பேச்சு:நவராத்திரி நோன்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவராத்திரி நோன்பு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நவராத்திரி நோன்பு என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நவராத்திரி நோன்பு என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நவராத்திரி நோன்பு என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

உமாபதி, இதன் தலைப்பு நவராத்திரி நோன்பு அல்லது நவராத்திரி விரதம் என்று இருக்கவேண்டுமோ?--செல்வா 17:22, 24 மார்ச் 2007 (UTC)

நவராத்திரி விரதம் பொருத்தமாக இருக்கும். விரதம் தமிழ்ச் சொல்லா? இல்லையானால் நோன்பு நல்லது.--Kanags 21:55, 24 மார்ச் 2007 (UTC)
நோன்பு என்பது தமிழ். நோன்பு நோற்றல் என்று வினையாகவும் பயன்படும். விரதம் சமசுகிரதம். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 5-10% மக்கள் விரதம் என்பர் 90-95% மக்கள் நோன்பு ("நோம்பு") என்பர். திருவள்ளுவர் ஏழு குறட்பாக்களில் "நோற்றல்" என்னும் சொல்லை ஆண்டுள்ளார்:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள்-48)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (குறள் 160)
விரதம் என்பதனையும் சொல்லலாம், ஆனால் நோன்பு என்று இருப்பது சிறப்பாகப் பொருந்தும். --செல்வா 00:22, 25 மார்ச் 2007 (UTC)

செல்வா, மிகவும் விரிவான விளக்கத்துக்கு நன்றி. வார்ப்புருவிலும் அப்படியே மாற்றி விடுவோம்.--Kanags 00:46, 25 மார்ச் 2007 (UTC)

விளகங்களுக்கு நன்றி செல்வா, சீறிதரின் கருத்துக்களுக்கும் வழிமாற்றத்திற்கும் நன்றி. இலங்கையில் பேச்சுவழக்கில் நோன்பு என்பது பொதுவாக முஸ்லீம்களின் ரமழான் நோன்பையே குறிப்பிடுவார்கள். விரதம் என்றசொல்லையே இலங்கையில் பெரிதும் கையாளுகின்றார்கள். ஆயினும் பிறிதொரு வகையில் சிந்தித்தால் ரமழானில் முஸ்லீம்கள் கட்டாயமாகக் கடைப்பிடிப்பது போன்று இங்கு இந்துக்கள் செய்வதில்லை ஆகையால விரதம் என்ற சொல்லை இல்லாமலும் கையாளாலாம் என்று நினைக்கின்றேன். சிறீதர், வார்புருவில் எல்லா விரதங்களும் உள்ளனவா? மேலும் பலசேர்க்கவேண்டும் என்றே நினைக்கின்றேன் --Umapathy 01:21, 25 மார்ச் 2007 (UTC)

உமாபதி, வார்ப்புருவில் இல்லாதவற்றை நீங்களே சேர்த்து விடுங்கள். உங்களிடம் தகவல்கள் இருந்தால் வார்ப்புருவின் அடியில் உள்ள தொ எழுத்தைத் தட்டினீர்களென்றால் நீங்களே சேர்க்கலாம்.--Kanags 01:48, 25 மார்ச் 2007 (UTC)
நன்றி சிறீதர், வார்புருவில் இல்லாதவற்றைச் இன்றுமுதல் சேர்க்கத்தொடங்குகின்றேன். --Umapathy 02:21, 25 மார்ச் 2007 (UTC)
உமாபதி, சில இடங்களில் மேற்கோள் தேவை என்று குறித்துள்ளேன். சில இடங்களில் அப்படி மேற்கோள் கொடுத்தால் நல்லது. காரணாகமம், சிவாகமம் முதலிவற்றுக்குத் தருவது நல்லது. --செல்வா 02:54, 25 மார்ச் 2007 (UTC)

பிழையான தகவல் மறு திருத்தம் தேவை[தொகு]

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்



'''திருத்தம்'''

நடுவில் உள்ள மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்.....[மேற்கோள் தேவை].

இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்..........

..... என மாற்றப்பட வேண்டும். --சக்திவேல் 16:46, 1 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

ஆகம வழிபாடு மட்டுமே உள்ளது[தொகு]

இக்கட்டுரை நவராத்திரி தமிழ்நாட்டில் ஆகமவழியில் கொண்டாடுவதை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் பலவகைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழக இல்லங்களில் கொலு வைப்பது, சுண்டல் பற்றிய குறிப்புகள் இல்லை. தமிழகத்துற்கே உரித்தான ஆயுத பூசையும் இல்லை. குசராத்தில் கர்பா நடனங்கள்,வங்காளத்தில் துர்கா பூசை, மைசூர் மன்னர் பவனி என முழுமையாக இல்லை. தலைப்பை நவராத்திரி நோன்பு என்பதற்கு பதிலாக நவராத்திரி விழா எனக் குறிப்பிடலாம்.--மணியன் 05:52, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]