பிரதிஷ்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதிஷ்டை என்பது ஆகமங்கள் கூறும் ஆலய அமைப்பு தொடர்பான கிரியை முறைகளுள் ஒன்றாகும். ஆலயம் அமைக்கப்படும் போது கர்ஷணம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம், உற்ஷவம் முதலான நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றன. பிரதிஷ்டையின் போது புதிய விக்கிரங்களோ அன்றி ஏலவே பிரதிஷ்டை செய்யப்பட்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்ட விக்கிரங்களோ முறைப்படி அளவுப் பிரமானம், இயந்திரம் என்பன பலவற்றின் அடிப்படையில் உரிய பீடத்தில் அமர்த்தப்பட்டு மருந்து எனும் கலவையினால் பந்தம் செய்யப்படும். பிரதிஷ்டையின் மறுநாள் தைலாப்பியம் எனப்படும் எண்ணெய்க்காப்பு சார்த்தும் கிரியை நடைபெற்று கும்பாபிஷேகத்தின் மூலம் அவ் விக்கிரகங்களுக்கு உயிர்ச்சக்தி வழங்கப்படும்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிஷ்டை&oldid=1519994" இலிருந்து மீள்விக்கப்பட்டது