அரிஸ்டாஃபனீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிஸ்டாஃபனீஸ்
அரிஸ்டோபேன்சின் மார்பளவு சிலை (கி.பி முதலாம் நூற்றாண்டு)
பிறப்புஅண். கிமு 446
கிரேக்கம் ஏதென்சு
இறப்புஅண். கிமு 386 (60 வயதில்)
கிரேக்கம் தெல்பி
பணிநாடகாசிரியர் (நகைச்சுவை)
செயற்பாட்டுக்
காலம்
கிமு 427 – கிமு 386
அறியப்படுவதுநகைச்சுவை நாடக ஆசிரியர், இயக்குநர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
Notes
† Although many artists' renderings of Aristophanes portray him with flowing curly hair, several jests in his plays indicate that he may have been prematurely bald.[1]

அரிஸ்டாஃபனீஸ் (அரிஸ்டாபனீஸ், அரிட்டாபனீசு) (கிரேக்கம்: Ἀριστοφάνης, அண். கிமு 446- அண். கிமு 386) என்பவர் "நகைச்சுவையின் தந்தை"[2] என்று குறிப்பிட்ட ஒரு பண்டைய கிரேக்க நாடகாசிரியர். முகில்கள், பறவைகள், லிசிஸ்ட்ராட்டா, தவளைகள் இவரது சில குறிப்பிட்டதாக நாடகங்கள் ஆகும். இவரது பல படைப்புகள் பண்டைய கிரேக்க அரசியலையும் சமூகத்தையும் அங்கதம் செய்தது. இவர் எழுதிய நாற்பது நாடகங்களில் பதினொரு நாடகங்கள் முழுமையாக கிடைக்கின்றன.

அரிஸ்டாஃபனீஸ் ஏஜினா தீவில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். பொலொப்பொனேசிய போரின் துவக்கத்தில் தன் வீடு வாசல்களை விட்டு ஏதென்சில் வசிக்கத் துவங்கினார். இந்தப் போரினால் கிரேக்கர்களை கிரேக்கர் வெறுப்பதைக் கண்டு வேதனை அடைந்தார். கிரேக்கர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், சமாதானமாக வாழவேண்டும் என்று தன் நாடகங்கள் வழியாக வலியுறுத்தினார். அப்போது பரவிவந்த நவீன எண்ணப் போக்குகுகளுக்கு எதிராயாக இருந்தார்; மக்களாச்சியையும்கூட இவ்விரண்டையும் தன் நாடகங்கள் வழியாக பரிகாசம் செய்துவந்தார். பெரிக்கிளீசு, சாக்கிரட்டீசு, யூரிப்பிட்டீஸ் முதலிய பலரும் இவரின் பரிகாசத்துக்கு ஆளாயினர்.

குறிப்புகள்[தொகு]

  1. Barrett (1964) p. 9
  2. Aristophanes in Performance 421 BC – AD 2007: Peace, Birds and Frogs Edith Hall and Amanda Wrigley, Legenda (Oxford) 2007, p. 1


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஸ்டாஃபனீஸ்&oldid=3435894" இலிருந்து மீள்விக்கப்பட்டது