பேச்சு:வேளாளர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவேந்திர குலத்தான் எல்லாம் வேளாளர் இல்லையா?

இல்லை  !


பயனர்:MakizNan| மகிழ்நன் ]] 01:46, 13 பெப்ரவரி 2010 (UTC)

  • கட்டுரை குறுங்கட்டுரையாகவே பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொன்றாக இணைக்கலாம். கட்டுரையை விரிவுபடுத்துவதில் தாங்களும் ஒத்துழைக்கலாம். --Theni.M.Subramani 02:10, 13 பெப்ரவரி 2010 (UTC).

பள்ளர்களில் ஒரு சிலர் இன்று ஆங்காங்கு வெள்ளாமை செய்தாலும், இவர்கள் வேளாளர் பிரிவினர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பள்ளர் என்ற தங்கள் ஜாதி பெயரை தேவேந்திர குல என்று இவர்கள் மாற்றிக்கொண்டது கவனத்திற்குரியது. இவர்கள் வேளாண் தொழிலாளர்கள் என்றுதான் மூல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆகையால், வேளாளர் என்ற தலைப்பில் சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்டுள்ள பள்ளர் என்ற சொல் நீக்கப்படுகிறது--Jaivanth (பேச்சு) 13:55, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

வேளாளர் பெயர் பற்றிய கருத்து[தொகு]

//எனது ஊரில் அத்தனை சாதியினரும் (கள்ளர், மள்ளர், மறையர், அருந்ததியர், [(அகமுடையார்), (நாடார்)] வேளாண்மையைச் சார்ந்தே உள்ளனர்.

அதனால் அனைவரையும் வேளாளர் என அழைக்கலாம். இது "வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்கள் அனைவரும் சாதீய அமைப்பில் "வேளாளர்" என்று அழைக்கப்பட்டனர்" என்ற உங்கள் கட்டுரையின்படி அமையும் எனக் கருதுகிறேன்//

மேலே வேளாளர் பெயர் பற்றி வரும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் வேளாளர் என தற்போது அழைத்துக் கொள்பவர்களைத்தான் இதில் சேர்க்க முடியும். விவசாயம் சார்ந்து இருப்பவர்களை விவசாயிகள் என அழைக்கலாம். அல்லது உழவர்கள் என அழைக்கலாம். அருந்ததியர், நாடாரை வேளாளர் என்று அழைப்பது தற்போது வழக்கில் இல்லை. முக்குலத்தோர் மெல்லத் திரிந்து வேளாளர் ஆயினர் எனப் பலமொழி உண்டு என்பதால் அது பற்றி சிறுகுறிப்புத் தரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:45, 20 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என்றும் உள்ளது. கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 07:47, 21 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பள்ளர்களில் ஒரு சிலர் இன்று ஆங்காங்கு வெள்ளாமை செய்தாலும், இவர்கள் வேளாளர் பிரிவினர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பள்ளர் என்ற தங்கள் ஜாதி பெயரை தேவேந்திர குல வெள்ளாளர் என்று இவர்கள் மாற்றிக்கொண்டது கவனத்திற்குரியது. இவர்கள் வேளாண் தொழிலாளர்கள் என்றுதான் மூல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆகையால், வேளாளர் என்ற தலைப்பில் சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்டுள்ள பள்ளர் என்ற சொல் நீக்கப்படுகிறது.

இல்லத்துப் பிள்ளைமார் சோழிய வெள்ளாளருடன் தொடர்புடையவர்கள் என்று பேரூர் மடத்தில் உள்ள sishri ராமச்சந்திரன் தயாரித்த போலி செப்பேடு மட்டும் சொல்வதாலும், இல்லத்து பிள்ளைகளின் வரலாறு தாங்கள் சிங்கள தேசத்தில் இருந்து வந்ததாகவும் கூறுவதாலும், ஈழவர் கள்ளிறக்கும் தொழிலை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதாலும், இல்லத்து பிள்ளைமார், வேளாளர் என்ற கோட்பாட்டில் சம்பந்தமில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதை நீக்கவேண்டியுள்ளது --Jaivanth (பேச்சு) 13:57, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

இல்லத்துப் பிள்ளைமாரை வேளாளர் என குறிப்பிடுவதில்லை. ஆனால் பள்ளரை தேவேந்திர குல வேளாளர் என்று கூறும் வழக்கு இன்றுண்டு. அதனால் அதை நீக்க முடியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:22, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவது ஏற்புடையது அல்ல தென்காசி சுப்பிரமணியன் அவர்களே

