சீட்டுக்கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீட்டுக்கவி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இது கவியரசர் ஒருவர் முடியரசர் அல்லது வள்ளல் ஒருவருக்கு தனக்கோ அல்லது பிறருக்கோ உதவி செய்யுமாறு கேட்டு அனுப்பும் விண்ணப்பக்கவி ஆகும். இதில் கவிஞரின் புகழும் வள்ளலின் புகழும் பாடப்படும். அருணாசல கவிராயர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியாருக்கு அனுப்பிய சீட்டுக்கவி, பாரதியார் எட்டயபுரம் சமீனுக்கு அனுப்பிய சீட்டுக்கவி ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீட்டுக்கவி&oldid=1562420" இலிருந்து மீள்விக்கப்பட்டது