மசினோ கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஷினோ கோட்டின் வரைபடம்

மஷினோ கோடு (பிரெஞ்சு:Ligne Maginot, ஆங்கிலம்:Maginot line) என்பது பிரான்சு நாட்டின் கிழக்கெல்லையில் இரண்டாம் உலகப் போரின் முன்னர் கட்டப்பட்ட ஒரு அரண் கோட்டைக் குறிக்கும். அப்போதைய பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே மஷினோவின் பெயரே இக்கோட்டுக்கு ஏற்பட்டது.

முதலாம் உலகப் போரில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இயங்கா நிலைப்போரே இனி வருங்காலத்தில் நடக்கும் என்று பிரெஞ்சு மேல்நிலை உத்தியாளர்கள் கருதியதால், ஜெர்மனியுடனான எல்லையில் ஒரு பலம் வாய்ந்த அரண் கோட்டைக் கட்ட முடிவு செய்தனர். 1930ல் கட்டுமானப்பணி தொடங்கி 1939ல் முடிவடைந்தது. மூன்று பில்லியன் பிராங்க்குகள் இதற்கு செலவாகின. கிழக்கே சுவிட்சர்லாந்து எல்லையிலிருந்து மேற்கே ஜெர்மனி எல்லை முடிந்து பெல்ஜியம் எல்லை ஆரம்பமாகும் வரை இந்த அரண் கோடு அமைந்திருந்தது. அந்த நிலைக்குப் பிறகு ஆங்கிலக் கால்வாய் வரையிருந்த அரண் நிலைகள் மஷினோ கோட்டின் பகுதியாக கருதப்பட்டாலும் அவை ஜெர்மானிய எல்லையை ஒட்டி அமைந்திருந்த அரண் நிலைகளைப் போல பலமானவையாக இருக்க வில்லை. மஷினோ கொட்டுக்கு போட்டியாக ஹிட்லர் ஜெர்மனியின் எல்லையில் சிக்ஃபிரைட் கோட்டைக் கட்டினார்.

கான்கிரீட் கோட்டைகள், டாங்கு தடைகள், எந்திரத் துப்பாக்கி தளங்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மஷினோ அரண் நிலையை ஜெர்மானிய படைகளால் நேரடியாகத் தாக்கி ஊடுருவ முடியாது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரில் மேற்கு போர்முனையில் போர் துவங்கி நில நாட்களிலேயே ஜெர்மானிய படைகள் எளிதில் மஷினோ கோட்டைத் தாக்கி ஊடுருவி விட்டன.


வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மஷினோ கோடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசினோ_கோடு&oldid=3385685" இலிருந்து மீள்விக்கப்பட்டது