சமத்துவ வாய்ப்பு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமத்துவ வாய்ப்பு ஆணையம் (Equal Opportunities Commission) என்பது ஹொங்கொங் வாழ் மக்கள் அனைவரும் (தொழில் வாய்ப்புக்கு வந்தோர் உட்பட) சமத்துவ வாய்ப்புடன் இருக்க வேண்டும் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டியங்கும் ஒரு நிறுவனமாகும்.

தலைமை பணிமனை[தொகு]

இதன் தலைமை பணிமனை "சமத்துவ வாய்ப்பு ஆணையம்", 19 ஆம் மாடி, நகர அங்காடி மூன்று, 14 டைக்கூ வான் வீதி, டைக்கூ சிங், ஹொங்கொங் இல் உள்ளது. எவருக்கேனும் பிரச்சினைகள் நடந்தால் பொறுப்புணர்வுடன் பணிகளை முன்னெடுக்கும் முறைமை ஹொங்கொங்கில் உள்ள ஏனை அரச திணைக்களங்கள் போலவே இங்கும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் விழிப்பு நிலைக்கான நூல்கள்[தொகு]

இந்த சமத்துவ வாய்ப்பு ஆணையம் ஹொங்கொங் மக்கள் அனைவரும் சமத்துவ வாய்ப்பு பெற்று வாழவேண்டும், எந்த இனத்தவரானாலும், எந்த மதத்தவரானாலும், எந்த நிறத்தவரானாலும் மக்கள் மத்தியில் வேறுபாடுகள் தோன்றக் கூடாது எனும் அடிப்படையில் பல செயல் திட்டங்களையும் செய்து வருகின்றது. அத்துடன் மக்கள் விழிப்பு நிலை தொடர்பாகப் பல நூல்களையும் இலவசமாகவே வழங்கி வருகின்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்கள் விழிப்பு நிலை நூல்கள்". Archived from the original on 2011-02-14. பார்க்கப்பட்ட நாள் 2011-01-23.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமத்துவ_வாய்ப்பு_ஆணையம்&oldid=3552981" இலிருந்து மீள்விக்கப்பட்டது