பயனர் பேச்சு:மதனாஹரன்/தொகுப்பு ௨

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்பு[தொகு]

இவ்வார கூட்டு முயற்சியான கொழும்பு கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 08:28, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, சதுரங்கக் கட்டுரைகளில் நேரத்தைச் செலவிடுவதன் காரணமாகவும் அடுத்த கூட்டு முயற்சிக் கட்டுரையில் பங்களிக்க முயல்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 15:34, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]

சரி, மதன். சதுரங்கள் குறித்த உங்கள் கட்டுரைகளும் நன்றாக உள்ளன. --இரவி (பேச்சு) 17:20, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 12:10, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

விரைவு நீக்கல் அறிவிப்புகள்[தொகு]

ஊழியர் சேமலாப நிதி , யானை விருத்தம் போன்றவை நன்கு அறியப்பட்ட விக்கிப்பீடியா பயனர்கள் எழுதியவை. இது போன்ற கட்டுரைகளில் முதலில் விரைவு நீக்கல் வார்ப்புரு இடாமல், அவர்கள் பேச்சுப் பக்கத்தில் மேம்படுத்தக் கோரலாம். இதற்கு மேல் எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாத ஒரு சில கட்டுரைகளை ஒரு பட்டியலாக ஒன்றிணைக்க முடியுமானால், அந்த வழியையும் குறிப்பிடலாம். நன்றி--இரவி (பேச்சு) 17:20, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

இனி அவ்வாறு செய்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 02:34, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஊழியர் சேமலாப நிதி என்ற் கட்டுரையை நீக்குவதற்குப் பதிலாக உங்களால் முடிந்தால் மேம்படுத்தலாமே.--Fasly (பேச்சு) 11:55, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக மேலும் தகவல்கள் எனக்குத் தெரியாது. அக்கட்டுரைக்கு ஆங்கில இணைப்பும் இல்லை. ஆகவே, வேறு இடத்தில் கேளுங்கள். மேலும் மேம்படுத்தப்படாவிடின், நீக்குவதே சரியென எனக்குத் தோன்றுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 12:00, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஏன் ஒரு கட்டுரையை நீக்க வேண்டும். ஊழியர் சேமலாப நிதி பற்றி தெரிந்தவர்கள் தொகுப்பார்கள். அல்லது நானே நேரம் கிடைத்தல் தொகுப்பேன்.--Fasly (பேச்சு) 04:00, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

உடனடியாக நீக்கப் போவதில்லை Fasly. வார்ப்புரு சேர்த்து ஒரு மாத காலத்திற்கு பிறகு யாரும் மேம்படுத்தவில்லை என்றால் மட்டுமே நீக்குவோம். --சண்முகம்ப7 (பேச்சு) 08:48, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

shanmugamp7. நீங்கள் எப்பொழுதும் ஒன்றை நீக்குவதிலே குறியாக இருக்கின்ரீர்க்ள். எவ்வள்வோ பயனர்கள் இருக்கின்றார்கள். யாராவது தெரிந்தவர்கள் மேம்படுத்துவார்கள். உங்களால் முடிந்தால் மேம்ப்டுத்துங்கள். இல்லாவிட்டால் நீக்கிவிடுங்கள். இப்பொழுது வேண்டுமானாலும் நீக்கி விடுங்கள். எனக்கு சிறிதும் ஆட்சேபனையில்லை.--Fasly (பேச்சு) 09:04, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

இதற்கான பதில் உங்கள் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.--சண்முகம்ப7 (பேச்சு) 04:08, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒரு பொருளைப் பற்றிச் சிறிய விளக்கம் மட்டும் கொடுப்பதானால் அதனைத் தமிழ் விக்சனரியில் செய்யலாம். மூன்று வரிகளுக்கும் குறைவான கட்டுரைகளுக்கே விரைவு நீக்கல் வேண்டுகோள் விடுத்து ஒரு திங்களுக்குள் மேம்படுத்தப்படாவிடின், நீக்குகின்றோம். இது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேணுவதற்காகவே செய்யப்படுகின்றது. தவிர, அக்கட்டுரையில் எந்தவொரு சான்றும் இல்லை. கட்டுரையின் பொருளின் தெளிவு தொடர்பாகப் பேச்சுப் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும் இன்னும் பதிலில்லை. ஆகவே, விரைவு நீக்கல் வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டிய கட்டுரை தான் அது. --மதனாகரன் (பேச்சு) 14:49, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
Fasly, தெரிந்தவர்கள் மேம்படுத்துவார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஒர் கட்டுரையினை ஆரம்பிக்கும்போது நமக்குத்தான் முதல் பொறுப்பு. குறிப்பிட்ட விடய அறிவு இல்லாமல் எப்படி கட்டுரையினைத் தொடங்குவது? நானாகவிருந்தால் மற்றவர்கள் செய்யட்டும் என எதிர்பார்க்க மாட்டேன். பேச்சுப் பக்கத்தில் இணைப்புக் கொடுத்திருந்தேன் கவனித்தீர்களா?

--Anton (பேச்சு) 16:35, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

Anton- யாருமே எந்தவொரு கட்டுரையையும் பூரணமாக தெரிந்திருப்பதுமில்லை. பூரணப்படுத்துவதுமில்லை. பலர் சேர்ந்த பங்களிப்பாகத்தான் இருக்கும். நான் குறிப்பிட்ட விடய அறிவு இல்லாமல் எந்த்வொரு கட்டுரையயும் தொடங்கவுமில்லை. மற்றவ்ர்கள் செய்யட்டும் என்று எதிபார்ப்பதில்லை. நான் சொன்னதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய கருத்துப்படி நீங்கள் எழுதிய அனைத்தும் உங்களாலே பூரணப்படுத்தப்பட்டதா? நிச்சயமாக பலருடைய பங்களிப்பாகத்தான் இருக்கும்.--Fasly (பேச்சு) 04:26, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

நான் குறிப்பிட்ட விடய அறிவு இல்லாமல் எந்த்வொரு கட்டுரையயும் தொடங்கவுமில்லை எதிர் ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக மேலும் தகவல்கள் எனக்குத் தெரியாது
மற்றவ்ர்கள் செய்யட்டும் என்று எதிபார்ப்பதில்லை எதிர் ஊழியர் சேமலாப நிதி பற்றி தெரிந்தவர்கள் தொகுப்பார்கள்
மேலேயுள்ளவை உங்களுடைய எதிர் எதிர் கருத்துக்கள்தான். நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் "உங்களுடைய கருத்துப்படி நீங்கள் எழுதிய அனைத்தும் உங்களாலே பூரணப்படுத்தப்பட்டதா?" நான் எதையுமே அலட்சியமாக விடவில்லையே. நான் வீக்கியில் இணைந்ததில் தொடங்கிய கட்டுரைகளை இன்றுவரையும் மேம்படுத்துகிறேன். இல்லையென்று உங்களால் கூறமுடியுமா? அல்லது நான் கட்டுரைகளில் அலட்சியமாக இருந்த சந்தர்ப்பங்களைக் குறிப்பிட முடியுமா? ஊழியர் சேமலாப நிதி பற்றி அதன் பேச்சுப் பக்கத்தில் இணைப்புக் கொடுத்திருந்தேன். நீங்களோ எதையும் செய்யவில்லை. பாம்புத் தாரா கட்டுரையினை சற்று மேம்படுத்தி உதவி செய்தேன். உங்கள் பேச்சுப் பக்கத்திலும் தகவல் கொடுத்தேன். நீங்கள் என்ன செய்தீர்கள்? மேலும் சிறு கட்டுரைகளை பிழைகளுடன்தான் உருவாக்கியிருந்தீர்கள். நீங்கள் புதுப்பயனாளராயிருந்தால் வீக்கி பற்றிய அறிவு இல்லை எனலாம். 31 மே 2009 இணைந்துள்ள உங்களிடமிருந்து நான்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் எதிர்வாதம் செய்வதில்தான் குறியாய் இருப்பதாய் எனக்குப்படுகிறது.--Anton (பேச்சு) 13:38, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். நீங்கள் நிறைய பங்களிப்பு செய்கின்றீர்கள். நான் உங்களை தவறு கூறவில்லை அன்டன். மேலே தடித்த எழுத்தில் காட்டிய இரண்டில் முதலாவது கருத்து என்னுடையதல்ல மதனாஹரன் உடையது. விக்கிப்பீடியாவுக்கென்று அதிகளவு நேரத்தை ஒதுக்க முடிவதில்லை அன்டன். கிடைக்கின்ற நேரத்தில் தான் பங்களித்து வந்தேன். சில நாட்களாக தான் தொடர்ந்து பங்களிக்கின்றேன். உண்மையில் நான் நேரம் கிடைக்கும் போது புது கட்டுரையை மட்டுமே தொடங்குகின்றேன். இருக்கின்ற கட்டுரைகள் சம்பந்தமாக ஏதாவது தெரிந்தால் அவற்றையும் அவ்வப்போது தொகுத்துள்ளேன். அலுவலக் வேலைகள் காரணமாக சில விடயங்களை கவனிக்கவும் மற்ந்து விடுகின்றேன். தயவு செய்து நான் சொன்னதை புரிந்து கொள்ளுங்கள். ஆதலால் தான் நான் கூறினேன் மற்றவர்களாவது மேம்படுத்துவார்கள் என்று.--Fasly (பேச்சு) 06:55, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

