பேச்சு:மறைமலை அடிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டிப்பாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஆளுமையின் வாழ்க்கை. ஆங்கில விக்கியில் உள்ள குறுங்கட்டுரைக்கு இணைப்பு தந்துள்ளேன். -- Sundar \பேச்சு 07:03, 23 ஜூன் 2006 (UTC)

நன்றி சுந்தர். இன்னும் நிறைய எழுதவேண்டும்!--C.R.Selvakumar 01:16, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வா, ஆறுமுக நாவலர், வள்ளலார், போன்றோர் மறைமலை அடிகளாரின் காலத்தில் வாழவில்லை.--Kanags 23:58, 23 ஜூன் 2006 (UTC)

நன்றி கனகு. நான் எழுதியது பிழை. கோவை இராமலிங்கம் என்பதற்கு இராமலிங்க அடிகள் என்று தவறுதலாக எழுதிவிட்டேன். ஆறுமுக நாவலருக்கும் வள்லலார் இரமலிங்க அடிகளுக்கும் இடையே நிகழ்ந்த கருத்துப் போராட்டத்தின் விளைவாக அவர்கள் காலத்திற்கு சற்று பின்னர் வாழ்ந்த கதிரை வேலரும் மறைமலை அடிகளாரும் செய்த போரைப் பற்றி எழுத வந்தவன், தவறுதலாக ஆறுமுக நாவலரையே ஒருகாலத்தவராக எழுதிவிட்டேன். எடுத்துக் காட்டியமைக்கு நன்றி. --C.R.Selvakumar 00:51, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
கதிரை வேலர் ஆறுமுக நாவலரைப் பின்பற்றி இராமலிங்க அடிகளார் பாடல்களை மருட்பா என தாக்கினர், வள்ளலார் பாடல்கள் அருட்பாக்கள் என மறைமலை அடிகள் வாதாடினார். திரு.வி.க அவர்கள் பெரும்புலவர் கதிரை வேலரின் மாணவர். --C.R.Selvakumar 00:58, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வா, நல்ல வேளை நினைப்பூட்டினீர்கள். திரு. வி.க அவர்களின் ஆசான் யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் குறித்த கட்டுரையும் விரிவாக்கப்பட வேண்டும். விரைவில் செய்கிறேன்--Kanags 01:11, 24 ஜூன் 2006 (UTC)

செல்வா சார், மறைமலையார் பிறந்த இடம் திருக்கழுக்குன்றம் என்று எழுதி இருக்கிறீர்கள். சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நாகப்பட்டினம் காடம்பாடி என்று படித்திருக்கிறேன்; அங்கே அவர் பிறந்த இடம் என்று ஓர் அறிவிப்புப் பலகை கூடப் பார்த்த ஞாபகம். --பெ.நாயகி 02:37, 10 ஆகஸ்ட் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மறைமலை_அடிகள்&oldid=414102" இலிருந்து மீள்விக்கப்பட்டது