சௌர்யா சக்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌர்யா சக்கரம்
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்கால வீரச்செயல்
பகுப்பு தேசிய வீரம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) அசோகச் சக்கரம், வகுப்பு III
(1967 வரை)
விருது தரவரிசை
கீர்த்தி சக்கரம்சௌர்யா சக்கரம் → இல்லை

சௌர்யா சக்கரம் (Shaurya Chakra) போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் மூன்றாவது நிலையில் கீர்த்தி சக்கரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள உயரிய விருதாகும். சேனா பதக்கங்களுக்கு மேல்நிலை விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இது அமைதிக் காலத்தில் வழங்கப்படும் வீர சக்கரம் எனலாம். 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோகச் சக்கரம், வகுப்பு III என குறிப்பிடப்பட்டது. விருதுகளில் வகுப்புகளை புகுத்திட விரும்பாத இந்திய அரசு சௌர்ய சக்கரம் எனத் தனிப்பெயரிட்டது.

இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது.

சூலை, 1999 முதல் காவல்துறை, தீயணைப்புதுறையினரைத் தவிர பிற அனைத்து வாழ்க்கைத்துறை குடிமக்களுக்கும், ஆண்பெண் பாகுபாடின்றி வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaurya Chakra இந்தியப் படைத்துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌர்யா_சக்கரம்&oldid=2121957" இலிருந்து மீள்விக்கப்பட்டது