மதனாஹரன்- விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேணுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. நானும் அதில் கவன்மாகத்தான் இருக்கின்றேன். எடுத்தவுடனே ஒன்றை நீக்குவது தீர்வல்ல. மாற்று வழிகளை கையாளுங்கள். உங்களால் மேம்படுத்த முடியாவிட்டால் விடுங்கள். மற்றவர்கள் (நானாகவும் இருக்கலாம்) மேம்படுத்தட்டும். உங்களுக்கு ஒன்றை அழிக்க வேண்டுமென்ற் ஆசையென்றால் தராளமாக அழித்து விடுங்கள். எனக்கு சிறிதும் ஆட்சேபனையில்லை.--Fasly (பேச்சு) 04:26, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் மூன்று வரிக்குக் குறைவாக இருக்கக் கூடாது என்பது விக்கிப்பீடியாவைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடிய பயனர்களிடம் இருந்து காப்பதற்கான முறையே. ஆனால், ஒரு நாளில் நிறைய தொகுப்புகள் நடப்பதால் தங்கள் கட்டுரை இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது என்று கூட அறியாமல் பலர் இருக்கலாம். விரைவு நீக்கல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த செஞ்சதுக்கம் கட்டுரையை மேம்படுத்துமாறு அதனை உருவாக்கிய மயூரநாதனிடம் கேட்டவுடன் ஒரே நாளில் மிக அருமையாக வளர்த்தெடுத்து விட்டார். கட்டுரையை உருவாக்கிய பலருக்கு இந்த அக்கறை இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். ஒரு கட்டுரையில் போதுமான உள்ளடக்கம் இல்லை என்றால் நாம் சேர்க்க முனையலாம். அல்லது, தொடங்கியவரிடம் கேட்கலாம். அவரிடமும் பதில் இல்லையெனில், அதே துறையில் ஆர்வமுடைய பிறரைக் கேட்டுப் பார்க்கலாம். இதுவும் உதவவில்லையா, அண்மைய மாற்ற மேற்பக்க அறிவிப்புகள் பகுதியில் அடுத்து நீக்கப்படப்போகிற கட்டுரைகள் என்று பட்டியல் இடலாம். வார்ப்புருவை இட்டு அழிப்பதற்கு முன் அதனை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். இல்லாவிட்டால், வழமையாகப் பங்களிப்போர் கூட உளம் வருந்துவது போலவே அமையும். நன்றி--இரவி (பேச்சு) 06:10, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையொன்று மேம்படுத்தப்பட வேண்டுமென்பதற்காகவே விரைவு நீக்கல் வேண்டுகோள் இடப்படுகின்றது. இங்கு எதையும் எடுத்தவுடன் நீக்கவில்லை. ஒரு திங்கள் தரப்படுகின்றது. அதற்குள் மேம்படுத்தப்படாவிட்டாலேயே கட்டுரை நீக்கப்படுகிறது. இரவி கூறியபடி, அண்மைய மாற்ற மேற்பக்க அறிவிப்புகள் பகுதியில் அவ்வாறிடலாம். ஊழியர் சேமலாப நிதி தொடர்பான சிக்கல் தீர்ந்து விட்டது. கட்டுரை பார்வதிஸ்ரீயால் மேம்படுத்தப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 10:38, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

இரவியுடைய கருத்தை நான் முற்றிலுமாக ஏற்றுக் கொள்கின்றேன். :மதனாஹரன்- நான் உங்களுக்கு நீக்குவது முறையல்ல என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தேன். ஆனாலும் உங்களுடைய நோக்கம் நீக்குவதாகவே இருந்தது.--Fasly (பேச்சு) 11:19, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

மூன்று வரிகளிலும் குறைந்த கட்டுரை ஒரு திங்களாகியும் மேம்படுத்தப்படாமல் விட்டால் நீக்குவது முறையே. மேம்படுத்தப்படுவதற்காகத் தான் காலம் தரப்படுகிறது. அக்கட்டுரை தொடர்பாக மேலும் விபரங்கள் இல்லாவிடின் மட்டுமே ஒன்றிணைக்க வேண்டும்.
//ஆனாலும் உங்களுடைய நோக்கம் நீக்குவதாகவே இருந்தது.//
ஏன் நீக்க வேண்டும் என்று மேலே பல தடவைகள் விளக்கமளித்து விட்டேன். --மதனாகரன் (பேச்சு) 11:24, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் நீக்குவது பற்றி எனக்கு ஆட்சேபனையில்லை என்பதை எத்தனையோ தடவை கூறிவிட்டேன். ஆனால் உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக தவறாக பயன்படுத்துகின்றீர். இது மட்டும் நன்கு தெளிவாக உள்ளது. தயவு செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முற்பட வேண்டாம். முட்டளுடன் பேச எட்டாள் இருந்தாலும் போதாது. ஆதலால் இந்த வாதத்தை மேலும் தொடர்ந்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இப்பொழுது கூட வேண்டுமென்றெ என்னால் எழுதப்பட்ட(எனக்கு உரிமை கோர முடியாத) கட்டுரைகளை பிழை கண்டு கொண்டிருப்பதை தவிர்த்து, பிழையை மட்டும் பிழை காண முயலுங்கள்.--Fasly (பேச்சு) 11:36, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

மேலே கூறப்பட்ட கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். நான் எந்தவொரு அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தவில்லை. தவிர, நிருவாகிகள் மட்டுமே கட்டுரைகளை நீக்கவும் முடியும். தங்கள் கட்டுரைகளில் சான்றுகள் இல்லாததை அவதானித்தே, உங்கள் சான்றில்லாத கட்டுரைகளில் மட்டும் {{சான்றில்லை}} என்ற வார்ப்புருவை இணைத்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பிழை காண வேண்டாம் என்றேதேனும் விதியுண்டா? --மதனாகரன் (பேச்சு) 11:40, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

மேலே உள்ளதை படிக்கவில்லையா//பிழையை மட்டும் பிழை காண முயலுங்கள்//--Fasly (பேச்சு) 11:44, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

பஸ்லி தயவுசெய்து முட்டாள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது தனிநபர் தாக்குதல் போன்றது.--சண்முகம்ப7 (பேச்சு) 11:50, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

