விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு49

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிமீடியா நூல்[தொகு]

நான் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலை சென்னை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது. தற்போது விக்கிமீடியா எனும் தலைப்பில் விக்கிமீடியா திட்டங்களான விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கி செய்திகள், விக்கிப் பல்கலைக்கழகம், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி நூல்கள், விக்கி இனங்கள், விக்கி பொது, மேல் விக்கி போன்றவை குறித்தும், இதில் பங்களிப்பது குறித்தும் ஒரு நூலை எழுதி வருகிறேன். இந்த நூல் இந்த மாத இறுதிக்குள் எழுதி முடிக்கப்பட்டு அச்சுக்குச் செல்லவுள்ளது. இதை சென்னை கௌதம் பதிப்பகம் வெளியிடவுள்ளது. இதில் அவசியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிற முக்கியத் தகவல்கள் ஏதுமிருப்பின் தெரிவிக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:30, 8 மார்ச் 2011 (UTC)

நல்ல முயற்சி! விக்கி இயக்கம் பற்றி விரிவாக எழுதலாம். பரப்புரை (outreach),strategy wiki மற்றும் மீடியாவிக்கி தொழில்நுட்பம்(மொழி நுட்பங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்) பற்றியும் விரிவாக எழுதலாம்.விரைவில் உங்களுக்கு விரிவாக ஒர் மின்னஞ்சல் அனுப்புகிறேன். முயற்சி வெற்றி பெர வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த் 04:25, 9 மார்ச் 2011 (UTC)
  • இந்த நூல் தமிழில் எழுதப்பட்டாலும் பொதுவாக விக்கிமீடியா இயக்கம் குறித்ததாகத்தான் இருக்கிறது. மீடியாவிக்கி தொழில்நுட்பம் குறித்து இதுவரை நான் ஏதும் சேர்க்கவில்லை. தங்களுடைய மின்னஞ்சலில் முழுமையான தகவலை எதிர்நோக்குகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 05:20, 9 மார்ச் 2011 (UTC)


விக்கியூடகங்கள் என்று தமிழில் வழங்கும். மீடியாவிக்கி என்ற கட்டற்ற மென்பொருளை அடிப்படையாகக் கொண்டே இதன் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழில் இதனை வேறு பல திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். தமிழில் உள்ளடக்கத்தை, கூட்டாக, கட்டற்ற உரிமத்தோடு உருவாக்குவதே இந்தத் திட்டங்களின் பொது இலக்காக இருக்கிறது. விக்கிப்பொதுமத்தில் நாம் படங்கள் மட்டுமல்லாமல், ஒலி, ஒளிக் கோப்புக்களையும் சேர்க்கலாம். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற உள்ளடக்கம், கூட்டாக்கம், கூட்டு மதிநுட்பம், இணக்க முடிவு, விக்கிச் சமூகம், பரவல்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு (decentralized co-ordination) போன்ற பின்புலத் தத்துவங்களையும் விளக்கினாலும் நன்று. --Natkeeran 14:39, 9 மார்ச் 2011 (UTC)

பத்தாவது தமிழ் இணைய மாநாடு[தொகு]

பத்தாவது தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ள உத்தமம் அமைப்பால் அழைப்பு விடப்பட்டுள்ளது. இதில் விக்கிப்பீடியா குறித்தும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும். http://www.tamilinternetconference.org/ta --சூர்ய பிரகாசு.ச.அ. 12:53, 8 மார்ச் 2011 (UTC)

அவர்களின் வலைத்தளத்தை தமிழில் செய்வது எப்படி என்று முதல் கட்டுரையைச் சமர்ப்பிக்கலாம் :-) ஒரே ஒரு பக்கத்தைத் தவிர மற்றது எல்லாம் ஆங்கிலம். எ.கா http://www.tamilinternetconference.org/ta/news, http://www.tamilinternetconference.org/ta/user/register, சோம்போறித்தனம்.--−முன்நிற்கும் கருத்து 216.123.169.252 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உத்தமமும் ஒரு தன்னார்வ அமைப்பே. அதில் பல தமிழ் விக்கிப்பீடியர்களும் கூட முக்கியப் பங்களிப்புகளை நல்கி வருகின்றனர். பொதுவாக, எந்த ஒரு பிற அமைப்பை பற்றிய விமர்சனத்தையும் இங்கு வைப்பது விக்கிப்பீடியாவின் நலன்களுக்கு உகந்ததாக இருக்காது. நன்றி--இரவி 17:53, 8 மார்ச் 2011 (UTC)

