தனிச்சொல் (யாப்பிலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிச்சொல் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஓர் உறுப்பாகும். இஃது அப்பாவகையில் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம் என்னும் உறுப்புக்களைத் தொடர்ந்து ஐந்தாவது உறுப்பாக வரும்.

கலிப்பாவின் இறுதி உறுப்பாகிய சுரிதகத்தை ஏனைய நான்கு உறுப்புகளின் இணைப்பதற்காக அதன் முன் வருவது தனிச்சொல். இது தனிச்சீர் எனவும் அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டு[தொகு]

வாட்போக்கி கலம்பகத்தில் வரும் பின்வரும் வரிகள் அம்போதராகதுக்கும் தனிச்சொல்லுக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றன:


1. துருவொரு தயையினைந் தொழிலி யற்றியு

மருவொரு தொழிலுமில் லாத மாட்சியை;

2. பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியு

மெண்ணொரு விகாரமு மிலாத காட்சியை.

(இவை இரண்டும் நாற்சீரடி அம்போதரங்கம்.)

  1. உள்ளொளி யாகிந்ன் றுணர்த்துந் தன்மையை;
  2. வெள்ளொளி விடைமிசை விளங்கு நன்மையை;
  3. அம்புல நடுப்புகுந் தாடுங் கூத்தினை;
  4. நம்பல மெனப்பலர் நவிலுஞ் சோத்தினை.

(இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்.)

  1. சடைநெடு முடியமர் செல்லினை;
  2. தவமுயல் பவர்வினை கல்லினை;
  3. கடையரு வடவரை வில்லினை;
  4. கவினுற நெடுமறை சொல்லினை;
  5. மிடைவலி யினர்தரு பல்லினை;
  6. விசயனொ டெதிர்பொரு மல்லினை;
  7. அடைதரு மிடையதள் புல்லினை;
  8. அளவிட லரியதொ ரெல்லினை;

(இவை எட்டும் முச்சீரடி அம்போதரங்கம்.)

  1. அருள் கொடுத்தனை;
  2. இருள் கொடுத்தனை;
  3. ஆல மாந்தினை;
  4. சூல மேந்தினை;
  5. இசைவி ரித்தனை;
  6. வசையி ரித்தனை;
  7. எங்கு நீடினை;
  8. சங்கு சூடினை;
  9. மதிய ணிந்தனை;
  10. கொதித ணிந்தனை;
  11. மழுவ லத்தினை;
  12. தொழுந லத்தினை;
  13. பொருவி றந்தனை;
  14. கருவ றந்தனை;
  15. பொய்யி னீங்கினை;
  16. மெய்யி னோங்கினை.

(இவை பதினாறும் இருசீரோரடி அம்போதரங்கம்.)

எனவாங்கு, (இது தனிச்சொல்.)

மேற்கோள்கள்[தொகு]