வாங்க Shanmugamp7. நான் யாரையும் தாக்கவில்லை. உண்மையை மட்டுமே சொல்லி இருக்கேன். நான் அவதானித்ததில் நீங்கள் இருவருமாக சேர்ந்து என்னை தாக்க முற்படுவதாகவே எண்ணுகின்றேன். விக்கிப்பீடியாவுக்கான என்னுடைய பங்களிப்புக்கள் போதுமென்றே நினைக்கின்றேன்.--Fasly (பேச்சு) 11:52, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

நான் எங்கே பிழையல்லாததைப் பிழை காண முயன்றேன் எனக் காட்ட முடியுமா Fasly? --மதனாகரன் (பேச்சு) 11:59, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
பஸ்லி, பொதுவாக மூன்று வரிக் கட்டுரைகள் இங்கு வரவேற்கப்படுவதில்லை. இதனாலேயே ஒரு மாதம் தவணை கொடுத்து நீக்குகிறோம். முன்னர் ஒரு வாரம் தான் தவணை கொடுக்கப்பட்டது. பின்னர் அது ஒரு மாதமாக அதிகரிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குள் கட்டுரை ஆரம்பித்தவரோ, அல்லது வேறொருவரோ கட்டுரையை மேம்படுத்தாதவிடத்து கட்டுரை நீக்கப்படும். இதுவே நடைமுறை. மேலும், குறுங்கட்டுரை ஒன்றை உருவாக்கும் போது ஏனைய பயனர்களும் அதில் பங்களிக்கத்தக்கவாறு கட்டுரையில் சில அடிப்படைத் தகவல்களைத் தரவேண்டும். உதாரணமாக, உங்கள் காட்விட் கட்டுரையை எடுங்கள். அது குறுங்கட்டுரை அல்ல, ஆனால், அறிவியல் கட்டுரை ஒன்று சான்றுகள் ஏதும் இல்லாமல் எழுதியிருந்தீர்கள். அதற்கு சான்றுகள் தேடிக் கட்டுரையில் சேர்க்கப் பலமுறை ஆங்கில விக்கியிலும் இணையத்திலும் தேடினேன். எதுவும் அகப்படவில்லை. அதன் உரையாடல் பக்கத்தைப் பாருங்கள். உங்களுக்கு விக்கி நடைமுறைகள் தெரியாமல் இவ்வாறு எழுதியிருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். விக்கியில் உருவாகும் புதிய பக்கங்களை, மற்றும் மாற்றங்களை விக்கிப்பயனர்கள் அடிக்கடி கண்காணித்து வரவேண்டும். அதுவே விக்கியின் ஒரே ஒரு பலம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நீங்களும் இவ்வாறான சில நிருவாகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுகிறேன். அனைவரும் சேர்ந்து பலமான ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவோம்.--Kanags \உரையாடுக 12:35, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
Fasly, இங்கு அதிகார முறைகேடு ஏதும் இல்லை. மதனாகரன் ஒரு நிருவாகி இல்லை என்பதால் கட்டுரைகளை நீக்க முடியாது. நிருவாகிகளாக இருப்பவர்களே கூட தன்னிச்சையாக கட்டுரைகளை நீக்க முடியாது. மாற்றுக் கருத்துகள் உள்ள கட்டுரைகளில் கலந்துரையாடல், வாக்கெடுப்பு நடந்த பிறகே கட்டுரைகளை நீக்க முடியும். பெரும்பாலும் போதுமான உள்ளடக்கம் இல்லாத கட்டுரைகளே குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகு நீக்கப்படுகின்றன. இவ்வாறு அனைத்துப் பயனர்களும் தொடங்கிய கட்டுரைகளும் நீக்கப்படவே செய்கின்றன. தவிர, இவ்வாறு ஒரு கட்டுரையை நீக்குமாறு யார் வேண்டுமானாலும் யார் கட்டுரையை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். இதற்கு நிருவாகியாக இருக்கத் தேவை இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்பு, தரக் கண்காணிப்பில் ஆர்வமுள்ள பயனர்கள் இது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவைக் கண்ட அனுபவத்தில், தொடக்கத்திலேயே சரியான அடிப்படைகளுடன் தொடங்காத கட்டுரைகள் பல அப்படியே தேங்கி விடுவதே வழமையாக உள்ளது. ஏனெனில், அனைத்துக் கட்டுரைகளையும் முன்னேற்றுவதற்கான ஆள்வளம் நம்மிடம் இல்லை. இதனால் தான் ஒரு கட்டுரையைத் தொடங்கும் போது குறைந்த அளவு தகவல்களுடனாவது அதனைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். குறைந்த அளவு தகவல் என்பது மூன்று வரிகள், பகுப்பு, ஒரு படிமம், விக்கியிடை இணைப்புகள், முதல் வரியில் ஈடான ஆங்கிலச் சொல், உசாத்துணை முதலியவற்றைக் குறிக்கும். இந்த குறைந்த அளவு தகவலைத் தருவதன் மூலம் பிற பயனர்கள் அவற்றை முன்னேற்ற முனையும் போது உதவியாக இருக்கும். இது குறித்த எதிர்பார்ப்புகளையே பயனர்கள் கடந்த சில நாட்களாக உங்கள் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்து வந்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். இது ஒரு வகையில் உங்களுக்கு உளைச்சலாகக் கூட இருந்திருக்கலாம். அருள்கூர்ந்து, இதனைத் தங்களுக்கு எதிரான தனிப்பட செயல்பாடாக கருத வேண்டாம். சில நாட்கள் விக்கி விடுப்பில் செல்வதாகத் தெரிவித்து இருந்தீர்கள். விடுமுறைக்குப் பிறகு புத்துணர்வுடன் பங்களிக்க வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். புதிய கட்டுரைகளை உருவாக்குவதுடன், ஏற்கனவே நீங்கள் தொடங்கிய கட்டுரைகளிலும் இயன்ற மேம்பாடுகளைச் செய்து வருவது அனைத்துப் பங்களிப்பாளர்களிடையே நன்னம்பிக்கை கூட உதவும். நன்றி--இரவி (பேச்சு) 13:25, 11 சூலை 2012 (UTC)👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:58, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:30, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