  • இரவி குறிப்பிடுவது போல் பிற அமைப்பு குறித்த விமர்சனங்களை இங்கு பகிர்ந்து கொள்வது தேவையற்றது. இருப்பினும் அடையாளம் காட்டிக் கொள்ளாத பயனரின் கருத்திலும் உண்மையுள்ளது. தன்னார்வ அமைப்பான உத்தமம், தமிழுக்காக உள்ள அமைப்பு. இந்த அமைப்பு இனியாவது தமிழை முதன்மையாக வைத்துக் கொண்டு பிற மொழிகளைத் துணையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடையாளம் காட்டாத பயனர் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:24, 9 மார்ச் 2011 (UTC)

உதவி[தொகு]

ஒரு புதிய பயனர் - பயனர்:Yasir.arafa - உருவாக்கும் கட்டுரைகளில் பெயர்/கையொப்பம் சேர்த்து வருகிறார். சில முறை சொல்லி விட்டேன், கையெழுத்திடுவதை நீக்கியும் பார்த்து விட்டேன். கேட்பது போல் தெரியவில்லை வேறு யாராவது கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:25, 8 மார்ச் 2011 (UTC)

செயற்கை அறிவாண்மை[தொகு]

பரிந்துரை தேவை:

  • Artificial Intelligence
  • செயற்கை அறிவாண்மை
  • செயற்கை அறிவாற்றல்
  • செயற்கை நுண்ணறிவு

--Natkeeran 00:24, 9 மார்ச் 2011 (UTC)

முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியை நீக்குவது தொடர்பான கருத்துக்கணிப்பு[தொகு]

பரணுக்கு நகர்த்தப்பட்டுள்ளது -- மாகிர் 10:07, 22 மார்ச் 2011 (UTC)

சேலம் மாவட்ட வார்ப்புரு[தொகு]

சேலம் மாவட்ட வார்ப்புருவை சரி பார்க்க சூரிய பிரகாசு & த.உழவனை அழைக்கிறேன். --குறும்பன் 19:16, 10 மார்ச் 2011 (UTC)

அழைப்பைப் பார்த்தேன். ஏற்றேன்...' --சூர்ய பிரகாசு.ச.அ. 10:11, 11 மார்ச் 2011 (UTC)

விக்கிப்பீடியாவில் இந்தியின் வளர்ச்சி[தொகு]

டிசம்பர் 31, 2010 ல் இந்தியில் 58,055 கட்டுரைகள் இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை 80,000 த்தை தொட்டுள்ளது. மூன்று மாதங்களில் எவ்வாறு இது சாத்தியமாயிற்று. அவர்கள் எண்ணிக்கையை கூட்ட எப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் :வின்சு 04:00, 11 மார்ச் 2011 (UTC)

இந்தி விக்கிப்பீடியாவில் பங்காளிப்பாளர்கள் மிகக் குறைவு. தொடர் பங்காளிப்பாளர் 10-15 பேர் தான் உள்ளனர் என நினைக்கிறேன். இந்த எண்ணிகை அதிகரிப்பு கூகுள் மொழிபெயர்ப்பு திட்டத்தினாலும், தானியங்கி குறுங்கட்டுரை உருவாக்கத்தாலும் வந்துள்ளது. (கூகுளைக் கேட்க ஆளில்லாததால் கன்னடத்திலும், இந்தியிலும் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்). இதே வேகத்தில் போனால் வெகு சீக்கிரம் பிஷ்ணுபிரியா மணிப்புரி விக்கிப்பீடியாவின் கதி அவர்களுக்கு நேரும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:55, 11 மார்ச் 2011 (UTC)
இந்தி விக்கியில் அதிக புதுப் பயனர்கள் சேருகிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக பங்களிப்பது சிறிய தொகையினரே. சோடா சுட்டிய காரணங்களே என்று நினைக்கிறன். ஆனால் கூகிளின் இந்தி மொழி பெயர்ப்பின் தரம் பற்றித் தெரியவில்லை, சற்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கலாம் என்று நினைக்கிறன். ஆனால் தரதுக்கு ஆப்பு வைத்தால், பின்னர் சரி செய்வது மிகக் கடினமாக இருக்கும். --Natkeeran 05:05, 11 மார்ச் 2011 (UTC)

