பேச்சு:பாமினி சுல்தானகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் இசுலாம் (Rated சுமாராக எழுதப்பட்ட-class, தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
 சுமாராக எழுதப்பட்ட  இந்த கட்டுரை சுமாராக எழுதப்பட்ட பிரிவாக தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 

பாமினிப் பேரரசு (Bahmani Empire)அல்ல. பாமினி சுல்தானம்(Bahmani Sultanate) (அ) பாமினி சுல்தானகம். அதாவது சில மாகாணங்களை ஆள்பவர்களே, சுல்தான்கள். பல மாகாணங்களைத் தன்னகத்தே அடக்கியது பேரரசு. மேலும், ஏற்கனவே Sultanate என்பதனை சுல்தானகம் என்றே மொழிபெயர்த்துள்ளோம்.சுல்தான்.சுல்தானம்(சுல்தான்+அம் என்ற விகுதியே போதுமானது.மரபும் கூட) என்பதே சாலப்பொருந்தும். சுல்தான், சுல்தான்+அகம்=சுல்தானகம் என்று நீட்டத்தேவையில்லை.அகம் என்ற விகுதிக்கு பதிலாக, அம் என்ற விகுதியை இணைத்தலே போதுமானது. சமஸ்தானம் என்று நாம் பயன்படுத்துவது போல, சுல்தானம். எனவே, பாமினிப் பேர ரசு அல்ல. பாமினி சுல்தானம். அதனை ஆண்டவர்கள் பாமினி சுல்தான்கள்.1397-இல் பிரோஸ்ஷா பாமினி சுல்தான், அரசியல் துறைகளில் இந்துக்களை உயர்நிலைப் பதவிகளில் அலுவலர்களாக நியமித்தார். மாமுத் காவான்(Mahmud Gawan) (1466–1481) காலமே பாமினி சுல்தான்களின் பொற்காலம் ஆகும்.14:07, 5 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..


ஆங்கிலத்தில் பாமனி என எழுதப்பட்டுள்ளது. பாமனி சுல்தானகம் எனலாமா?--Kanags \உரையாடுக 22:27, 5 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பாமினி என்றால் தமிழ் எழுத்துருவும், தஞ்சாவூரில் இருக்கும் பாமினி ஆறுமே எனக்கு நினைவுக்கு வருகிறது. இருப்பினும், பாமினி என்றே தமிழகக் கல்விச்சாலைகளில் கற்பிக்கப் படுகிறது. இணையத்திலும் அச்சொல்லே அதிக புழக்கத்தில் இருக்கிறது. அப்பட்டப் பெயரில் இருக்கும், பாமன் என்பது பிராமணன் என்ற சொல்லைக் குறிக்கிறது. இச்சுல்தானம் தோன்றிய பொழுது, சுல்தானை ஆசிர்வதித்த பிராமணனைக் குறிப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.ஆங்கில விக்கிக் கட்டுரையில் பல தவறுகள் உள்ளன. குறிப்பாக ஆட்சி காலங்கள். கீழுள்ள சித்திக்கின் இணையத்தில் இது பற்றி விரிவாக அறிய முடியும். மேலும், தேடுபொறிகளைக் கணக்கில் கொண்டு பாமினி சுல்தான்கள்/சுல்தானம் (அம் விகுதி மரபு - மராட்டியன்-மராட்டியம்,வங்களான்-வங்காளம்,ஆந்திரன்-ஆந்திரம்,கேரளன்-கேரளம்..) என்று பெயரிட்டல் நலம் என எண்ணுகிறேன்.தற்பொழுதுள்ள அகம் விகுதி இணைந்த பெயர்ச்சொற்கள்(சுல்தான்-சுல்தானகம்,மராட்டியகம், வங்காளகம்,கேரளகம்...), பொருத்தமாக இருப்பதாக எனக்குப் படவில்லை. வணக்கம்.06:41, 6 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..


த.உழவன், அப்படியானால் தமிழகம் என்பதையும் பிழை என்கிறீர்களா? அதைத் தமிழம் என்று மாற்ற வேண்டுமா?--பாஹிம் 01:29, 22 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இதன் பெயர் ஏனைய இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளவாறு இந்தியில் பஹ்மனீ என்றும், மலையாளத்தில் பஹ்மனி என்றும், உருது மொழியில் பஹ்மனீ என்றும், பஞ்சாபியில் பஹ்மனீ என்றும் உள்ள நிலையில் தமிழில் மட்டும் ஏன் பாமினி என்றிருக்க வேண்டும்? தமிழில் பாமனி அல்லது பகுமனி என்றிருப்பதே பொருத்தம்.--பாஹிம் 12:51, 7 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இது தமிழ் en:exonym. தமிழின் பழைய வ்ரலாற்று நூலக்ளில் இருந்து தற்போதைய பாடநூல்கள் வரை “பாமினி” என்றே வழங்கப்படுகிறது. இப்பெயர் இருப்பது பொருத்தமானதே. பிற பெயர்களுக்கு வழிமாற்று கொடுத்து விடலாம்--சோடாபாட்டில்உரையாடுக 12:58, 7 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
தமிழில் பாமினி என்பதே வழங்கப்படுவதால் அதனையே முதன்மைப் படுத்தலாம்.--Kanags \உரையாடுக 22:22, 7 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]