பிரம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டனை கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பிரம்பு
 

பிரம்பு உலகெங்கும் வளரும் போவேசியே குடும்பத்தைச் சேர்ந்த நெகிழ்ச்சித்தன்மையான வன்தண்டைக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும். இது இரண்டு பேரினங்களைக் கொண்டது. பேரினம் அருண்டோ (Arundo) மத்திய தரைக்கடல் முதல் தூரக்கிழக்கு நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மற்றைய பேரினம் அருண்டினாரியா (Arundinaria)

அருண்டா பேரினத்தைச் சேர்ந்த பிரம்பு தாவரம்

பிரம்பின் பயன்கள்[தொகு]

பிரம்புக் கூடை

பிரம்பு அதன் தடிப்பு, உறுதி நெகிழ்ச்சித் தன்மை என்பவற்றுக்கு ஏற்ப வேறுபட்ட பயன்பாடுகளுக்கு பயன் படுத்தப்படுகின்றது. உறுதிமிக்க பிரம்பு ஊன்றுகோல், வீட்டுக் கூரை, கதிரை, புத்தக அலுமாரி, என்பன தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. வளையும் தன்மையான பிரம்பு தண்டனை வழங்கும் கோல் ஆகவும் பூச்சாடி முதலான அழகுப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

பிரம்பின் குறியீடுகள்[தொகு]

சாதாரண பிரம்பு: சாதாரண பிரம்பு கண்டிப்பான ஆசிரியரின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது.

வெள்ளைப்பிரம்பு: கட்புலக் குறைபாட்டின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்பு&oldid=2873503" இலிருந்து மீள்விக்கப்பட்டது