தமிழின் தரம் 31 என்று காட்டுகின்றது. ஆனால் இந்திய விக்கியில் மலையாளம் மிக அதிக தரத்துடன் உள்ளதாக நினைக்கிறேன். தரம் எந்த காரணங்களைக் கொண்டு நிர்னயிக்கப்படுகின்றது. தரத்தை கூட்ட என்ன செய்ய வேண்டும். :வின்சு 05:13, 11 மார்ச் 2011 (UTC)

  • பார்க்க: http://meta.wikimedia.org/wiki/Depth
  • என்னைப் பொறுத்த வரையில் தொகுப்பு எண்ணிக்கை, பங்களிப்பாளர் எண்ணிக்கை (Active Users), கட்டுரைகளின் தரம் (ஆழம், அகலம்) ஆகியவை முக்கியம். 30 000 ஐக்கிய அமெரிக்க நாட்டு ஊர்கள் பற்றிய கட்டுரைகளை ஓரு நாளில் உருவாக்கி எண்ணிக்கையை, அளவை, depth கூட்டலாம், ஆனால் அது உண்மையான பொருத்தமான வளர்ச்சி இல்லை. --Natkeeran 05:17, 11 மார்ச் 2011 (UTC)


தரம் என்பது depth என்பதைக் குறிகிறது. அதன் வாய்ப்பாட்டில் முக்கிய காரணிகள் ஒரு கட்டுரை எத்தனை முறை தொகுக்கப்படுகிறது, எத்தனை பேரால் தொகுக்கப்படுகிறது, கட்டுரைகள்ளாத தொகுப்புகளின் எண்ணிக்கை. இதில் முதல் இரண்டும் நாம் முன்னேறுவது மிகக் கடினம் - நம்முள் பலர் (என்னையும் சேர்த்துத் தான்) ஒரே அடியாக முழுக்கட்டுரை /அல்லது கட்டுரையின் பகுதியினை உருவாக்குகிறோம். offline இல் உருவாக்கி ஒரே சேமிப்பில் முழுக்கட்டுரையை ஏற்றுபவர்களும் உள்ளனர். மேலும் பலரும் அவரவர் விருப்பமான மூலையில் வேலை செய்கிறோம். intersection மிகக் குறைவு. மலையாளத்தில் கூட்டு முயற்சிகள் அதிகம் - ஒரே கட்டுரையை பலர் சேர்ந்து உருவாக்குகிறார்கள் மேலும் சிறிது சிறிதாக உருவாக்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த தரம்/depth என்பது ஒரு குறைபாடுள்ள அளவுகோல். இதைப்பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம் :-).
மேலும் நமது தனிப்பட்ட செயல்பாட்டிலும் பல நன்மைகள் உள்ளன. தமிழ் விக்கியில் விசயங்களின் வீச்சு மிகப் பரந்தது. பல துறைகளில் நம்மிடம் பல கட்டுரைகள் உள்ளன. பல விக்கிகளில் பொழுதுபோக்கு / நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளே அதிகமாக இருக்கும். இங்கு நாம் நமக்கு தனியாக விருப்பப்பட்ட ஓரத்தில் வேலை செய்வதால் தமிழ் விக்கியின் வீச்சு அகன்றுள்ளது--சோடாபாட்டில்உரையாடுக 05:25, 11 மார்ச் 2011 (UTC)

வியக்க வைக்கும் சிலம்பம் - நிகழ்படங்கள்[தொகு]

--Natkeeran 03:53, 13 மார்ச் 2011 (UTC)

என் கணினியில் மட்டுமா...இல்லை...![தொகு]

அனைத்துப் பக்கங்களிலும் கீழ்காணும் படியான முகவரி.............கட்டுரைத் தலைப்பு(?)மீள்விக்கப்பட்டது என்று இருக்கிறதே...

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81" இருந்து மீள்விக்கப்பட்டது.


