அன்ட்ரே அகாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்ட்ரே அகாசி
Andre Agassi at the 2006 Indian Wells Masters
நாடு அமெரிக்கா ஈரான் குடியுரிமையும் உண்டு
வாழ்விடம்லாஸ் வெகாஸ், நெவாடா, அமெரிக்கா
உயரம்5 அடி 11 அங்குலம் (1.80 மீ)
தொழில் ஆரம்பம்1986
இளைப்பாறல்செப்டம்பர் 3, 2006
விளையாட்டுகள்Right; Two-handed backhand
பரிசுப் பணம்$31,110,975
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்868-273
பட்டங்கள்60
அதிகூடிய தரவரிசைNo. 1 (ஏப்ரல் 10, 1995)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (1995, 2000, 2001, 2003)
பிரெஞ்சு ஓப்பன்W (1999)
விம்பிள்டன்W (1992)
அமெரிக்க ஓப்பன்W (1994, 1999)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்40-42 (எடிபி தொடர், டேவிசு கிண்ணம், கிராண்ட் சிலாம், கிராண்ட் பிரிக்சு தொடர்)
பட்டங்கள்1
அதியுயர் தரவரிசைNo. 123 (ஆகஸ்டு 17, 1992)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்கலந்துகொள்ளவில்லை
பிரெஞ்சு ஓப்பன்காஇ (1992)
விம்பிள்டன்கலந்துகொள்ளவில்லை
அமெரிக்க ஓப்பன்1சு (1987)
இற்றைப்படுத்தப்பட்டது: ஆகஸ்ட் 21, 2006.
வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான டென்னிசு
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 அட்லாண்டா ஒற்றையர்

அன்ட்ரே அகாசி (Andre Kirk Agassi பிறப்பு ஏப்ரல் 29, 1970) அமெரிக்க ரெனிஸ் விளையாட்டு வீரர். உலகின் முன்னணி டென்னிசு ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 1996 இல் ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப்பதக்கத்தைப் பெற்றவர்.

இவர் நடிகையான புருக் சீல்டை ஐ 1997 இல் திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து பிரபல டென்னிசு வீராங்கனையான ஸ்ரெஃபி கிராஃப்ஐ திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஜூன் 24, 2006 ல் , 2006 யூ.எசு. ஓப்பன் போட்டிகளுக்குப் பின்பு தான் டென்னிசு விளையாட்டு உலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார், இது இவரின் 21 ஆண்டு தொழில் ரீதியான டென்னிசு விளையாட்டின முடிவாக அமைந்தது. ஞாயிறு, செப்டம்பர் 3, 2006, ல் இவர் தன்னுடைய இறுதி ஆட்டத்தில விளையாடினார். இதில் இவர் பென்ஜமின் பெக்கர் என்பவரிடம் மூன்றாவது சுற்றிலே நான்கு செட்களை இழந்ததன் மூலம் தோல்விகண்டார்.

கிராண்ட் சிலாம் போட்டிகளில்[தொகு]

ஒற்றையர்: 15 (8ல் வெற்றியாளர், 7ல் இரண்டாமிடம்[தொகு]

கிராண்ட் சிலாம் என்னும் நான்கு பெரு வெற்றித் தொடர்களிலும் வென்ற ஏழு ஆண்களில் இவர் ஐந்தாவதாக அதை வென்றார். இவருக்குப்பின் அதை ரொஜர் பெடரரும் ரஃபேல் நடாலும்) பெற்றார்கள்.

முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
இரண்டாமிடம் 1990 பிரெஞ்சு ஓப்பன் களிமண் எக்குவடோர் ஆண்டசு கோமெசு 3–6, 6–2, 4–6, 4–6
இரண்டாமிடம் 1990 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை ஐக்கிய அமெரிக்கா பீட் சாம்ப்ரஸ் 4–6, 3–6, 2–6
இரண்டாமிடம் 1991 பிரெஞ்சு ஓப்பன் களிமண் ஐக்கிய அமெரிக்கா ஜிம் கூரியர் 6–3, 4–6, 6–2, 1–6, 4–6
வெற்றியாளர் 1992 விம்பிள்டன் புற்றரை குரோவாசியா கோரன் இவானிசெவிக் 6–7(8–10), 6–4, 6–4, 1–6, 6–4
வெற்றியாளர் 1994 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை செருமனி மைக்கேல் இசுடிச் 6–1, 7–6(7–5), 7–5
வெற்றியாளர் 1995 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை ஐக்கிய அமெரிக்கா பீட் சாம்ப்ரஸ் 4–6, 6–1, 7–6(8–6), 6–4
இரண்டாமிடம் 1995 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை ஐக்கிய அமெரிக்கா பீட் சாம்ப்ரஸ் 4–6, 3–6, 6–4, 5–7
வெற்றியாளர் 1999 பிரெஞ்சு ஓப்பன் களிமண் உக்ரைன் ஆண்ரே மாடவ்டேவ் 1–6, 2–6, 6–4, 6–3, 6–4
இரண்டாமிடம் 1999 விம்பிள்டன் புற்றரை ஐக்கிய அமெரிக்கா பீட் சாம்ப்ரஸ் 3–6, 4–6, 5–7
வெற்றியாளர் 1999 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை ஐக்கிய அமெரிக்கா டாட் மார்ட்டின் 6–4, 6–7(5–7), 6–7(2–7), 6–3, 6–2
வெற்றியாளர் 2000 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை உருசியா யெவ்கெனி கவ்ல்னிகோவ் 3–6, 6–3, 6–2, 6–4
வெற்றியாளர் 2001 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை பிரான்சு ஆர்னாட் கிலமெண்ட் 6–4, 6–2, 6–2
இரண்டாமிடம் 2002 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை ஐக்கிய அமெரிக்கா பீட் சாம்ப்ரஸ் 3–6, 4–6, 7–5, 4–6
வெற்றியாளர் 2003 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை செருமனி ரெய்னர் இசுட்டலர் 6–2, 6–2, 6–1
இரண்டாமிடம் 2005 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை சுவிட்சர்லாந்து ரொஜர் பெடரர் 3–6, 6–2, 6–7(1–7), 1–6

ஒலிம்பிக் இறுதி ஆட்டம்[தொகு]

ஒற்றையர்: 1 (1 gold medal)[தொகு]

முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
வெற்றியாளர் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் செயற்கைத்தரை எசுப்பானியா செர்சி புருக்யுரா 6–2, 6–3, 6–1

பெருவெற்றித் தொடர்(கிராண்ட் சிலாம்) ஒற்றையர் ஆட்ட காலக்கோடு[தொகு]

கோப்பை 1986 1987 1988 1989 1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 வெ-தோ SR
பெருவெற்றித் தொடர்
ஆத்திரேலிய ஓப்பன் NH வெ அஇ 4சு 4சு வெ வெ வெ அஇ காஇ 48–5 4 / 9
பிரெஞ்சு ஓப்பன் 2சு அஇ 3சு அஇ 2சு காஇ 2சு 1சு வெ 2சு காஇ காஇ காஇ 1சு 1சு 51–16 1 / 17
விம்பிள்டன் 1சு காஇ வெ காஇ 4சு அஇ 1சு 2சு அஇ அஇ 2சு 4சு 3சு 46–13 1 / 14
யூ.எசு. ஓப்பன் 1சு 1சு அஇ அஇ 1சு காஇ 1சு வெ அஇ 4சு 4சு வெ 2சு காஇ அஇ காஇ 3சு 79–19 2 / 21
வெ-தோ 0–1 1–3 10–2 7–2 12–2 10–3 16–2 4–2 11–2 22–3 11–4 3–1 7–4 23–2 14–3 20–3 11–3 19–3 9–3 10–3 4–2 224–53 8 / 61
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ட்ரே_அகாசி&oldid=3069420" இலிருந்து மீள்விக்கப்பட்டது