத் தளங்கள் தருவதாகத் தெரியவில்லை.

அதுவே, ஒரு iPad Tablet பற்றிய கட்டுரையில் அதன் அலுவல்முறைத்தளத்துக்குத் தரும் இணைப்பு கூடுதல் தகவலைத் தர முடியும். (iPad Tabletகளை விற்கும் பிற மின்வணிகத்தளங்களுக்குத் தரும் இணைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா)

நிற்க.

நாம் இங்கு மேற்கோள் பகுதியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

எடுத்துக்காட்டுக்கு,

கனமூலம் கட்டுரையில் தற்போது உள்ள மேற்கோள் பகுதியைப் பாருங்கள். அங்கு நூலின் விவரம், ISBN எண் உள்ளது. நூலைப் பற்றின விவரங்களை உறுதி செய்ய அதுவே போதுமானது. அந்த இடத்தில் Flipkart நூல் விற்பனைத் தளத்துக்கான இணைப்பு தேவையற்றது. நூலைப் பெற விரும்புவோர், மேல் விவரங்களைப் பெற விரும்புவோர் கூகுளில் தேடினால் இலகுவாக கிடைக்கும். அங்கு Flipkart உட்பட இன்னும் பல தளங்கள் வரலாம். ஆனால், ஒரே ஒரு அல்லது ஒரு சில தளங்களுக்கு மட்டும் விக்கியில் இருந்து இணைப்பு தரும் போது:

  • அது அவற்றுக்கு ஒரு இலவசம விளம்பரம் போன்று செயல்படுகிறது. இதன் affiliate பெறுமதி கணிசமானது.
  • குறிப்பிட்ட தளங்களுக்கு விக்கியில் இருந்து SEO இலாபம் கிடைக்கிறது.

இவற்றைத் தவிர்ப்பதற்கே வணிக வெளியிணைப்புகள் வேண்டாம் என்று கோருகிறோம்.

ஆங்கில விக்கிப்பீடியாவில் அமேசான் உட்பட இன்னும் பல வணிகத் தளங்களின் இணைப்புகள் பொருத்தமற்ற இடங்களில் உள்ளன. இது அங்கு இன்னும் நிறைய துப்புரவு தேவைப்படுகிறது என்பதையே சுட்டுகிறது. அவர்களின் கொள்கை தெளிவாகவே உள்ளது. ஆனால், எல்லா இடங்களிலும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. --இரவி (பேச்சு) 20:37, 13 ஏப்ரல் 2014 (UTC)

மேலதிக தகவல்களை, விரிவான தகவல்களைக் கொண்ட பக்கங்களுக்கு வெளி இணைப்புக்களைத் தரலாம். அவை ஒரு வணிகத்தின் பக்கங்களாகக் கூட இருக்கலாம். அப்படி எடுத்துக் கொள்ளலாமா?--Natkeeran (பேச்சு) 20:51, 13 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், வெளியிணைப்புகள் குறித்த கொள்கை ஏற்கனவே தெளிவாகவே உள்ளது. அதையும் மேற்கோள்கள் பகுதியில் வரும் இணைப்புகளையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கனமூலம் கட்டுரையை மட்டும் காணுங்கள். அங்கு Flipkart இணைப்பு அவசியமா என்று பதில் கூறுங்கள். அந்தப் பதிலுக்கான கேள்வியே இந்த உரையாடல்.--இரவி (பேச்சு) 21:28, 13 ஏப்ரல் 2014 (UTC)

உங்கள் கூற்று விளங்கவில்லை. அந்த எடுத்துக்காட்டு இப்போது இருக்கும் விதிகளுக்கு ஏற்பவே நீக்கப்படலாம். ஆகவே என்ன மாற்றம் தேவை என்று நீங்கள் கேக்கிறீர்கள் என்று விளங்கவில்லை?--Natkeeran (பேச்சு) 21:33, 13 ஏப்ரல் 2014 (UTC)

வெளி இணைப்புகள் குறித்த இக்கொள்கைப் பக்கம் கட்டுரையின் இறுதியில் பட்டியலாகத் தரப்படும் வெளியிணைப்புகளைப் பற்றியே பேசுகிறது. மேற்கோள்கள் / ஆதாரங்கள் / உசாத்துணைகள் பகுதியில் வரும் இணைப்புகளை எப்படி அணுகுவது என்று தெளிவாக இல்லை (குறைந்தபட்சம் எனக்கு). எனவே தான், அதனையும் தெளிவாகச் சேர்க்க கோருகிறேன். குழப்பத்துக்கு வருந்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 21:36, 13 ஏப்ரல் 2014 (UTC)

பொதுவாக இவற்றையே மேற்கோள்கள் / ஆதாரங்கள் / உசாத்துணைகள் ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. "வணிக நோக்கு" என்பது வணிகப் பக்கங்கள் என்பதிலும் சிறிய, முக்கியமான வேறுபாடு உண்டு. நன்றி. --Natkeeran (பேச்சு) 21:44, 13 ஏப்ரல் 2014 (UTC)


மேற்கண்ட உரையாடலுக்கு இணங்க கொள்கை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.--இரவி (பேச்சு) 10:46, 21 ஏப்ரல் 2014 (UTC)

வலைப்பதிவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுகோள்[தொகு]

தரமான தரமில்லாத வலைபூக்கள்னு வகைப்படுத்துவது கடினம். அதே போல் இந்த விதியையும் கவனிக்கவும். இவர் ஒருவர்னு இல்லை. சமீபகாலமாக அரசர்களை தங்கள் சாதி என அடையாளப்ப்டுத்தும் வெளியிணைப்புகள் பல இணைக்கப்படுகின்றன. அவர்களிடமும் இதே நடைமுறை தான் வைக்கப்படுகிறது. மேற்கோள்களுக்கு வெளியிணைப்புகளை கொடுப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது.

//ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.//--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:25, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஆதாய முரண் (Conflict of Interest) என்பதை விக்கிக்கு வெளியிலும் பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஆய்வாளரை வைத்து நான் எனக்குத் தோன்றுவதை எழுதச் சொல்லிவிட்டு அதை இங்கு இணைத்து இதோ பாருங்கப்பா ஆதாரம்னு வச்சா என்ன பண்ணுவீங்க?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:30, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

விதிவிலக்கு[தொகு]

சில ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்களில் தன் ஆய்வுகளை வெளியிட்டு அதன் நகலை வலைபூக்களில் தருவார்கள். அதன் இணைப்புகள் மட்டும் அனுமதிக்கபடுவதில் சிக்கல் இல்லை. எடுத்துக்காட்டுக்கு பேச்சு:ஹாத்திகும்பா கல்வெட்டு--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:39, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]