இது என் கணினியில் மட்டுமா? இல்லை வேறு கணினியிலுமுள்ளதா...? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:28, 13 மார்ச் 2011 (UTC)

எனக்கு நன்றாகத் தானே தெரிகிறது. ஒரு screenshot எடுத்துப் போடுங்களேன். என்ன பிரச்சனை என்று ஆராய்கிறென்.--சோடாபாட்டில்உரையாடுக 09:33, 13 மார்ச் 2011 (UTC)
220pxl
  • தாங்கள் தெரிவித்தபடி இத்துடன் அதற்கான படம் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் சிகப்பு நிறக் குறியிட்டுக் காண்பித்துள்ளேன். கவனிக்கவும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:13, 13 மார்ச் 2011 (UTC)
ஆங்கில விக்கிப்பீடியாவிற்குப் போய்ப் பார்த்தேன். பிற இணையதளங்களுக்கும் சென்று பார்த்தேன் எந்தப் பிரச்சனையுமில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும்தான் இந்தப் பிரச்சனை... இரண்டு மணி நேர மின்தடைக்குப் பின்பு கணினியை இயக்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தப் பிரச்சனை போயே போச்சு...! அப்பாடா! நிம்மதியாப் போச்சு!!--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:41, 13 மார்ச் 2011 (UTC)
:-). இந்த வாசகம் வழக்கமாக விக்கிப்பீடியாவின் mirror sites இல் தான் வரும். ஏன் இங்கு வந்தது என்று மர்மமாக உள்ளது. அடுத்த முறை வந்தால் சொல்லுங்கள் மேலும் சோதனை செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:21, 13 மார்ச் 2011 (UTC)

சிறுவர் நாள் விக்கிப்பீடியா/நூலகம்/தமிழ்க் கணிமை booth & போட்டியும்[தொகு]

வரும் சனிக்கிழமை மார்ச் 19, 2011 அன்று தமிழ் சிறுவர் நாள் ஒன்று இங்குள்ள தமிழ் பாடசாலைகள் (அறிவகம் - http://www.arivakam.org/) மற்றும் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்படுகிறது. அன்று ஆயிரக் கணக்கான மாணவர்கள், சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எதிர் பார்க்கப்படுகிறார்கள். இது சற்று "கோளிக்கை" நோக்கிலான ஒர் ஏற்பாடே. எனினும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். தமிழ் விக்கிப்பீடியா/நூலகம்/தமிழ்க் கணிமை ஆகியவற்றுக்கு ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. முடிந்தால் நாம் போட்டிகள் சிலவற்றை ஒழுங்கு படுத்தினாலும் சிறப்பாக இருக்கும்.

வகையான வயதினர்: 5 கீழே, 9 கீழே, 13 கீழே, 17 கீழே, 17 மேலே எனப் பிரிக்கலாம். (Tentative)

இரண்டு வகையான போட்டிகள்:

  • பொது அறிவுப் போட்டி: ஐந்து கேள்விகளுக்குப் பதில் செல்ல வேண்டும்?
  • சொற் களப் போட்டி: ஐந்து சொற்களுக்கு ஆங்கிலம் -> தமிழ் அல்லது தமிழ்

-> ஆங்கிலம் இணைச் சொல் தர வேண்டும்.

இதற்கு குறைந்தது ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் 10 கணக் (sets of) கேள்விகள் வேண்டும், ஐம்பது கேள்விகள். 250 மொத்தக் கேள்விகள். இன்னும் அதிகமாக எடுக்க முடிந்தால் அதுவும் நல்லது.

பரிசுகளாக பஞ்சுப் மொம்மைகளை வழங்கலாம்! 100 பரிசுகள்.

இதில் வயதெல்லைப் படி கேள்விகள் உருவாக்குவதே பெரும் பணியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து தொடரலாம். அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.

Sample Questions: http://ta.wikipedia.org/wiki/WP:GKQuestions

--Natkeeran 20:58, 13 மார்ச் 2011 (UTC)

சிறப்பான நிகழ்ச்சி ! இதனைப் விக்கிப்பக்கம் போன்ற பொதுவெளியில் உருவாக்கினால் போட்டியாளர்களுக்கு விடை காண்பது எளிதாயிற்றே ! மின்னஞ்சல் பட்டியல்களில் தயார் செய்யலாம். தவிர, அவர்கள் நினைவிலிருந்து பதில் கூற இயலுமாறு அமையாமல் தமிழ் விக்கிப்பக்கங்களை பயன்படுத்தி விடை காணுமாறு அமைத்தால் சிறப்பாக இருக்கும். --மணியன் 03:56, 14 மார்ச் 2011 (UTC)
விடையை இனித் தராமல், கேள்விகளைத் தொகுக்கலாம். விக்கி வெளியே தொகுப்பதில் சிரமங்கள் உள்ளன. பெரும்பாலான மாணவர்கள் முதல் முறை இதைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும். --Natkeeran 01:48, 15 மார்ச் 2011 (UTC)

