முட்டையுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முட்டையுரு (Oval) என்பது முட்டையின் தோற்றத்தை ஒத்த வளைந்த தளவுருவாகும்.[1] முட்டையுருவினுடைய முப்பரிமாண வடிவம் முட்டை வடிவப் பொருள் என அழைக்கப்படும்.[2]

வடிவியலில் முட்டையுரு[தொகு]

வடிவியலில், சில வளையிகளைக் குறிப்பிடுவதற்கு முட்டையுரு எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. முட்டையை ஒத்த வளையி முட்டையுரு என அழைக்கப்படும்.

வடிவியலில் முட்டையுரு பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

  • காசினி முட்டையுரு
  • கார்த்தீசியன் முட்டையுரு

தொழினுட்ப வரைதல்[தொகு]

தொழினுட்ப வரைதலில் முட்டையுருவை வரைதல்

தொழினுட்ப வரைதலில் படத்திலுள்ளவாறு முட்டையுரு வரையப்படும்.

ஆங்கிலத்தில்[தொகு]

முட்டையுரு என்பதன் ஆங்கிலச் சொல்லான Oval என்பது இருபரிமாணத்திலோ முப்பரிமாணத்திலோ உள்ள முட்டையைப் போல் உள்ள உருவத்தை அல்லது நீள்வட்டத்தைக் குறிக்கிறது.[3] சில இடங்களிற்செவ்வகம் ஒன்றினால் இணைக்கப்பட்ட ஈரரை வட்டங்களைக் குறிக்கவும் Oval என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டையுரு&oldid=2223387" இலிருந்து மீள்விக்கப்பட்டது