சொற்பொருள் மாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்று மொழியியலில் சொற்பொருள் மாற்றம் என்பது ஒரு சொல் தொடர்பில் அதன் பொருள்களில் ஒன்றில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பல்வேறுபட்ட விதத்தில் பொருள் குறித்து நிற்கின்றது. காலப்போக்கில் இவ்வாறான அம்சங்களைப் புதிதாகச் சேர்க்கவோ, நீக்கவோ அல்லது மாற்றவோ முடியும். பல சமயங்களில் இத்தகைய மாற்றங்கள் காலம் மற்றும் இட வேறுபாடுகளினால், சொற்களை முற்றிலும் வேறான பொருள் குறிப்பவையாக மாற்றி விடுகின்றன. ஒரு கருத்துருக்களுக்கான குறிப்புச்சொல் (designation) பெறப்படுவதற்கான மூன்று வழிமுறைகளில் சொற்பொருள் மாற்றமும் ஒன்று.

சொற்பொருள் மாற்றத்துக்கான காரணிகள்[தொகு]

1990 களில் இறுதியில் பிளாங்க் (Blank) என்பவர் சொற்பொருள் மாற்றங்களுக்கான காரணிகளைப் பட்டியலிட்டார். பின்னர் 2004 இல் இப்பட்டியலை கிர்சேகா (Grzega) என்பவர் சற்று விரிவாக்கினார். இக்காரணிகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:

  • மொழியியல் காரணிகள்
  • உளவியல் காரணிகள்
  • சமூக பண்பாட்டுக் காரணிகள்
  • பண்பாட்டுக் காரணிகள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்பொருள்_மாற்றம்&oldid=2741089" இலிருந்து மீள்விக்கப்பட்டது