இரவி Kanags உங்கள் இருவருக்கும் முதலில் வணக்கம். உங்கள் இருவருடைய கருத்துக்களையும் பெருமையோடு வரவேற்கின்றேன். உண்மையில் விக்கி சம்பந்தமாக பூரண தெளிவு இல்லாததை ஏற்றுக் கொள்கின்றேன் இரவி. அலுவலக வேலைகளுக்கு மத்தியில் ஏற்படுகின்ற சிறு சிறு இடைவேளைகளிலே சிரமத்துக்கு மத்தியில் தான் பங்களித்து வருகின்றேன். காரணம் ஆர்வம். அதேபோல் ஒவ்வொரு நாளும் புது விடயங்களை அறிந்து கொண்டு வருகின்றேன். நான் பெரிய பண்டிதர் அல்ல என்பதால் எனது பங்களிப்பில் நிறையவே பிழை இருக்கலாம். ஓவ்வொருத்தர் சுட்டிக் காட்டும் போதும் இயன்றளவு திருத்தி வந்தேன். Kanags நீங்கள் கூட எனது பிழைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி இருந்தீர்கள். நான் எப்போதாவது ஏற்க மறுத்தேனா? தாழ்மையோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால் இங்கு Shanmugamp7| மதனாகரன் இருவரும் வேண்டுமென்றே தாக்குவதை உணர்கின்றேன். அதற்கு ஒரு சான்றை முன்வைக்கின்றேன். படிமம்:Wro.JPG நன்றாக இந்தப் படத்தையும் இந்தக் கட்டுரைகளையும் பாருங்கள். இதிலுள்ள வார்ப்புருக்கள் மதனாகரன் ஆல் இடப்பட்டது. அவர் செய்தது சரியாக இருக்கலாம். இந்தக் கட்டுரைகள் பிழையாக இருக்கலாம். என்றாலும் என்னுடன் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நிமிடத்தில் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக தெரிவு செய்து ஒரிரு கட்டுரைகளுக்கு மட்டுமல்ல தொடர்ச்சியாக அதிகமான கட்டுரைகளுக்கு அந்த வார்ப்புருவை இட்டது என்மீதான தாக்குதலின் வெளிப்பாடே. இவ்வளவு நாளும் இல்லாமல் இன்று அதுவும் தொடராக பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே பிழை காணப்பட்டது. இதைக் கேட்டால்தான் பல விளக்கங்களை கொடுக்கின்றார். அந்த விளக்கங்களை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றேன். ஊண்மையில் அவற்றில் பிழைகள் இருக்கலாம். ஏற்றுக் கொள்கின்றேன். அந்த பிழைகளை அப்பப்போ சுட்டிக் காட்டியிருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். இவர் கோவத்தினாலே அவ்வாறு செய்தார் என்பது உங்களுக்கும் நன்றாக புரியும். தவறை தவறான முறையில் காட்ட கூடாது. தவறை சரியான முறையிலேயே தெளிவுபடுத்த வேண்டும். இதுவும் மனிதப் பண்பு. இதனால் தான் விக்கி கான பங்களிப்பை போதுமென்ற் எண்ணி இதிலிருந்ல்து விலகி எனது அன்றாட வேலைகளை மட்டும் கவனிக்கலாம் என்று இருக்கேன்.--Fasly (பேச்சு) 04:35, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

//Shanmugamp7| மதனாகரன் இருவரும் வேண்டுமென்றே தாக்குவதை உணர்கின்றேன்.// நான் என்ன தவறு செய்தேன் எனக் கூறினால் தகுந்த விளக்கத்தை அளிக்க இயலும் fasly--சண்முகம்ப7 (பேச்சு) 04:47, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

எத்தனை முறை ஒரே விடயத்தைப் பற்றி ஆராய்வது. எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.--Fasly (பேச்சு) 05:06, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஒரு குற்றச்சாட்டை கூறும்போது அதனை நிரூபிக்க வேண்டியதும் தங்கள் கடமை fasly. கடல் விசிறி, முள்ளங்கி போன்றவற்றை மேம்படுத்தியது மாம்பழத்தான் குருவி (கட்டுரை ஒன்றிணைப்பு) பேச்சு:சிறுசின்னி கருத்திட்டது, நான் செய்து வரும் படிமப் துப்புரவின் ஒரு பகுதியாக தங்களின் இரண்டு படிமங்களுக்கு காப்புரிமை விவரங்களை கேட்டது, கொள்கைகளைச் சுட்டியது, காமன்ஸ் பற்றி ஆலோசனை கூறியது போன்றவைதான் நான் செய்த தவறா?--சண்முகம்ப7 (பேச்சு) 05:39, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

User:shanmugamp7 உங்களுக்கு எத்தனையோ முறை தெளிவாக கூறிவிட்டேன் உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் என்று. அதில் எனக்கு ஆட்செபனையில்லை என்று. ஒரே விடயத்தை திரும்ப திருமப பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. மதனாகரன் உடனான வாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் தேவையில்லாத கருத்துத் தெரிவித்தது என்னைப் பொறுத்தவைரை தப்பு. அதற்காக இரவி Kanags இவர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றார்களே இவர்களும் தப்பானவர்களா என்று தயவு செய்து திரும்ப கேட்க வேண்டும். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த உரையாடலை ஆரம்பத்தில் இருந்து பாருங்கள்.--Fasly (பேச்சு) 06:35, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

பசுலி, மதன், சண்முகம்:- விரைவு நீக்கல் குறித்த செய்தியை மதனின் பேச்சுப் பக்கத்தில் இடும்போது பொதுவாகவே இட்டேன். விரைவு நீக்கல் குறித்து பலருக்கும் மாற்றுக் கருத்து இருப்பது ஆலமரத்தடி உரையாடலில் தெரிகிறது. இதற்கான நடைமுறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் உரையாடி வருகிறோம். பலரும் கவனிக்கும் உரையாடல்களில் தத்தமது நியாயங்களை எடுத்துரைக்க முனைவதும் அதற்கேற்ப செயல்படுவதும் மாந்த இயல்பு. எனவே, இதனைப் பொருட்படுத்தி மேலும் இது குறித்துத் தனிப்பட உரையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வளர்முக செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமே ஒருவருக்கு ஒருவர் நன்னம்பிக்கையை வளர்க்க முடியும். நன்றி--இரவி (பேச்சு) 06:58, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துக்கு நன்றி இரவி, நாம் எப்போதும் மாற்றோருவர் பேச்சுப் பக்கத்தில் ஏதேனும் கேள்வி கேட்கப்பட்டிருந்தால், அந்த நபர் பதிலளிக்க தாமதமானால் உடனடியாக பதிலளிப்பது வழக்கம்தானே (அது விக்கிகொள்கைப்படி தவறேதும் கிடையாது). அந்தவொரு அடிப்படையிலே நான் இப்பக்கத்தில் கருத்துக் கூறினேன். அதற்காக ஒரு முறை என்றால் பரவாயில்லை பலமுறை மீண்டும் மீண்டும் தவறு செய்ததாக குறிப்பிடுவதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் உங்களின் கூற்றுக்கேற்ப இனி உரையாடாமல் இருக்க முயல்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 07:11, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

Shanmugamp7 உங்கள் கருத்துப்படி உங்கள் தவறை மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருப்பதை வரவேற்கின்றேன். இந்த உரையாடலை முழுமையாக பார்த்தால் புரியும் எங்கு எவரால் தவறிழைக்கப்பட்டிருக்கென்று. உங்களை விட மதனாகரன் செய்தது பெரிய தவரென்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து நான் மேலே இணைத்துள்ள (படிமம்:Wro.JPG)படிமத்தையும் அவதானியுங்கள். திரும்பவும் சொல்லுகின்றேன் Shanmugamp7 கட்டுரைகளில் ஏற்படுகின்ற தவறை திருத்துங்கள், அதேபோல் உங்கள் கடமையை செய்யுங்கள் என்பதை எத்தனையோ முறை கூறியிருந்தேன். அதேபோல் இரவி சொன்னதுபோல இத்தோடு நிறுத்துவோம் என்று பலமுறை கூறியதயும் ஞாபகப்படுதுகின்றேன். நன்றி இரவி --Fasly (பேச்சு) 07:58, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

நான் எந்த தவறும் செய்யவும் இல்லை. அதை மறைமுகமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இல்லை. நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 08:06, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

உங்கள் பக்கம் நியாயம் இருப்பினும், இத்துடன் “விரைவு நீக்கல் அறிவிப்புகள்” பேச்சினை நிறுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களை எல்லா வீக்கிப்பீடியர்களும் குற்றஞ்சாட்டவில்லையே. முடிந்தால் “விரைவு நீக்கல் அறிவிப்புகள்” பகுதியை தொகுப்புக்குள் நகர்த்திவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தமிழ் மொழியிலும் கட்டுரைகளிலும் காட்டும் திறனைப் போன்று முரண்பாட்டினைக் கையாளுவதிலும் வெளிப்படுத்துவீர்கள் என எதிர் பார்க்கின்றேன். இறுதி முற்றுகையினை அமைதியாயிருப்பதினூடாக மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். :) --Anton (பேச்சு) 09:31, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள் Anton! --மதனாகரன் (பேச்சு) 13:56, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Anton (பேச்சு) 02:39, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]

