பேச்சு:ஒம்புட்ஸ்மன் (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குறைகேள் அதிகாரி என்ற பதம் "ஒம்புட்ஸ்மன்" இக்கு நிகராகவா பயன்படுத்தப்படுகிறது.அப்படியாயின் அதையே தலைப்பாக வைக்கலாமே?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 15:21, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரை தனியே இலங்கையின் குறைகேள் அதிகாரியை மட்டுமே விளக்குகிறது. எனவே இக்கட்டுரையை குறைகேள் அதிகாரி (இலங்கை) என்ற தலைப்பாக மாற்றலாம்.--Kanags \உரையாடுக 20:16, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  • தமிழகத்திலும் "ஒம்புட்ஸ்மன்" என்ற சொல் மெல்ல மறைந்து, குறைகேள் அதிகாரி என்ற பதம் அதிகரித்து வருகிறது. என்பதால், (இலங்கை) என்பது தேவையில்லை என எண்ணுகிறேன்.--த* உழவன் 00:16, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இல்லை. குறைகேள் அதிகாரி என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. இக்கட்டுரை இலங்கை முறைமைகளை அதிகம் கொண்டிருப்பதாலேயே கனக்ஸ் அப்படிக் கூறினார்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:33, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தலைப்பு குறித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இக்கட்டுரை இலங்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டமையினால் அடைப்புக்குள் இலங்கை என்று குறிப்பிடுவது Kanags கூறுவது போல் பொருத்தமானதாகவே இருக்கும். இன்னுமொரு கருத்தினையும் குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் தமிழ்மொழி பெயர்ப்பில் ஒம்புட்ஸ்மன் என்ற வார்த்தைப் பிரயோகமே இடம்பெற்றுள்ளது. மேலும், க.பொ.த. உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக அரசறிவியல் பாடப்பரப்பில் இடம்பெறக்கூடிய சில பரீட்சை வினாக்களிலும் ஒம்புட்ஸ்மன் என்ற சொல்லைப் பயன்படுத்தியே வினாக்கள் இடம்பெறுகின்றன. குறைகேள் அதிகாரி என்ற சொல் தூய தமிழ் சொல்லாக இருக்கலாம். இலங்கை நிலைமையை கருத்திற் கொள்ளும்போது தலைப்பை எவ்வாறு மாற்றுவதென்பது சற்று கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே, இது குறித்து இறுதி முடிவொன்றை முன்வைத்து தலைப்பை மாற்றலாமே. --P.M.Puniyameen 02:44, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

//இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் தமிழ்மொழி பெயர்ப்பில் ஒம்புட்ஸ்மன் என்ற வார்த்தைப் பிரயோகமே இடம்பெற்றுள்ளது.// இக்கூற்று உண்மையானால் அதனை உடனடியாக திருத்தம் செய்யவேண்டியக் கட்டாயம் உள்ளது. அவ்வாறு பிழையான சொற்பதம் இலங்கையில் தமிழ்பெயர்ப்பாக உள்ளது என்பதால், அதே பிழையை வளர்க்கும் விதமாக இங்கேயும் அவ்வாறே எழுதாமல், அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக சரியான தமிழாக்கத்தைச் செய்ய விளையுங்கள்.

பிழையையும் ஆதரிப்பதும், பிழையை ஏற்பதும் கூட பிழையான செயலாகும்.

நீங்கள் இலங்கையில் இருப்பதானால், பொறுப்புவாய்ந்தோருக்கு இவ்வாறான தவறுகளை எடுத்துக்காட்டி, சரியான தமிழாக்கத்திற்கு வழிவகைச் செய்ய முயற்சியுங்கள். நன்றி மொஹமட் ஹனீஃப்

இக்கட்டுரையை இலங்கையின் ஒம்புட்ஸ்மன் பதவியைக் குறிக்கும் கட்டுரையாக மாற்றியுள்ளேன். அரசு பதவி என்பதாலும், நிகரான தமிழ்ப்பெயரை அதிகாரப்பூர்வமாக கொள்ளாத்தாலும் “ஒம்புட்ஸ்மன்” என்ற பெயரையே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதாலும் அதனையே நாமும் கொள்ளலாம். மொழிபெயர்க்கத் தேவையில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 05:48, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நல்ல முடிவு Sodabottle -நன்றி--P.M.Puniyameen 05:55, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]
முகமது ஹனீபின் கருத்தை ஆதரிக்கிறேன். ஒரு நல்ல தமிழ்ச் சொல் இருக்கும் போது ஆங்கிலச் சொல் எதற்காகப் பயன்படுத்த வேண்டும். பாடத்திட்டத்தில் ஒம்புட்ஸ்மன் என இருந்தால் அதனை மாற்றுவதற்குத் தகுந்தோருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். புன்னியாமீன் இதனைச் செய்வாரென எதிர்பார்க்கிறேன். தலைப்பு குறைகேள் அதிகாரி (இலங்கை) என மாற்றப்பட வேண்டும். சிங்களத்தில் இச்சொல்லை எவ்வாறு எழுதுகிறார்கள் என்று அறிய ஆவல்.--Kanags \உரையாடுக 07:15, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]
kanags இன் கருத்தே எனக்கும் சரியாகப் படுகிறது. உரிய அதிகாரிகளுக்கும் துறைசார் பேராசிரியர்களுக்கும் எடுத்துக் கூறி எதிகாலத்திலாவது சரியான தமிழ் பதத்தை பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 11:36, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இது ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல். kanags, சஞ்சீவி சிவகுமார் தங்கள் கருத்துகளில் உண்மையுண்டு. ஒம்புட்ஸ்மன் இல் மட்டுமல்ல பல சொற்களில் இலங்கையில் இது போன்று பிரச்சினைகள் உள்ளன. நிச்சயமாக இது சிந்திக்கப்படவேண்டியதொன்றே. இந்த விவாதம் இது போன்ற விடயங்களை மேலும் ஆராயவேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஊடகங்களில் எழுத ஆர்வம் கொண்டுள்ளேன். இது ஒரு நீண்ட கால ஆய்வாக இருக்கலாம். மேலும் தற்போதுள்ள பிரச்சினைக்கு பின்வருமாறு தலைப்பை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது. இது விக்கி முறைகளுக்கு சரிப்பட்டு வருமா? இலங்கையில் குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்)--P.M.Puniyameen 12:38, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]