தி. பால்
தி. பால் (பிறப்பு: மே 9 1932) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'திருகு' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்[தொகு]
- "பேய்களின் திருவிளையாடல்கள்" (சிறுகதைகள் - 1989);
- "ஒரு பயணத்தில் சில தப்புகள்" (கதம்பம் - 1994)
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் தி. பால் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம்