ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

மும்மணிக்கோவை என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகையான பாக்களால் தொடுக்கப்பட்டு அந்தாதி முறையில் அமைவது.

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. (இராசராச சோழன் காலம்)

ஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. அவற்றில் ஒன்று இந்த நூல்.

இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.

நூல் அமைதி
இந்த நூலில் மூவகைப்பாக்கள் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன.
பாடல் பாங்கு
வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தின் ஊடே
கடிக்கண்ணி யானோடு கண்டோம் – வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.

இந்த வெண்பாப்பாடல் அகத்திணைப் பாங்கில் அமைந்துள்ளது. [1]

காலம் கணித்த கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. வடித்த அம்பு போன்ற கண்ணினை உடைய உமையம்மையைக், காக்கும் கண்ணி அணிந்த அப்பனோடு (சிவனோடு) சுரத்தில் பார்த்தோம். அவர்கள், வைகையில் அமணரை அழித்தவன் (பிள்ளை எனப்படும் சம்பந்தன்) பிறந்த சீர்காழிப் பொழிலில் ஆணும் பெண்ணும் சேர்ந்திருப்பார் போலக் காணப்பட்டனர்.