அறிவியல் மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் மேலாண்மை (Scientific management) தொழில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கோடு பிரெடெரிக் வின்சுலோ டெய்லர் என்பார் 1880கள் மற்றும் 1890களில் உருவாக்கிய கோட்பாடு ஆகும். இது "டைலரிசம்" (Taylorism) அல்லது "டைலரின் ஒருங்கியம்" (Taylor system) என்றும் அழைக்கப்படும். இக்கொள்கை குறித்து அவர் எழுதிய ஷாப் மேனஜ்மென்ட்,(Shop management-1905), தி ப்ரின்சுபில்ஸ் ஒப் மேனஜ்மென்ட் (The principles of management-1911) ஆகிய நூல்களில் விவாதித்துள்ளார்[1].

மரபு வழிப்பட்ட, அச்சமூட்டும் விதிமுறைகளினால் ஆன முடிவெடுத்தலை கைவிட்டு, பணியாற்றும் இடத்தில் தனி நபரை கூர்மையாக கவனித்து அதன் மூலம் உருவாக்கப்படும் துல்லிய செய்முறை அடிப்படையிலேயே முடிவெடுக்க வேண்டும் என்று டெய்லர் கூறுகிறார்.தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மேலாண்மை நிர்வாகிகளுக்கு கிடைத்த ஒரு கருவி அறிவியல் மேலாண்மை ஆகும்.

நாம் செய்யும் ஒரு வேலையை சிறு கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு சிறு கூறுக்கும் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதைக் கணக்கிட்டு அதன் மூலம் ஒரு வேலையை செய்வதற்கு ஒரு சராசரி மனிதனுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதைக் கண்டறியும் முறையினை கில்பர்த் என்பவர் உருவாக்கினார் இதற்கு நேரம் மற்றும் இயக்கம் பற்றிய ஆய்வு- (Time and Motion Study) என்று பெயர்.


மேற்கோள்கள்[தொகு]

  1. பிரெடெரிக் வின்சுலோ டெய்லர் (1911). "The Principles of Scientific Management". ஹார்ப்பர் & பிரதர்ஸ். Archived from the original on 2009-02-26. பார்க்கப்பட்ட நாள் 2009-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_மேலாண்மை&oldid=3574769" இலிருந்து மீள்விக்கப்பட்டது