பேச்சு:உலோகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலோகம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

மாழைக் கலவை[தொகு]

தங்களின் வெண்கலம் கட்டுரையில் "மாழைக் கலவை"யென்ற சொல்லாட்சி கண்டேன், அஃது alloy என்பதன் நிகர்ப்பதம் என உனர்ந்தாலும், "மாழை" என்பதன் பொருளும் அப்பதத்தின் மூலம் (etymology) பற்றியும் அறிய விழைகின்றேன்! -நரசிம்மவர்மன்10 06:36, 18 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழில் மழமழ என்று உள்ளது, மழமழப்பு என்று கேட்டிருப்பீர்கள். கத்தி, ஊசி போன்றவைமழுங்கி விட்டது என்று கேட்டிருப்பீர்கள். சிவபெருமான் கையில் உள்ள உருகிய உலோகக்கட்டி எரிந்து கொண்டிருப்பதைக்கொண்டு அவருக்கு மழுவேந்தி (மழு = உருகிய உலோகக்கட்டி + ஏந்தி) என்னும் பெயர் இருப்பதையும் அறிவீர்கள். மாழை என்றால் இளகக்கூடியது, (<--மழ என்பது இளமை; மழலை திருந்தாத குழந்தை பேச்சு), ஆங்கிலத்தில் malleable, ductile என்னும் பொருளது. மாழை<-->malleable என்பதன் ஒலிப்பொற்றுமையும் நோக்கத்தக்கது. மழுங்குதல் என்பது இந்த மழ என்னும் சொல்லின் அடிப்படையில் கூர் இளகி விட்டது (மழுங்கி விட்டது) என்னும் பொருளில் ஆளப்படுவது. மாழை என்பது தட்டி கொட்டி நீட்டி வளைக்க வல்லதால் அதற்கு மாழை என்று பெயர் வந்தது. மழமழப்பு ஏற்றவல்லதாலும் மாழை. பளபளப்பு ஏற்ற வல்லதாலும் மாழை. (மாழை என்றால் பளபளப்பு என்றும் பொருள் உண்டு. பெண்களின் கண்களை மாழை என்று சொல்வதுண்டு; மான்களின் கண்களையும் மாழை என்று சொல்வதுண்டு.). சிறப்பாக தங்கம், வெள்ளிக்கு மாழை என்று பொருள் உண்டு (பளபளப்பாக இருப்பதால்; மாழை என்றால் அழகு என்று பொருள் ஏற்பட்டது). பொன் என்பதும் பொதுவாக ஒரு உலோகம்தான், தங்கம் என்னும் பொருள் சிறப்பாக ஏற்பட்டது. இரும்பை கரும்பொன் என்றும் வெள்ளியை வெண்பொன் என்றும் சொல்வதைப் பார்க்கலாம். Metal என்பதற்கு பொன் என்பதே அருமையான சொல். பொன், மாழை என்பன உலோகம் என்பதைக் குறிக்கும் பொதுச்சொற்கள். --செல்வா 14:30, 18 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலோகம்&oldid=2280922" இலிருந்து மீள்விக்கப்பட்டது