இத்தகைய முரண்பாட்டு தவிர்ப்பு உரையாடல்களில் 👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:38, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]

Jesan periasamy என்ற மொரிசியசுத் தமிழரைப் பற்றிய கட்டுரையை அடிப்படைத் தகவல்களுடன் தொடங்க விரும்புகிறேன். (பிறகு விரிவாக்கலாம்) இந்த பெயருக்கான தமிழாக்கம் தரவும். நன்றி--தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:16, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]

சேசன் பெரியசாமி எனலாமா? --மதனாகரன் (பேச்சு) 12:20, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

மாஸ்டர் மதனாஹரன், ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இதை வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:55, 25 சூலை 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது[பதிலளி]

நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 10:23, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் மதனாகரன்--Sank (பேச்சு) 16:05, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள் Sank! --மதனாகரன் (பேச்சு) 12:05, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]

சான்று சேர்க்கும் திட்டம்[தொகு]

மதன், விக்கிப்பீடியா பேச்சு:சான்று சேர்க்கும் திட்டம் பார்க்கவும். அடிப்படைத் தகவல் உள்ள சர்ச்சையற்ற கட்டுரைகளில் கூட சான்று கோரி வார்ப்புரு இட்டு நெடுநாள் தங்க விடுவது தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய குறைவான மதிப்பையே தரும். தங்களால் இயன்ற கட்டுரைகளில் நேரடியாக சான்றுகளைச் சேர்க்க முற்படுவது நல்லது.--இரவி (பேச்சு) 07:08, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

சான்றுகள் இல்லாத கட்டுரைகளைக் கண்டுபிடித்து விட்டு, படிப்படியாக அவற்றை இணைக்கலாம் என்றுள்ளேன். ஆகவே, இனி மேல் அவ்வாறு செய்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 07:37, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

புரிதலுக்கு நன்றி, மதன். முதலில் வார்ப்புரு இடுபவரே உடனேயோ அடுத்தோ அதை கட்டுரையில் சான்று சேர்ப்பதற்குச் சேர்ப்பதற்குப் பதில் நேரடியாகவே சேர்த்து விடலாமே? ஒரு அடையாளத்துக்குத் தேவைப்படுகிறது என்றால், பயனர் பக்கத்தில் துணைப்பக்கம் ஒன்று உருவாக்கி இது போன்ற நிலுவையில் உள்ள பணிகளைக் குறித்துக் கொள்ளலாம். அறிவியல் தொடர்பான சில கட்டுரைகளில் அகரமுதலிகளுக்கான வெளி இணைப்புகளைத் தந்து சான்றாக குறித்துள்ளீர்கள். எனக்கென்னவோ இத்தகைய செயற்பாடு, ஏதோ ஒரு சான்று இருக்கிறது என்று நம்மை நாமே தரத்தின் பால் அசட்டையாக இருக்கவே செய்யும். அடிப்படைத் தலைப்புகளில் வரிக்கு வரி சான்று தராவிட்டாலும், பொதுவான உசாத்துணைகள், ஆய்வு நூல்கள் / கட்டுரைகளை சான்றாகத் தருவது நன்று.--இரவி (பேச்சு) 13:33, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இனி அவ்வாறு செய்யலாம். அடிப்படை விளக்கத்துக்கு அகரமுதலியின் இணைப்பையும் கொடுக்கலாந்தானே. தரமான சான்றுகளையும் நிச்சயம் குறிப்பிடுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 03:11, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஒரு ஆய்வுக் கோட்பாட்டுக்கு ஆங்கிலத்தில் உள்ள ஆய்விதழை மேற்கோள் காட்டினால் பொருள் உண்டு. ஆனால், ஒரு வரிக் கட்டுரையில் தமிழிலே உள்ள சொல்லுக்கு ஆங்கில அகரமுதலியை மேற்கோள் காட்டுவது தேவையற்றதாக இருக்கிறது.--இரவி (பேச்சு) 14:30, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஆங்கில அகரமுதலியை மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்துக் கொள்கின்றேன். நன்றி! --மதனாகரன் (பேச்சு) 03:43, 11 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Your Credo Reference account is approved[தொகு]

Good news! You are approved for access to 350 high quality reference resources through Credo Reference.

  • Fill out the survey with your username and an email address where your sign-up information can be sent. Credo will contact you within a few weeks with your login information.
  • If you need assistance, ask User:Ocaasi.
  • A quick reminder about using the account: 1) try it out; 2) provide original citation information, in addition to linking to a Credo article; 3) avoid bare links to non-free Credo pages; 4) note "(subscription required)" in the citation, where appropriate. Examples are at W:EN:WP:Credo accounts/Citations.
  • Credo would love to hear feedback at W:EN:WP:Credo accounts/Experiences
  • If you decide you no longer can or want to make use of your account, donate it back by adding your name here

Thanks for helping make Wikipedia better. Enjoy your research! Cheers, Ocaasi 19:41, 23 ஆகத்து 2012 (UTC)

External links[தொகு]

Hi! About this edit - Most Wikipedias have dedicated external links sections. In this case, the external links section is here to show where the organization's Tamil content is, and where its English content is WhisperToMe (பேச்சு) 14:55, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

I removed them to add them into references. But, I forgot it. Thank you for your contribution. I will expand that article very soon. --மதனாகரன் (பேச்சு) 06:10, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

செப்பிட்டெம்பர்[தொகு]

மதனாகரன், இன்றைய உதவிக் குறிப்பில் செப்பிட்டெம்பர் என்று ஏதோ எழுதியிருக்கிறீர்கள். அது என்ன சொல் என அறியலாமா? அதுவும் புதுப்பயனர் வரவேற்பிலும் அவ்வாறு வருகிறது. புதுப்பயனர்கள் இதைப் பார்த்துப் பயந்து விடுவார்களே. இதில் ஏதேனும் இலக்கணச் சுத்தம் உள்ளதா?--Kanags \உரையாடுக 10:56, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

க், ச், த், ப் ஆகிய மெய்கள் தம்மோடு தாம் மயங்காமல் வேறொரு மெய்யோடும் மயங்காதல்லவா? ஆகவே, செப்டெம்பர் என்று வருவது எவ்வாறு பொருத்தமாக அமையும்? அதனாலேயே இவ்வாறெழுதினேன். --மதனாகரன் (பேச்சு) 11:04, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

//க், ச், த், ப் ஆகிய மெய்கள் தம்மோடு தாம் மயங்காமல் //
  • க்,ச், த், ப் ஆகிய மெய்கள் உடனிலை மெய்ம்மயக்கத்திற்கே உரியன. அதாவது தம்மோடு தாம் மயங்குவன. சான்று: பக்கம், பச்சை. மொத்தம், கப்பல். பிற மெய்களோடு தான் வராது. தாங்கள் மேலே கூறியவற்றில் பிழை உளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:30, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
மேலே நான் கூறிய கருத்தில் சிறிது மயக்கம் உள்ளது. தம்மோடு தாம் மயங்குவதேயன்றி, வேறொரு மெய்யோடும் மயங்காது என்று கூறவே முற்பட்டேன். --மதனாகரன் (பேச்சு) 12:32, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஓகோ, அப்படியானால் வரும் மாதத்தை எப்படி எழுதப் போகிறீர்கள்? அக்குத்தோபர் என்றா?--Kanags \உரையாடுக 11:25, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆமாம். சனவரி, சூன், சூலை என்றவாறு திங்கள்களின் பெயரை மாற்றிய நாம் இலக்கண முறைகளின்படி ஏனையவற்றின் பெயர்களையும் மாற்ற வேண்டுந்தானே! --மதனாகரன் (பேச்சு) 12:02, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மாதங்களின் பெயர்கள் பற்றி ஏற்கனவே நீண்ட உரையாடல்கள் இடம்பெற்று தற்போதுள்ள பெயர்களே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு பெயரை வைத்தால் தமிழ் விக்கி உருப்பட்டாற் போல் தான். நீங்கள் உருவாக்கிய பக்கங்களில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ளுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். பயனர் பேச்சுப் பக்கங்களில் இவ்வாறு சொற்களை மாற்றுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 12:18, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சரி! சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் என்றவாறு பயன்படுத்துகின்றேன். காப்பகத்திலுள்ளவற்றை மாற்றி விட வேண்டாம். --மதனாகரன் (பேச்சு) 12:22, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

//இவ்வாறு ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு பெயரை வைத்தால் தமிழ் விக்கி உருப்பட்டாற் போல் தான்//

மதன் தன் போக்குக்கு எழுத வில்லை. தமிழ் இலக்கண முறைப்படியே எழுத முனைந்துள்ளார். ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதப் பெயர்களைச் சுட்டிக் காட்டி அதனைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாலே போதுமானது.

