சிவகாசி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகாசி வட்டம் (Sivakasi Taluk) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகாசி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 36 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] சிவகாசி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 4,26,753 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 2,11,880 ஆண்களும், 2,14,873 பெண்களும் உள்ளனர். 1,17,312 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 37.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 80.17% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 45,678 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 79,775 மற்றும் 515 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.28%, இசுலாமியர்கள் 2.24%, கிறித்தவர்கள் 4.2% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்".
  2. "சிவகாசி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்" (PDF).
  3. "Sivakasi Sivakashi Taluka Population, Caste, Religion Data".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாசி_வட்டம்&oldid=2787936" இலிருந்து மீள்விக்கப்பட்டது