பேச்சு:முதலாம் சங்கிலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் சங்கிலி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

யாழ்ப்பாண அரசின் இலச்சினை[தொகு]

யாழ்ப்பாண அரசின் இலச்சினை எனத் தரப்பட்ட படிமம் யாழ்ப்பாண அரசினால் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புக்களே இல்லை. நீக்கப் பரிந்துரைக்கிறேன். கோபி (பேச்சு) 16:04, 8 மார்ச் 2012 (UTC)

சிலை[தொகு]

சங்கிலியன் சிலை பற்றிய வெளி இணைப்பை மீள்ப்பித்திருக்கிறேன். இக்கட்டுரைக்கு அது அவசியமானது.--Kanags \உரையாடுக 20:28, 8 மார்ச் 2012 (UTC)

கட்டுரை சங்கிலியன் சிலை பற்றியதென்றால் வெளி இணைப்பு அவசியமானதாகும். குறித்த இணைப்பில் சங்கிலியன் பற்றிக் குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை. நன்றி. கோபி (பேச்சு) 11:42, 9 மார்ச் 2012 (UTC)
சங்கிலியன் சிலை பற்றி சங்கிலியன் கட்டுரையில் தர வேண்டிய அவசியம் இல்லையா? ஆளுமைகளின் கட்டுரைகளில் முத்திரைகள் பற்றியெல்லாம் எழுதுகிறோமே. அவற்றின் படங்களையும் வெளியிடுகிறோம். அவையும் தேவையற்றதா? சங்கிலியன் சிலை பற்றிய போதிய தகவல்கள் இருந்தால் தனியே ஒரு கட்டுரை எழுதலாம். அப்படி எழுதினால் அக்கட்டுரைக்கு இங்கு இணைப்புக் கொடுக்கலாமா? அல்லது அதுவும் தேவையற்றதா?--Kanags \உரையாடுக 11:49, 9 மார்ச் 2012 (UTC)
சங்கிலியன் சிலை பற்றிய கட்டுரை எனின் இதைவிடப் பொருத்தமான இணைப்புக்கள் இல்லையெனின் இந்த இணைப்புக் கொடுக்கலாம். கட்டுரையில் சங்கிலியன் சிலை விவகாரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இணைப்புக் கொடுக்கலாம். குறித்த இணைப்பில் தகவல்களை விட அரசியல் அதிகம். இதே தகவல்களை முற்றிலும் வேறேன அரசியலுடன் வேறு சொற்களில் எழுத முடியும். ஓர் இணைப்பு நடுநிலையில்லாததெனினுன் தகவல்களைக் கொண்டிருந்தால் இணைப்புக் கொடுக்கலாம். இங்கே தகவல்களை விட அரசியல் அதிகம். இவ்விடயம் தொடர்பில் மேலும் உரையாட நான் விரும்பவில்லை. த.வி.யில் கொடுக்கப்படும் இணைப்புக்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. கருத்துக்களங்கள், அரசியற் தளங்களின் இணைப்புக்கள் குறைவாக இருப்பது நன்மை பயக்கும் என்று தோன்றியது. நன்றி. கோபி (பேச்சு) 12:12, 9 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதலாம்_சங்கிலி&oldid=1059000" இலிருந்து மீள்விக்கப்பட்டது