மேலும் நீங்கள் செய்யும் காரியங்களால் மரபுரிமை பறிக்கபடுவதாகவே இருக்கிறது

வரலாற்றில் எந்த இடத்திலும் பள்ளர்களை வேளாளர் என்று கூறப்படவேயில்லை[தொகு]

பள்ளர் தேவேந்திர குல வேளாளர் என்பது ஆதாரமே இல்லாதபோது அவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஏற்க முடியாது Karthi Sankar Pillai (பேச்சு) 11:18, 3 சூன் 2018 (UTC)== வரலாற்றில் எந்த இடத்திலும் பள்ளர்களை வேளாளர் என்று கூறப்படவேயில்லை ==[பதிலளி]

தங்கள் அன்புள்ள தேனூர் சேது மாதவன்,வேளாளர் ஒருங்கிணைப்பு குழு,மதுரை.


தமிழர்களை பிழவு படுத்தி திராவிடத்தால் ஏற்படுத்தப்பட்ட புதிய யுகமே வேளாளர் பிரச்சனை.

பள்ளர்கள் உழுகுடிகளே, விவசாயிகளே பிறகு ஏன் வேளாளர் என அவர்களை அழைக்க கூடாது என்பது சரியான கேள்வி தான்.அதற்கான விளக்கத்தை நாம் தெளிவு படுத்தியே ஆக வேண்டும்...வாருங்கள் பார்ப்போம்.

       தமிழகத்தில் விவசாயத்தை தொழிலாக கொண்டது அனைத்து சாதியினரும் தான்,பிறகு ஏன் வேளாளர் என்று பிள்ளை,கவுண்டர்,முதலியார் பட்டம் கொண்டவர்களை அழைக்கின்றோம்,அவர்களை மட்டும் சேர குல வேளாளர்,சோழியவேளாளர்,பாண்டிய வேளாளர்,கார்காத்தார்,கொங்கு வேளாளர்,நன்குடி வேளாளர் என்று சாதிய பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள்.அரசு சாதிய சான்றிதழ்களில் இன்றுவரை வேளாளர் என்று பெயர் உடன் வாழ்ந்து வரும் பிள்ளை,கவுண்டர்,முதலியார் ஆகிய பட்டங்களை கொண்டவர்களே வேளாளர் ஆவர்.
      வேளாளர் எனப்படும் இவர்கள் முதன்முதலில் விவசாயத்தை தோற்றுவித்தவர்கள்,தற்போது உள்ள சூழலில் பள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர் என எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் போராடுவது வேடிக்கையாக உள்ளது.
       மேலும் வேளாளர்கள் என்றால் நீங்கள் எந்த தினை எனக் கேட்கிறீர்கள்,ஏனென்றால் அவர்கள் மருத தினையாம்.சரி மருதத்தினையில் வாழ்ந்தால் குறிஞ்சி கடவுள் பழநி  முருகனை ஏன் சொந்தம் கொண்டாடுகின்றனர்.சரி அதை விடுவோம் இந்திரன் வம்சம் என்கின்றனர் தமிழகத்தில் எந்த இந்திரன் கோவில் உள்ளது அதில் எந்த பள்ளர்கள் குல தெய்வமாக வழிபாடு செய்கின்றனர் என்று கேட்டால் இல்லை.
       மருத நிலத்தில் மள்ளர்கள் என சொல்லுகிறீர்கள்,மள்ளர்கள் யார் என்பதற்கு ஆதாரம் உண்டா இல்லை.
        வேளாளர் ஆகிய எங்களுக்கு எந்த தினை என்று கேட்டீர்கள் ஐந்தினைகளிலும் விவசாயம் உள்ளது,மருத நிலத்தில் மட்டுமா விவசாயம் உள்ளது.ஐந்தினைகளை ஆண்டு உழுவித்து விவசாயத்தை உருவாக்கியவர்கள் வேளாளர்.

மூவேந்தர்கள் பெயர்களை கொண்ட ஒரே சாதி வேளாளர் சாதி,அடுத்த பதிவில் காரணம் சொல்கிறேன்.