படிமம்[தொகு]

kollywoodtoday.com என்ற தளத்தில் இருந்து படிமங்களை பயன்படுத்தலாம். படிமத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது மற்றும் அவர்கள் தளத்தின் பெயரை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற பகுதியில் குறிப்பிட வேண்டும். நிறைய படங்களில் kollywoodtoday.com என்பது watermark ஆகியுள்ளது. மாற்றம் செய்யக்கூடாது என்பதால் அதனை நீக்க கூடாதல்லவா? அவர்களின் watermark உடன் படிமங்களை தரவேற்றலாமா?? watermark இல்லைன்னா சிக்கலே இல்லை. --குறும்பன் 15:36, 14 மார்ச் 2011 (UTC)

என்ன உரிமமாக இருந்தாலும் பெயர் அச்சிட்ட படங்களைத் தவிர்க்கலாம்-இரவி 09:31, 15 மார்ச் 2011 (UTC)

மேற்கோள்களுடன் ஒரிரு வரிக் கட்டுரைகள்[தொகு]

ஆங்கில விக்கியில் மேற்கோள்களுடன் ஓரிரு வரிகளில்கூட கட்டுரைகள் தொடங்கிவிடுகிறார்கள். குறிப்பாக அரசியல்வாதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய கட்டுரைகள். இந்தக் கட்டுரையைப் பாருங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் என்பவர் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்தவர் மற்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் அரசுத்தளங்களில் கிடைக்கிறது. இவற்றை ஏன் ஓரிரு வரிகளாக இருந்தால் தவியில் பதிவேற்றக்கூடாது. இதுபோன்று மேற்கோள்களுடன் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களையும் ஆங்கில விக்கியிலிருந்து உருவாக்கலாமா? மேற்கோள்களுடன் இருப்பதால் ஓரிரு வரி என்று நீக்கிவிடக்கூடாதே என்பதால் கேட்கிறேன். -- மாகிர் 15:43, 14 மார்ச் 2011 (UTC)

ஓரு வரிக் கட்டுரைகளை ஏற்ற விட்டால் எ.கா: வெறுமனே தலைப்பு விளக்கம் : X ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். short stub creation கலாச்சாரம் த. விக்கிக்கு வந்து விடும். இந்த பழக்கம் தொற்றிய எந்த சின்ன விக்கியும் சீக்கிரம் தேங்கி நின்று விடுகிறது. இது பல முறை பல விக்கிகளில் (எ.கா, மணிப்புரி, மராத்தி, தெலுங்கு) நிரூபணம் ஆகி உள்ளது. குறைந்த பட்சம் நான்கு-ஐந்து வரிகளாக இல்லாமல் கட்டுரைகளை உருவாக்க வேண்டாம் என்ற விதி, த. விக்கியில் 1,00,000 கட்டுரைகள் வரும் வரையாவது இருக்கக் வேண்டும். ஆங்கில விக்கிக்கு இது ஒரு பொருட்டல்ல, நமக்கு இது unaffordable --சோடாபாட்டில்உரையாடுக 16:15, 14 மார்ச் 2011 (UTC)

தமிழ்நாட்டில் தமிழ்[தொகு]

'தமிழைப் படித்துவிடாதீர்கள்!' - நொந்தவர்கள் சொல்கிறார்கள்...

