உப பாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப பாண்டவம் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நவீன நாவல் ஆகும். இந்த நாவல் மகாபாரதத்தின் மீதான ஒரு புனைவாகும்.

இந்நாவல் மகாபாரதக்கதையில் வரும் துணைக் கதாபாத்திரங்களின் வழியாக பாரதத்தைச் சொல்லும் கதையாகும்.

அறிமுகம்[தொகு]

வார்த்தைகள் தன் நாவில் புரண்டு விடக்கூடாது என்பதற்காக கூழாங்கற்களை நாவினடியில் வைத்தபடி நிர்வாணியாக நிற்கிறான் விதுரன். யுதிஷ்ட்ரன் யாசிக்கிறான். விதுரன் கூர்மையான ஈட்டியைப் போல ஒரேயொரு பார்வை பார்க்கிறான். பின்பு மரங்களுக்கு இடையே மறைந்துவிடுகிறான். விதுரனின் கூழாங்கற்கள் தெறித்துவிழுகின்றன. அது பாஷையை விழுங்கிவிட்டது.

கங்கையில் யாத்ரீகர்களின் கூட்டம். படகில் யாரோ பாடுகிறார்கள். வேடர்கள் மானைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். மீன்கள் நதியினுள் ஒளிந்து கொண்டுவிட்டன. வானம் ரத்தநிறம் கொள்கிறது. குதிரைகளில் வீராதிவீரர்கள் சண்டையிடுகிறார்கள். கங்கைதான் சாட்சியாக இருக்கிறாள். கங்கையின் கண்களைப் பாருங்கள். அதில் உங்கள் மூதாதையர்களின் சாடை ஒளிந்து கொண்டிருக்கும். பாடல் நதியில் மிதந்து போய்க் கொண்டேயிருக்கிறது.

உப பாண்டவம் நவீன நாவல். மஹாபாரதத்தின் மீதான புனைவு. இது விதுரனின் நாவில் அடக்கிய கூழாங்கல்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன் - அட்சரம் வெளியீடு - பின் அட்டைக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப_பாண்டவம்&oldid=2057235" இலிருந்து மீள்விக்கப்பட்டது