கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவம் , ஆபத்துதவி , ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற சமூக சேவை அமைப்பு ஆகும்.
ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.
ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் இணையப் பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட கூகிள் லூனர் எக்சு பரிசு வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.
மொழியொன்றின் இலக்கணத்தில் , பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை , முன்னிலை , படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.