20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (1954 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
20,000 லீக்ஸ் அண்டெர் த சீ
20,000 Leagues under the Sea
இயக்கம்ரிச்சர்ட் ப்லெஷர்
தயாரிப்புவால்ட் சிஸ்னி
கதைஏர்ள் பெல்டன்
இசைஅல் ஹோப்மேன்
பௌல் ஸ்மித்
நடிப்புகேர்க் டக்லஸ்
ஜாமெச் மேசன்
பௌல் லூகாஸ்
பீட்டர் லோரெ
ஒளிப்பதிவுபிரான்ஷ் பௌல்னெர்
படத்தொகுப்புஎமோ வில்லியம்ஸ்
விநியோகம்வோல்ற் டிஸ்னி பிக்சர்ஸ்
வெளியீடு1954
ஓட்டம்2 மணி, 1 நிமிடங்கள், 48 வினாடிகள்
மொழிஆங்கிலம்

20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (20,000 Leagues Under the Sea) திரைப்படம் 1870 களில் வெளியிடப்பட்ட ஜூல்ஸ் வெர்னியின் நாவலின் தழுவலிலிருந்து வெளிவந்த திரைப்படங்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமாகும்.[1]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

1868 களில் கடலின் நடுவில் இராட்சத மிருகமொன்று அலைவதாகக் கேள்விப்படும் ஆசிரியரான பியெரி அரோனாக்ஸ் மற்றும் அவரது உதவியாளரான கொன்சீலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசின் உதவியுடன் சைகோன் என்றழைக்கப்பட்ட பகுதிக்குச் செல்கின்றனர். அங்கு செல்லும் பொழுது இராட்சத விலங்கு ஒன்று அவர்களது படகினைத் தாக்குவதை உணர்கின்றனர். பின்னர் அது ராட்சத மிருகமல்லவெனவும் அது மனிதால் செய்யப்பட்ட இராட்சத மிருகம் போன்ற அமைப்பைக் கொண்ட போர்க்கப்பல் எனவும் புரிந்து கொள்கின்றனர். அக்கப்பலைத் தலைமை தாங்கிய கப்பல் படைத் தளபதி நீமொ அவர்களை பணயக் கைதிகளாக பிடித்து அவனது கண்டுபிடிப்பான அக்கப்பலுக்குள் அழைத்துச் செல்கின்றான். மேலும் அரோனாக்ஸிடம் தனது இந்தக் கண்டுபிடிப்பின் காரணம் ஏனெனில் அண்டை நாடுகள் பல மக்களை அழிப்பதற்காக வெடி மருந்துகளை ஏற்றிக்கொண்டு செல்வதைத் தடுப்பதற்காகவே தனது இந்தத் திட்டம் எனவும் அவ்வாறு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தனது புதிய கண்டுபிடிப்பான இக்கப்பல் மூலம் மோதி அழிப்பதே தனது லட்சியம் எனவும் கூறுகின்றார். பின்னடைவில் அவரது கப்பல் ஒரு ராட்சத கணவாயால் தாக்கப்படவே மூழ்கின்றது. அவர் அக்கப்பலிலேயே மாண்டு கொள்கின்றார். மேலும் அரோனாக்ஸ் மற்றும் அவருடன் கைதிகளாக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "20,000 லீக்ஸ் அண்டெர் த சீ 1954 திரைப்படம் வரலாறு" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்பு[தொகு]

20,000 லீக்ஸ் அண்டெர் த சீ பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம்

20,000 லீக்ஸ் அண்டெர் த சீ திரைப்படம்