கற்றது தமிழ் படத்தில் வந்த அதே புலம்பல் இங்கும். பொதுவாக இலக்கியம் படித்தவர்களுக்கே இப்போது இது தான் கதி (ஆங்கிலம், இந்தி எதற்கும் விதி விலக்கல்ல). தமிழ் இலக்கியம் படித்தால், அரசு பள்ளியில் வாத்தியாராகத் தான் போக வேண்டுமென்பது ஏதோ எழுதப்படாத விதி போல. சுத்த சோம்பேறித்தனம். இங்கு அச்சு மற்றும் மின் ஊடகத் துறையில் நன்றாகத் தமிழ் எழுதப் பேசத் தெரிந்தவர்களுக்குப் பற்றாகுறை உண்டு; இன்னொரு மொழி தெரிந்திருந்தால் மொழிபெயர்ப்பாளராகப் போவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் விடுத்து தமிழ் படித்தேன், வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல். தமிழை ஒழிக்க தமிழாசிரியர்களே போதுமென்பதற்கு இது ஒரு சான்று. “அரசு ஆசிரியர் பணி” மீதுள்ள மோகம் கொஞ்சமும் குறையாததால் இந்த அவல நிலை.--சோடாபாட்டில்உரையாடுக 04:52, 15 மார்ச் 2011 (UTC)
  • தமிழ் இலக்கியம் படித்தவர்களும், வரலாறு படித்தவர்களும் ஆசிரியர் வேலைக்கு அலைய வேண்டியிருக்கிறது என்பது உண்மை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராகச் சேர்ந்து விட்டவர் அடுத்து தொலைநிலைக் கல்வியில் தமிழ் அல்லது வரலாறு பாடமெடுத்து படிக்கிறார். அடுத்து கல்வியியல் பாடத்தையும் தொலைநிலைக் கல்வியில் முடித்து விடுகிறார். தமிழ் அல்லது வரலாறு பட்டதாரி ஆசிரியர் இடம் காலியாகும் நிலையில் அந்த இடம் அவருக்கே உறுதியாகிறது. இந்த சூழ்நிலையிலும் பல இடங்கள் தமிழ் அல்லது வரலாறு பாடம் எடுத்துப் படித்தவர்களுக்கு பறிபோகிறது. சோடாபாட்டிலின் அச்சு மற்றும் மின் ஊடகத்துறையில் தமிழ் நன்கு தெரிந்தவர்கள் தேவை என்ற கருத்து ஓரளவு உண்மைதான் என்றாலும் அவர்களும் ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும், தமிழில் முனைவர் பட்டம் வாங்கியிருக்க வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகளை விதிப்பது அவர்களுக்குப் பயனில்லாமல்தான் போகிறது. மேலும் அவர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்குப் போக விரும்பினாலும் நீங்க தமிழா? உங்களுக்கு ஒன்றும் தெரியாது...வரலாறா? வரலாறை வைத்து நாங்க என்ன செய்றது? என்கிற ஏளனப் பேச்சுக்கள்தான் கிடைக்கும். இந்நிலையில் அவர்கள் ஆசிரியர் வேலையைத் தேடி அலைவதில் அர்த்தமில்லாமலில்லை. முதலில் அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் மற்றவர்களெல்லாம் கோமாளிகள் என்பது போன்ற நிலை மாற்றப்பட வேண்டும். தமிழுக்கும் தமிழில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன். சோடாபாட்டில் தங்களுடைய கருத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:15, 15 மார்ச் 2011 (UTC)
சுப்பிரமணி, உங்கள் கருத்துகளோடு எனக்கு பெரிய முரண் எதுவும் இல்லை. குறிப்பாக தமிழுக்கு முன்னுரிமை/அறிவியல் சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கு இருக்கும் பிம்பம் என்பதோடு நானும் உடன்படுகிறேன்.
>>அவர்களும் ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும், தமிழில் முனைவர் பட்டம் வாங்கியிருக்க வேண்டும். இப்படி நான் கேள்விப்படவில்லையே. ஆங்கிலம் ஓரளவு தான் கேட்கிறார்கள். (அதாவது செய்தித்தாள் / புத்தகம் வாசிக்கும் அளவு மட்டும் தெரிந்தால் போதும் என்று தான் கேட்கிறார்கள்). முக்கியமாகக் கேட்பது கணினி/நிரல் பற்றி பரிச்சயம். இது இருந்தாலே பலருக்கு வேலை கிடைக்கிறது. (ஆனால் நம்மாட்கள் கேட்கும் “படைப்பாளிக்கான அங்கீகாரம்” கிடைக்காது). இதன் சிக்கலே வேறு. இன்று எத்துறையென்றாலும் ஒரு பொருள் திறமையைக் கொண்டு வேலை கிடைப்பதில்லை. (ஆங்கில இலக்கியம் படித்தவருக்கும் இதே கதிதான், கால் செண்டருக்குப் போனாலும் தட்டச்சும் தெரியுமா, data processing தெரியுமா என்று தான் கேட்கிறார்கள்). பன்முகத் திறமையன்றி எங்கும் செல்ல இயலாத நிலை. இது தமிழ் குறித்தான் சிக்கல் மட்டுமல்ல. பொதுவான humanities படிப்பு படித்தவர்கள் அனைவருக்கும் உள்ளது. அதனால் தமிழ் படித்தவர்களுக்கு மட்டும் தான் இச்சிக்கல் என்று சித்தரிப்பது முழு கதையைக் காட்டுவது அல்ல.--சோடாபாட்டில்உரையாடுக 08:36, 15 மார்ச் 2011 (UTC)
  • நான் மேலே குறிப்பிட்டது போல சில நாளிதழ்களில் என் நண்பர்கள் சிலரிடம் இப்படி தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டது உண்மைதான். பொதுவாக, கலைப்படிப்பில் (humanities) பட்டம் பெற்றவர்கள் படும்பாடு திண்டாட்டம்தான். என்னைப் பொறுத்தவரை படிப்பை விட பொது அறிவுத்திறனும் நல்ல அனுபவமுடையவர்களும்தான் பல துறைகளில் சாதிக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பலர் (அறிவியல், பொறியியல் உட்பட) அவர்கள் துறையிலேயே திறமையின்றி இருப்பதை நாம் பல இடங்களில் காணமுடிகிறது. இவர்களெல்லாம் தாங்கள் படிப்பது என்னவென்று தெரியாமலேயே மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்றவர்கள்தான். இவர்களிடம் எந்தத் திறனை எதிர்பார்ப்பது? பத்தாம் வகுப்பு கூட படிக்காத பலர் நல்ல திறனுடன் பொது தகவல்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். பட்டம் பெற்ற பலர் பொதுவான தகவல்கள் ஏதும் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பொதுவாக செய்தித்தாள், இதழ்கள் வாசிப்புப் பழக்கமுடைய பலர் நல்ல திறனுடன் நல்ல வளர்ச்சியைப் பெற்று இருக்கிறார்கள். மற்றவர்கள் பணம் அல்லது ஏதாவது ஒன்றின் மேல் மட்டும் நோக்கமுடையவர்களாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:02, 15 மார்ச் 2011 (UTC)

