கீழ்வாய் அலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்வாய் அலகு என்பது ஒன்றுக்கும் குறைவான (கீழான) எண்களையோ அளவுகளையோ குறிக்கும் அலகு. அரை (1/2), கால் (1/4), அரைக்கால் (1/8), வீசம் (1/16) என்பன போல கீழ்வாய் எண்கள் வழக்கில் உள்ளன. அறிவியலில், பத்தில் ஒரு பகுதியைக் குறிக்க டெசி (deci) என்றும் நூற்றின் ஒரு பகுதியைக் குறிக்க சென்ட்டி (centi), ஆயிரத்தின் ஒரு பகுதியைக் குறிக்க மில்லி (milli) என்றும் கூறும் சொற்களும் கீழ்வாய் அலகுகள்தாம். இப்படிக் கீழ்வாய் அலகுகள் பற்பல உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்வாய்_அலகு&oldid=2741793" இலிருந்து மீள்விக்கப்பட்டது