//செப்பிட்டெம்பர் என்று ஏதோ எழுதியிருக்கிறீர்கள். அது என்ன சொல் என அறியலாமா? அதுவும் புதுப்பயனர் வரவேற்பிலும் அவ்வாறு வருகிறது. இதில் ஏதேனும் இலக்கணச் சுத்தம் உள்ளதா//

தெரிந்து கொண்டே இது போல் கேட்கும் எள்ளல் போக்கை விடுத்து கனிவான அணுகுமுறை தேவை.

//புதுப்பயனர்கள் இதைப் பார்த்துப் பயந்து விடுவார்களே//

தமிழ் இலக்கண முறைகளைச் சுட்டிக் காட்டும் போது எல்லாம் புதுப் பயனர்கள் பயந்து விடுவார்கள் என்று பழைய பயனர்கள் பயம் காட்டத் தேவை இல்லை. மதன் கூட சில மாதங்கள் முன்பு புதிய பயனர் தான். வயதிலும் மிக இளையவர். எனவே அவரையும் உள்ளடக்கிய வருங்காலத்தலைமுறையின் தமிழிடம் இருந்து தமிழ் விக்கிப்பீடியா விலகிப் போகிறதா என்பது தேவையற்ற அச்சம்--இரவி (பேச்சு) 18:45, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஏற்றுக் கொள்கிறேன் இரவி. செப்பிட்டெம்பர் என்ற சொல்லை நான் இப்போது தான் இணையத்தில் காண்கிறேன் எனவே சொல்ல வந்தேன். அச்சிலும் காணவில்லை. எனது சொற்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:21, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
புரிதலுக்கு நன்றி, சிறீதரன். மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை :) ஏற்கனவே ஒரு முறை மாதப் பெயர் சீர்மையால் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணியில் உங்கள் கருத்தைப் புரிந்து கொள்கிறேன். http://silampoli.blogspot.in/2012/02/85.html பக்கத்தில் செபுதம்பர் என்று எழுதக் கண்டிருந்தேன். இது வரை அப்படி யாரும் எழுதி பார்த்தது இல்லை என்றாலும் செப்டம்பர் என்பதைத் தான் இலக்கண முறைக்கு ஏற்ப அப்படி எழுத முனைந்திருக்கிறார் என்பதை ஊகித்துக் கொண்டேன். அது போலவே மதனின் முயற்சியையும் கண்டேன். தமிழ் மொழிச் சொற்களுக்கு மட்டும் தான் ஒரே எழுத்தக்கூட்டல் இருக்க முடியும். மற்ற மொழிச் சொற்களுக்கு நாம் ஒலியை உள்வாங்கும் முறையை ஒட்டியும் பொது வழக்கு எழுத்துக்கூட்டலை ஒட்டியும் தமிழ் இலக்கண முறையை ஒட்டியும் மாற்றங்கள் வரக்கூடும். எனவே, இது போன்ற இடங்களில் ஏற்கனவே நாம் பின்பற்றி வரும் முறையைச் சுட்டி வேண்டுகோள் விடுத்தாலே போதுமானது. அதுவும் மதனைப் போன்ற நன்கு அறிந்த பயனர்கள், மற்றவர்களின் கருத்தைக் கேட்டு அதற்கு ஏற்ப மாற்றம் செய்யத் தயங்காதவர்கள். நன்றி--இரவி (பேச்சு) 06:08, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உழுந்து[தொகு]

உழுந்து குறித்த தெளிவூட்டலுக்கு நன்றி.

நீங்கள் புதிய செய்திகளைப் பெற்றுள்ளீர்கள் என மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 11:04, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்சனரி-மென்மம் எதிர் மென்பொருள்[தொகு]

மென்பொருள் என்பதை விட மென்மம் மிகப்பொருத்தமாகப் படுகிறது. இதனைப் படித்த போது,

//மென்ம"ம் சுவ மிகுதி"ம் உடயதாதலால் சிந்திப்பார் சிந்தயில் நின்று //

சிறு பொருட் மயக்கம் வருகிறது .தங்களின் கருத்தென்ன? விக்சனரியில் உங்கள் பேச்சுப்பக்கம் குறித்து, இங்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறேன்.-- உழவன் +உரை.. 12:08, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மேற்கூறிய இணைப்பிலுள்ள மொழி தமிழா என ஐயம் எழுகிறது (எழுத்துருச் சிக்கலைக் குறிப்பிட்டேன்.). இரட்டைக் கொம்பானது (ே) பல இடங்களில் மேற்கோட்குறியாக (") மாறியுள்ளது. ு, ூ ஆகிய குறியீடுகளுடன் உள்ள எழுத்துகளும் சரிவரத் தோன்றவில்லை. மென்மையும் சுவை மிகுதியும் உடையதாதலால் சிந்திப்பார் சிந்தையில் நின்று என்பதே அவ்வாறு தவறாகத் தட்டச்சிடப்பட்டுள்ளது. விக்சனரியானது நல்லதொரு திட்டமே. விக்சனரியைப் பயன்படுத்துபவர்களுக்கு எவ்வகையான சிக்கலும் இல்லை. ஆனால், விக்சனரியானது அதில் பங்களிப்பவர்களுக்குதவும் வகையில் சீராக இல்லை. ஒவ்வோர் இடங்களிலும் ஒவ்வொரு மாதிரி எழுதப்படுகின்றது. வடிவமைப்புத் தொடர்பில் சீர்தரம் பேணப்படவில்லை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் பெரும்பாலும் வடிவமைப்புச் சீராகப் பேணப்பட்டு வருகின்றது. அணுக்கர்ளும் ஏனைய பயனர்களும் சிறப்பாகப் பங்களித்து வருகின்றார்கள். விக்சனரியில் அவதூறு, ஆவலாதி ஆகிய இரு பக்கங்களையுமே பாருங்கள். இரண்டும் வெவ்வேறு முறைகளில் அமைந்துள்ளன. அதனாலேயே விக்சனரியில் பங்களிப்பது சிக்கலாக இருந்தது. மாதிரியாக எந்தப் பக்கத்தை எடுத்துக் கொள்வதென்ற குழப்பம் வேறு! இப்போது பயனர் பக்கத்தை மாற்றியமைத்துள்ளேன். விக்சனரியில் போதிய பயனர்கள் இல்லாததாலும் விக்கிப்பீடியாவோடு ஒப்பிடும்போது அளவின்மிகப் பெரியதாக இருப்பதாலுமே இவற்றைக் கவனிக்க முடிவதில்லை என எண்ணுகிறேன். ஆயினும் தமிழ் விக்சனரியானது கூடிய முன்னேற்றத்துடன் காணப்படுவது சிறப்பானது. சுருக்கமாகக் கூறப் போனால் விக்சனரியானது அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு நல்லதோர் அகரமுதலி. அதில் பங்களிப்பவர்களுக்குச் சிறிது குழப்பத்தை ஏற்படுத்துகின்ற விக்கித் திட்டம். தமிழ் ஆதாரங்களை இணைப்பது பற்றி விக்சனரியில் தாங்கள் எனது பயனர் பேச்சுப் பக்கத்தில் இட்ட கருத்தையும் நினைவுகூருங்கள்.