இந்தி விக்கிப்பீடியா கதை[தொகு]

சில நாட்கள் முன்னர் வின்சு, இந்தி விக்கிப்பீடியாவில் கட்டுரை எண்ணிக்கை கூடியதைப் பற்றி கேட்டிருந்தார். தானியங்கி கட்டுரை உருவாக்கமாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். அது தான் நடந்துள்ளது எனத் தெரிகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்கு குறுங்கட்டுரைகள் (சுமார் 9450) உருவாக்கப்பட்டுள்ளன. பெயரைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது. தானியங்கி அணுக்கம் இல்லாத ஒரு பயனர் தானியங்கி வழியாக இவற்றை உருவாக்கியுள்ளார். புவியியல் ஆட்கூறுகள் கூட மாற்றப்படவில்லை.

இதைப்பற்றி ஆலோசனை செய்த இந்தி விக்கிப்பீடியர்கள் இவை அனைத்தையும் நீக்கிவிட முடிவு செய்துள்ளனர். (நல்ல முடிவு). மேலும் தகவல்களுக்கு காண்க: http://ut7.in/2011/03/quantity-over-quality-the-sad-story-of-hindi-wikipedia/ --சோடாபாட்டில்உரையாடுக 04:14, 15 மார்ச் 2011 (UTC)

அதிக கேள்விகள் தேவைப்படுகின்றன[தொகு]

பல வயதினருக்குமான போட்டுகள் வைப்பது என்றால், எமக்கு அதிக கேள்விகள் தேவைப்படுகின்றன. பயனர்கள் ஒவ்வொருவரும் 10-30 கேள்விகள் பங்களித்தால் இந்த வேலையை இலகுவாக செய்து விடலாம். பல் துறைகளில் கேள்விகள் பங்களிக்க அழைக்கப்படுகிறீர்கள். குறிப்பாக சிறுவர்களுக்கான கேள்விகளைச் சேர்க்கவும். மிக்க நன்றிகள். --Natkeeran 00:53, 16 மார்ச் 2011 (UTC)

அப்படியே செய்து விடலாம் நக்கீரன்! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 02:04, 16 மார்ச் 2011 (UTC)

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - உதவுக[தொகு]

இந்தப் பக்கத்தை தொகுக்க உதவுங்கள்.