பள்ளர் தேவேந்திர குல வேளாளர் என்பது ஆதாரமே இல்லாதபோது அவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஏற்க முடியாது Karthi Sankar Pillai (பேச்சு) 11:18, 3 சூன் 2018 (UTC)[பதிலளி]

வெள்ளாளர்/ வேளாளர்[தொகு]

பக்கத்தின் பெயரை வெள்ளாளர்/ வேளாளர் என்று மாற்றவும் Hari Vellalan (பேச்சு) 12:08, 6 மே 2020 (UTC)[பதிலளி]

உட்பிரிவுகள்[தொகு]

வெள்ளாளர் மக்களில் உள்ள உட்பிரிவுகள் Info Box இல் தவறாக உள்ளது. வெள்ளாளர் சமூகத்தில் உள்ள 13 உட்பிரிவுகள் பட்டியல் கீழே ஆதாரத்தில் உள்ளது. திருத்தம் செய்யவும். (1) பாண்டி(ய) வெள்ளாளன். (2) சோழிய வெள்ளாளன். (3) தொண்டைமண்டல வெள்ளாளன். (4) துளுவ வெள்ளாளன். (5) கொங்கு வெள்ளாளன். (6) அகம்படிய வெள்ளாளன். (7) காரைக்காட்டு வெள்ளாளன். (8) அரும்புகட்டி வெள்ளாளன். (9) கும்பிடு சட்டி வெள்ளாளன். (10) ஆறுநாட்டு அல்லது மொட்டை வெள்ளாளன். (11) மலைகாணும் வெள்ளாளன். (12) சங்குத்தாலி வெள்ளாளன்.


http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=250&pno=120 Tirukodimadachengunrur (பேச்சு) 15:31, 12 சூலை 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: வணக்கம்

வெள்ளாளர்களின் உட்பிரிவு info box இல் தவறாக உள்ளது.


வெள்ளாளர்களின் 12 உட்பிரிவுகளை மேலே ஆதாரத்துடன் குறிப்பிட்டு உள்ளேன்.

எனவே தவறான தகவலை நீக்கிவிட்டு, சரியாத தகவலை போடுங்க.

நன்றி. Tirukodimadachengunrur (பேச்சு) 07:36, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

@Tirukodimadachengunrur: நீங்கள் சாதியை சொல்கிறீர்கள், ஆனால் Infoboxஇல் மண்டல வாரியாக குறிப்பிட்ட உட்பிரிவுகளை(பட்டம்) தரப்பட்டுள்ளது. உ.தா:பாண்டி(ய) வெள்ளாளர் என்பது ஒரு தனி சாதி, சோழிய வெள்ளாளர் என்பது ஒரு தனி சாதி. நீங்கள் மேலே குறிப்பிட்ட 12 சாதிகளும், ஒரு தனித்தனி சாதிகள். பொதுவாக வேளாளர் சாதியினரும் பயன்படுத்தும் பட்டம் இருக்கிறதே, அதைத் தான் உட்பிரிவாக infoboxஇல் தரப்பட்டுள்ளது. வேளாளர் சாதியினர் பயன்படுத்தும் பட்டங்கள் கவுண்டர் பட்டத்தை (கொங்கு வேளாளர்)கள் பயன்படுத்துகின்றனர், முதலியார் பட்டத்தை (தொண்டைமண்டல வேளாளர்)கள் பயன்படுத்துகின்றனர், பிள்ளை பட்டத்தை (பாண்டிய வேளாளர் மற்றும் சோழிய வேளாளர்)கள் பயன்படுத்துகின்றனர். இதன் அடிப்படையில் தான் Infoboxஇல் தரப்பட்டுள்ளது, சாதியையும், பட்டத்தையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:41, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: கவுண்டர், முதலியார், பிள்ளை என மூன்று பட்டங்கள் மட்டும் தான் வெள்ளாளர் பயன்படுத்துகிறார்களா? Tirukodimadachengunrur (பேச்சு) 17:50, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

@Tirukodimadachengunrur: நான் அப்படி சொல்லவில்லையே, Infoboxஇல் மண்டல வாரியாக குறிப்பிட்ட உட்பிரிவுகளை(பட்டம்) தரப்பட்டுள்ளது என்று தானே சொன்னேன். அப்படி அனைத்து உட்பிரிவுகளை Infoboxஇல் தந்தால், Infobox பெரியதாக இருக்கும். அப்படி Infobox பெரியதாக இருந்தால், கட்டுரையின் வடிவமைப்பு மாறுபடும். மண்டல வாரியாக குறிப்பிட்ட உட்பிரிவுகள் என்றால்: தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் மற்றும் கொங்கு மண்டலம் அடிப்படையில் பெரும்பான்மையாக வாழுகின்ற வேளாளர்களின் பட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையில் விரிவாக பட்டங்களின் பெயர் தரப்பட்டுள்ளது. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு)

@Gowtham Sampath: உங்கள் விளக்கத்திற்க்கு நன்றி Tirukodimadachengunrur (பேச்சு) 18:12, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேளாளர்&oldid=3292645" இலிருந்து மீள்விக்கப்பட்டது