//இதுபற்றி தெளிவான புரிந்துணர்வு அனைவரிடத்திலும் வரவேண்டும். கலந்துரையாடல்களில் கருத்துவேறுபாடு இருக்கிறது. உரையாடலும் முழுமையாக நடைபெறவில்லை. பல உரையாடல்கள் விரவிக்கிடக்கிறது. அதனை ஒருங்கிணைக்க சிந்திக்கிறேன்.//

ஆனால், இன்னமும் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது போலத் தான் விக்சனரியின் வடிவமைப்புத் தோற்றமளிக்கின்றது. மேலும் பொருள் + மயக்கம் என்பது பொருண்மயக்கம் என்றவாறு புணருமேயன்றி, பொருட் மயக்கம் என்றவாறு வராது. --மதனாகரன் (பேச்சு) 12:33, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அகமகிழ்ந்தேன் மதனா! உடன் செயற்பட்டமைக்கு நன்றி. இனி பொருண்மயக்கம் என்றே குறிப்பிடுவேண். தொடர்ந்து எழுதுக. உங்களுக்கான தளம், விக்சனரியே. தொடர்ந்து பங்களிக்க வருக. பக்க வடிவம் குறித்து, நானும் விரவிக்கிடக்கும் உரையாடல்களை ஒருங்கிணைக்க, எனக்கு தெரிந்த முயற்சிகளை எடுத்தேன். அம்முயற்சி தவறாக புரிந்து கொள்ளப்பட்டமையால், கைவிட்டேன். மற்றொன்று, உருவாக்குவதில் எனது கவனம் திரும்பிவிட்டது. முதலில் இல்லையென்பதை, இல்லையென மாற்றவேண்டும். அப்புறம் இருப்பதை மேம்படுத்த வேண்டும் என்றே செயல்படுகிறேன். அங்கு இதுவரை பங்களித்தவர் அனைவரும் மிக உயர்ந்த கண்ணோட்டம் உடையவர்களே.எனவே, அவரவர் விருப்பம் போல பங்களிக்கின்றனர். என்னைப்பொறுத்தவரை அனுபவத்தின் அடிப்படையில் இயங்குகின்றேன். அதனால், பல வடிவமைப்புகள் வந்து விட்டது. இதுவரை வந்த அனுபவத்தின் அடிப்படையில், அம்மா என்ற விக்சனரி சொல்லை உருவாக்கியுள்ளேன். அதிலுள்ள ஒவ்வொரு உட்கூறுகளுக்கும் பலரின் எண்ணங்களை உள்ளடக்கியதாக அமைத்திருக்கிறேன். அவற்றை அனைத்தையும் விவரித்தால், இப்பக்கம் இன்னும் நீண்டுவிடும். ஒரு முறை விக்சனரி அம்மாவைக் கண்டு, உங்களின் எண்ணங்களையும் இடுக.-- உழவன் +உரை.. 13:13, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மேற்கூறிய வடிவமைப்பு நன்றாகவும் விளக்கம் நிறைந்ததாகவும் உள்ளது. புதுப்பயனர்களுக்கு வடிவமைப்பைப் பற்றி விளக்குவது நல்லது. நிச்சயமாக விக்சனரியில் பங்களிப்பேன். நன்றி உழவன் ! --மதனாகரன் (பேச்சு) 13:16, 14 செப்டெம்பர் 2012 (UTC) [பதிலளி]

ஊக்கம் அளித்தமைக்கு நன்றி மதனா! பல்வேறு புதுப்பயனர்களின் செயல்களை இந்த இரண்டு வருடங்களாக கவனித்து வருகிறேன். அப்பக்கத்தை இன்னும் மேம்படுத்த, எளிமைப் படுத்த சிலரது உதவிகளை கோரியுள்ளேன். இனி இந்த அம்மா சொல்தான், அடித்தளமாக இருக்கப்போகிறது. இங்கிட்ட உங்களது எண்ணங்களை, அங்கும் இடக்கோருகிறேன்.மீண்டும் மற்றுமொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்-- உழவன் +உரை.. 13:30, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

வணக்கம் மதன், உங்கள் பேச்சுப் பக்கத்தில் {{tocright}} அல்லது {{tocleft}} வார்ப்புரு இட முடியுமா?.. பொருளடக்கம் இல்லாததால் உரையாடல் பக்கத்தின் கீழே செல்ல சிறிது கடினமாக உள்ளது--சண்முகம்ப7 (பேச்சு) 12:45, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பொருளடக்கம் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? சிறிது தெளிவாகக் கூற முடியுமா? மேற்கூறிய வார்ப்புருக்கள் எதற்காக இடப்படுகின்றன? --மதனாகரன் (பேச்சு) 12:56, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
சரிசெய்துள்ளேன். எனது பொருளடக்கப் பட்டியல் உங்களுக்குத் தெரியுமா? திட்டத்துக்கான வார்ப்புருவினுள் ஒளிந்திருந்திருக்கிறது. --மதனாகரன் (பேச்சு) 13:02, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


நன்றிகள்[தொகு]

மதனாகரன், நான் அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததால் இன்றுதான் உங்கள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:15, 18 செப்டெம்பர் 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 10:21, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மதனாகரன்[தொகு]

வணக்கம் மதனாஹரன்/தொகுப்பு ௨ அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

-Vatsan34 (பேச்சு) 09:43, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி Vatsan34! --மதனாகரன் (பேச்சு) 09:49, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

--சிவம் 09:53, 30 செப்டெம்பர் 2012 (UTC) வாழ்த்துக்கள் மதனாகரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:54, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள் சிவம், சஞ்சீவி சிவகுமார்! --மதனாகரன் (பேச்சு) 10:00, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மதன்! இந்த ஆண்டு உங்களுக்கு இனியதோர் ஆண்டாக அமையட்டும் !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:03, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)! --மதனாகரன் (பேச்சு) 10:13, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பிறந்த நாழ் வாழ்த்துகள் மதன்! எல்லா வளமும் நலனும் பெற இறைவனை வேண்டுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:14, 30 செப்டெம்பர் 2012 (UTC)

நன்றி பார்வதிஸ்ரீ! --மதனாகரன் (பேச்சு) 10:55, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதன்!!! எல்லா வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம். <3 இப்படிக்கு -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:29, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி தமிழ்க்குரிசில்! --மதனாகரன் (பேச்சு) 11:31, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதன்.--Kanags \உரையாடுக 13:07, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதனாஹரன். சென்ற ஆண்டை விட வரும் ஆண்டு இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:51, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 14:13, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதனாகரன்! --Anton (பேச்சு) 16:27, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதனாகரன், என்னாளும் உங்களிற்கு நன்னாளாகட்டும்--சங்கீர்த்தன் (பேச்சு) 16:30, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள் Kanags, தினேஷ்குமார் பொன்னுசாமி, கலை, Anton, சங்கீர்த்தன், செல்வா, மணியன்! --மதனாகரன் (பேச்சு) 10:35, 1 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

புணர்ச்சி இலக்கண விதி[தொகு]