எல்லாத் தொகுதியையும் சேர்க்க எளிய வழி:

  1. ஒரு பகுதியை நகலெடுத்து தனியாக நோட்பேடில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
  2. பின்னர் இல்லாத புதிய தொகுதியை find/replace கொண்டு மாற்றுங்கள்.
  3. கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களை திறந்து வைத்துக்கொண்டால், தொகுதியை தேடி பின்னர் வேட்பாளரின் பெயரை சேர்த்துவிடலாம். (வேட்பாளர் பெயர்கள், கட்சிகளின் தொகுதிகளை செய்தித் தளங்களில் காணலாம்)
  4. வேறு கட்சிகளும் அந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனவா என்று செய்தித் தளங்களில் தேடிக்கொள்ளலாம்.
  5. பின்னர் நோட்பேடில் செய்த மாற்றங்களை இந்தப் பக்கத்தில் ஒட்டிவிடலாம்.

தொகுதி எண் வரிசையை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 கட்டுரையில் காணலாம். நன்றி -- மாகிர் 15:54, 17 மார்ச் 2011 (UTC)

விக்கியன்புக் கருவி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பங்களித்து வரும் பயனர்களைக் கௌரவப்படுத்தும் நோக்கில் விக்கியன்பு என்ற கருவியானது உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் விக்கிப்பயனர்களுக்கு அவர்களது பேச்சுப் பக்கத்தில் பல விதவிதமான பதக்கங்களையும் பரிசுகளையும் அளிக்க முடியும். இக்கருவியானது பயனர் நிரல்வரியாகக் (user script) கிடைக்கிறது. கருவியைக் குறித்த மேலும் விபரங்களையும் நிறுவல் வழிமுறைகளையும் அறிய மேற்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

விருப்பமுள்ளவர்கள் கருவியைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுக் கருத்துகள் கூறவும்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 16:54, 17 மார்ச் 2011 (UTC)

கருவி பற்றிய கருத்துகள்[தொகு]

நன்றி. உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். --Natkeeran 01:19, 18 மார்ச் 2011 (UTC)

50 சிறு பரிசுகள் ஆய்த்தம், மேலும் எளிமையான கேள்விகள் தேவைப்படுகின்றன.[தொகு]

பல பயனர்கள் கேள்விகள் சேர்த்து உள்ளார்கள். நன்றிகள். பரிசுகள் ஆய்த்தம், மேலும் எளிமையான கேள்விகள் தேவைப்படுகின்றன. 5-9, 9-13, 13-17 வயதினரை மனதில் வைத்து கேள்விகளைப் பகிரவும். சிக்கலான கேள்விகளுக்கு பதில்களையும் மின்னஞ்சல் செய்யவும். நன்றி. --Natkeeran 01:21, 18 மார்ச் 2011 (UTC)

மிக அரியதொரு காட்சி! அனைவரும் கண்டுகளிப்பீர்!![தொகு]

அனைவருக்கும்! இந்த வாரமும் அடுத்த வாரமும் ( மார்ச்சு 2011 மூன்றாவது நான்காவது வியாழக்கிழமை உடைய வாரங்கள்) 6 1/2 முதல் 7 1/2 வரை புதனை வெறுங்கண்ணால் காண முடியும் ( புவியின் வட அரைக்கோளத்திலுள்ள பகுதிகளிலிருந்து). மேற்கு தொடுவானத்தில் இரு விண்மீன்கள் (உண்மையில் கோள்கள்) ஒன்றன் பக்கத்தில் ஒன்று மேலும் கீழுமாகத் ( அவற்றைக் கற்பனையில் இணைத்தால் ஒரு சாய்கோடு கிடைக்கும்) தென்படும். கீழுள்ளது வியாழன்; சற்று மேலே வடக்கு நோக்கி இருப்பது புதன். புதனைக் காண்பது என்பது மிகவும் அரிய நிகழ்வு. ஆனானப்பட்ட கெப்ளரே புதனைப் பார்த்ததில்லையாம்! அதனால் தான், நம் பழமொழி கூட பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுகிறது.