கருவூரார் பூசாவிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவூரார் பூசாவிதி என்னும் நூல் கருவூரில் வாழ்ந்த கருவூரார் எனும் சித்தரால் செய்யப்பட்ட நூல். இவரது நூலில் கையாளப்பட்டுள்ள சொற்கள் இவரை 16ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளுகின்றன. இந்த நூலில் 30 விருத்தப் பாடல்கள் உள்ளன.

நூலில் உள்ள சில செய்திகள்
  • பாணம் வைத்து, தேவி பூசை செய்து சீர் பெற்றவர்கள் 18 சித்தர்கள் [1]
  • மலர் போட்டுப் பூசித்தால் ஆதியை ஐம்பொறிகளால் காண முடியாது. மனத்தை ஒருமைப்படுத்த வேண்டும். [2]
  • பாம்பணி பூண்ட சிறு பெண்ணாக அறிவைப் பறிக்க வருவாள்[3]
ஒரு பாடல் பகுதி
ஆம்எனவும் ஊம்எனவும் இரண்டும் கூட்டி
அப்பனே ஓம்என்ற மூன்றும் ஒன்றாய்
நாம்எனவும் தாம்எனவும் ஒன்றே ஆகும்
நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான். [4]
நகைச்சுவை
  • தேவியைக் கண்ணால் கண்டவர்களுக்கெல்லாம் ‘நான்தான் பெண்டாட்டி’ என்னும் கற்பு கொண்டவள். [5]
  • நாணம் இல்லாமல் ஊருக்கு நடுவே அமர்ந்திருக்கிறாள். [6]
நூலில் பயிலும் பிற்காலச் சொற்கள்
காணும், தோணும் போன்ற வினை வடிவங்கள் [7]
வாலிப முறுக்கில் உள்ள வாலையை(சத்தியை) ‘துரைப்பெண் ஆத்தாள்’ எனல். [8]
உற்பனமாய்ப் பார்த்தவர்கள் (மனக்கண்ணால் உற்று நோக்கியவர்கள்) [9]
செணனம் (பிறப்பு) [10]

கருவிநூல்[தொகு]

  • சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
  • வீ. ஜெயபால் (பதிப்பாசிரியர்), அருள்மிகு சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி, அகத்தியர் சன்மார்க்க சங்கம் வெளியீடு, தஞ்சாவூர், 2008

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாடல் 23
  2. பாடல் 7
  3. பூணாத பணிபூண்டு சிறுபெண் ணாக
    போதம்எனும் பொருள்பறிக்க வருவாள் கண்டாய். - பாடல் 13
  4. பாடல் 11
  5. காணப்பா இவளுடைய கற்பு மெத்த
    கண்டவர்க்குப் பெண்ணரசு நானே என்பாள் - பாடல் 3
  6. பாடல் 5
  7. பாடல் 1
  8. பாடல் 2
  9. பாடல் 30
  10. பாடல் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூரார்_பூசாவிதி&oldid=1809739" இலிருந்து மீள்விக்கப்பட்டது