மதனா!ஒலிப்பெயர்ப்புப் பற்றிய உரையாடல்கள் என்பதில் ப் வரவேண்டும் என்றே எண்ணுகிறேன். இதுபற்றிய இலக்கண விதிகளை அறியத் தருக!.அதேபோல, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி என்பதிலும் ச் பற்றி தெளிவுபடுத்துக.-- உழவன் +உரை.. 03:51, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆம். ப் வரவேண்டும். வன்றொடர்க் குற்றியலுகரவீற்றின் (வினைத்தொகை போன்ற விதிவிலக்குகள் உண்டு.) முன் வரும் வல்லினம் மிகும். ஆகவே, ஒலிபெயர்ப்புப் பற்றிய உரையாடல்கள் என்பதே சரியானது. இதே போலவே ழகரவீற்றின் முன் வரும் வல்லினம் மிகும் (விதிவிலக்குகள் உண்டு). மேலும் தெளிவு பெற ஆறுமுகநாவலருடைய இலக்கணச் சுருக்கத்தில் புணரியலைப் பாருங்கள். --மதனாகரன் (பேச்சு) 11:09, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
ஐயத்தை தெளிவுபடுத்தி மேலும் கற்க வழிகாட்டியமைக்கு நன்றி.மதனா!-- உழவன் +உரை.. 13:19, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]


தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

நீங்கள் நேரடியாகப் பங்களிப்பது ஆயின், கட்டுரை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இலங்கையில் உள்ள மாணவர்களின் போக்குவரத்து/தங்குமிடச் செலவுகள் தேவை ஆயின் ஏற்றுக் கொள்ளப்படும். நேரடியாகப் பங்களிக்க முடியாவிட்டாலும் கட்டுரை மாநாட்டு மலர் அல்லது நூலகம் ஆய்விதழில் இடம்பெறலாம். நன்றி. --Natkeeran (பேச்சு)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம், மதன். நீங்கள் நிருவாகப் பொறுப்பு எடுத்துப் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு விருப்பம் எனில், விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:53, 4 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பரிந்துரைப்பதில் எனக்கு உடன்பாடே. நன்றி இரவி! --மதனாகரன் (பேச்சு) 05:16, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இலங்கை வரலாறு தொடர்பில்[தொகு]

நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் இலங்கை வரலாறு தொடர்பில் இலங்கையில் தொடரும் சிக்கல்களை ஓரளவுக்கேணும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இருப்பினும் சில குறிப்புகள்: இலங்கை வரலாறு தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களாலும், அரச கல்வியின் ஊடாகவும் மகாவம்சம் நூலை ஆதாரமாகக் கொண்டு அல்லது அவற்றில் உள்ளவற்றை மெய்பிக்கும் வகையில் சிங்களவருக்கு ஆதரவான நிலையிலேயே "இலங்கை வரலாறு" காட்டவும் கற்பிக்கவும் படுகிறது. (பரீட்சையில் தேர்வு எழுதுவதற்கு வேண்டுமானால் அதனைப் பின்பற்றலாம்.) ஆனால் மகாவம்சம் நூல் குறிப்பிடாத, இலங்கை அரசக் கல்வியில் வெளிக்காட்டப்படாத, இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பெருந்தொகையான பிராமிச் சாசனங்களில் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் நிறையவே உள்ளன. சிலவிடங்களில் செய்யப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் போது தமிழ்ச் சாசனங்கள் காணப்பட்டவுடன் அந்த ஆய்வு அப்படியே இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. கண்டெடுக்கப்பட்டவற்றவைகளும் திட்டமிட்டு இலங்கை அரசாலும், (சில சிங்கள ஆதரவு) வரலாற்றாய்வாளர்களாலும் மறைக்கப்படுவதையும் அறியக்கூடியதாக உள்ளது. எனவே இலங்கை வரலாற்றுத் தகவல்களை தொகுக்கும் போது மேற்கூறியவற்றையும் கருத்தில் கொண்டு ஏற்கத்தக்க சான்றுகளுடன் நாம் விக்கியில் தொகுக்க வேண்டும். இது சற்று கடினமான பணி. என்றாலும் இலங்கை வரலாற்றையறிய விரும்புவோருக்கான இன்றியமையா பணியாக அமையும். இதற்கு கா. இந்திரபாலா, முருகர் குணசிங்கம், சி பத்மநாதன், ரகுபதி, புஸ்பரட்ணம் உட்பட ஆங்கில, சிங்கள வரலாற்றாசிரியர்களின் தொல்பொருளாய்வு அறிக்கைகளையும் நூல்களையும் சான்றுகளாகக் கொண்டு தொகுத்தலே முழுமையாக இருக்கும். இப்போதைக்கு இவ்வாக்கத்தைப் பார்க்கவும். தொல்லியல், தமிழ் பௌத்தம், தமிழ் மொழியின் தொன்மை --HK Arun (பேச்சு) 09:02, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பி.கு:தமிழ் விக்கிப்பீடியா புதிய தலைமுறையினர் கைகளுக்கு மாறுகிறது. இதில் உங்கள் நிர்வாக அணுக்கம் சிறப்பாக இருக்கும் என்பதில் துளியேனும் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்! --HK Arun (பேச்சு) 09:05, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பு[தொகு]

நிருவாகப் பொறுப்பு ஏற்க முன்வந்தமைக்கு நன்றி, மதன். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஏற்பைத் தெரிவியுங்கள். --இரவி (பேச்சு) 04:41, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:19, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:48, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

மதனாகரன், தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 06:50, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி Kanags! --மதனாகரன் (பேச்சு) 06:53, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:00, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கும், உங்கள் விக்கிப் பணி தொடரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 20:40, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் மதனாகரன். --Natkeeran (பேச்சு) 01:38, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் மதனஹரன். உங்கள் முயட்ச்சிக்கும் உங்களின் திறமைக்கும் கிடைத்த வெற்றியை ஈட்டி நான் பெருமகிழ்ச்சி அடிக்கிறேன். நன்றி வாழ்த்துக்கள்..--சிவம் 01:54, 15 சனவரி 2013 (UTC)

நன்றி! --மதனாகரன் (பேச்சு) 05:56, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நான் மட்டும் தனியா போகப்போரனேன்னு நினைச்சேன். பயபுள்ள சிக்கிடுச்சு. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:30, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி!
👍 விருப்பம், சீரிய பணி தொடர வாழ்த்துகள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:56, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழறிஞரே[தொகு]

தமிழறிஞரே, உங்கள் கருத்தை இங்கு தெரிவிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:28, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]


முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்[தொகு]

நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:49, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், மதனாஹரன்/தொகுப்பு ௨!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:09, 2 பெப்ரவரி 2013 (UTC)

கவனிக்கவும்[தொகு]

விலங்குப் பண்ணையின் பண்கள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 12:07, 8 மார்ச் 2013 (UTC)

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்[தொகு]

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:41, 13 மார்ச் 2013 (UTC)


பதக்கம்[தொகு]

சிறந்த மாணவப் பயனர் பதக்கம்
மதனாகரன். க.பொ.த. (சா.த) சோதனையில் ஒன்பது பாடங்களிலும் அதியுயர் சித்திகள் பெற்றமைக்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கல்விப் பயணத்தில் மென்மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்!--Kanags \உரையாடுக 23:41, 4 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Anton (பேச்சு) 00:41, 5 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 5 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:58, 5 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 22:39, 5 ஏப்ரல் 2013 (UTC)


Article request: Transport for London[தொகு]

Hi! Are you interested in starting an article on en:Transport for London, the transport agency of London? I discovered that it has a website in Tamil so it can help you write the article. Thank you WhisperToMe (பேச்சு) 20:54, 17 ஏப்ரல் 2013 (UTC)

என்ன செய்யலாம்[தொகு]

[பேச்சு:அண்டர்மகன் குறுவழுதியார்|விக்கி ஆதாரம் அற்றதா]--Sengai Podhuvan (பேச்சு) 18:42, 23 மே 2013 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]


கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]