நீரடிக் காளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரடிக் காளான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
Fungi
பிரிவு:
Basidiomycota
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. aquatica
இருசொற் பெயரீடு
Psathyrella aquatica
J.L. Frank, Coffan, & Southworth

நீரடிக் காளான் அல்லது ரோக் காளான் (ஆங்கிலம்: Rogue mushroom, Underwater Mushroom ; இலத்தின்: Psathyrella aquatica ) ஒரு பூஞ்சைக் காளான் வகையாகும், இதுவரை அறியப்பட்ட காளான் இனங்களில் நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு இனம் இதுவேயாகும். பூஞ்சைகளைப் பற்றிய நூலிதழான மைக்கொலோஜியாவில் 2010இல் இது விபரிக்கப்பட்டது. [1]

இந்தக் காளான் தென் ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ரொபர்ட் கொஃபானால் ஐக்கிய அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் அமைந்துள்ள ரோக் ஆற்றில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. [2] [3] நீரடிக்காளான் ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து நிமிர்ந்து நிற்குமளவுக்கு வலிமை கொண்டதாக உள்ளது. நீருக்குள் வசிக்கும் முதன்முதல் அறியப்பட்ட காளான் எனும் காரணத்தால் 2011 ஆம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்பு[தொகு]

  1. http://species.asu.edu/2011_species08 பரணிடப்பட்டது 2011-06-09 at the வந்தவழி இயந்திரம்
  2. நீரடிக்காளான் காணொளி பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Frank JL, Coffan RA, Southworth D., JL; Coffan, RA; Southworth, D (2010). "Aquatic gilled mushrooms: Psathyrella fruiting in the Rogue River in southern Oregon". Mycologia 102 (1): 93–107. doi:10.3852/07-190. பப்மெட்:20120233. 
  2. "What Lies Beneath: A New Mushroom". Southern Oregon University College of Arts and Sciences. January 1, 2008. Archived from the original on 2008-08-19. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
  3. siskiyoudaily.com (January 25, 2008). "US: Scientists discover new mushroom species in the Rogue Valley". FreshPlaza. http://www.freshplaza.com/news_detail.asp?id=15146. பார்த்த நாள்: 2008-09-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரடிக்_காளான்&oldid=3575477" இலிருந்து மீள்விக்கப்பட்டது