கிராமின் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராமின் வங்கியின் இலச்சினை

கிராமின் வங்கி (வங்காள மொழி: গ্রামীণ ব্যাংক) என்பது பிணை வைப்பின்றி வறியவர்களுக்கு சிறுகடன்கள் வழங்குவதற்கென வங்களாதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிதியமைப்பாகும்.இதன் தாபகர் முனைவர் முகமது யூனுஸ் ஆவார். இவ் வங்கி சிறுகடன் வழங்குவது மட்டுமின்றி வைப்புக்களை ஏற்றல், வங்கிசாரா சேவைகளை வழங்குதல், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் வணிக அமைப்புக்களை நடாத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. ஏழைமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும்,தாபகர் யூனுஸிற்கும் 2006ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தோற்றம்[தொகு]

டாக்காவில் உள்ள கிராமின் வங்கியின் கட்டிடம்

கிராமின் வங்கியின் தாபகர் முகமது யூனுஸ் அமெரிக்க பல்கழைக்கழகத்தில் பொருளியல் முனைவர் பட்டம் பெற்றவராவார். 1976 ஆம் ஆண்டு ஜோப்ரா என்ற தன்னுடைய கிராமத்தில் மூங்கில் இருக்கைகள் செய்யும் ஒரு பெண்மணியுடன் பேச நேர்ந்தபோதே யூனுசுக்கு சிறுகடன் பற்றிய எண்ணம் உருவானது.அப்பெண்மணி உள்ளூர் வட்டிக்காரரிடம் கடன் பெற்று மூங்கில் வாங்கி, இருக்கைகள் தயாரித்து,விற்ற பணதில் பெரும்பாலானதை கடன் கொடுத்தவருக்கு திருப்பித் தரவேண்டிய அவல நிலையை அறிந்தார்.அவருக்கு எப்படியாவது உதவ முடியுமா என்று யோசித்திருக்கிறார். பின் அவரும், அவருடைய மாணவர்களும் அக்கிராமத்தில் சிறிய ஆய்வை மேற்கொண்டபோது அந்த பெண்மணி போலவே மொத்தம் 42 மூங்கில் கூடை முடைபவர்கள் அதே பிரச்சனைக்கு உட்பட்டிருப்பதாக தெரியவர, அவர்கள் அனைவரும் செலுத்தவேண்டிய தொகையை அவர்கள் சார்பில் யூனுஸ் பணம் செலுத்தினார்.பிறகு அவர்கள் அனைவரும் அவருக்கு அந்த தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டனர். இச்சம்பவமே ஏழைகளுக்கு கடனுதவி செய்யும் திட்டத்தை மேற்கொள்ள காரணமாக இருந்தது.

கிராமின் வங்கி(தமிழில்:கிராமிய வங்கி,ஆங்கிலதில்:Bank of the Villages) முகமது யூனிஸின் எண்ணதில் உருவானதொன்றாகும்.இவ்வங்கி 1976 ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது,இவ்வங்கியின் சேவையினை சிட்டகொங் பல்கழைக்கழகத்தினை சூழவுள்ள பிரதேங்களுக்கு ஆரம்பித்தது.1983ல் வங்காளதேசதின் சட்டப்படியான வங்கி அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. 2006 நடுப்பகுதி வரையில் மட்டும் இவ்வங்கி 2100 மேலான வங்கிக்கிளைகளினை பங்களாதேசம் முழுவதுமைக்குமாகக் கொண்டுள்ளது.

கிராமின் வங்கிக்கும் தாபகர் யூனுஸிற்கும் இணைத்து சமாதானத்திற்கான நோபல்பரிசு வழங்குவதாக அக்டோபர் 13,2006 ல் நோபல்பரிசு குழு அறிவித்தது.

ஏனைய முயற்சிகள்[தொகு]

கிராமின் வங்கிக்குழுமத்தில் உள்ள ஏனைய நிறுவனங்கள்:

சில விபரங்கள்[தொகு]

  • கிராமின் வங்கியின் உரிமையாண்மையில் 94%தினை கடன் பெறுபவர்களும்,6%தினை வங்காளதேச அரசும் கொண்டுள்ளது.
  • கடன் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 6.61 மில்லியன், இவற்றில் 97% மானோர் பெண்களாவார்
  • 2226 கிளைகள்,18,795 ஊழியர்கள் மூலம் 71,371கிராமங்களில் பணியாற்றுகின்றது.
  • கடன்கள் மீள செலுத்தப்படும் வீதம் 98.85% ஆகும்.

சிறுகடன்[தொகு]

சிறிய தொகையாக இருப்பதால் இது சிறுகடன் என்றழைக்கப்படுகிறது. இக்கடன்களைப் பெற பிணையாக எதுவும் வைக்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கடன் பெறலாம். ஆனால் முதலில் ஐவர் சேர்ந்த குழுவாக சேரவேண்டும். முதலில் இருவருக்கு கடன் வழங்கப்படும். அவ்விருவரும் கடன்களை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தவுடன் மற்றவர்களுக்கும் கடன்கள் வழங்கப்படும். ஒருவர் பெற்ற கடனை செலுத்தாவிட்டால் எனையவருக்கு கடன் மறுக்கப்படும்.இச்சிறுகடன் முறையை அடியொற்றியே பல நாடுகளில் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமின்_வங்கி&oldid=3741017" இலிருந்து மீள்விக்கப்பட்டது