விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்னணி[தொகு]

மீடியாவிக்கி இடைமுகம் மொழிபெயர்க்க முன்னொருகாலத்தில் விக்கியின் மீடியாவிக்கி பக்கங்களில் செய்திகளை மாற்றி வந்தனர். பின்னர் ஒவ்வொரு விக்கியிலும் இவ்வாறு திரும்பத் திரும்ப செய்வது உகந்ததல்ல என கருதியதால் translatewiki மொழிபெயர்ப்பு விக்கி பயன்படுத்தி இடைமுகப்பு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அண்மைக்காலமாக அனைத்து மொழிபெயர்ப்புகளுமே மொழிபெயர்ப்பு விக்கி மூலம் தான் நடைபெற்று வருகிறது.

தனிப்பட்ட செய்திகள்[தொகு]

மீடியாவிக்கியை விக்கிப்பீடியாவைத் தாண்டி யார் வேண்டுமானாலும் அவரது தனிப்பட்ட விக்கியாக பயன்படுத்தக்கூடிய கட்டற்ற மென்பொருள். ஆகையால் மீடியாவிக்கி மொழிபெயர்ப்பில் ஈடுபடும் பொழுது விக்கிப்பீடியா சார்பு இல்லாமல், பிற மென்பொருட்களைத் தமிழ் இடைமுகம் பயன்படுத்துவோருக்கு அன்னியமாக இருக்காமல் இருத்தல் வேண்டும்.ஆனால் சில நேரங்களில் விக்கிப்பீடியாவிற்கு தனிப்பட் செய்திகள் தேவைப்படும். அவ்வாறான செய்திகளுக்கு மட்டும் இங்கு தனியாக செய்தியை உருவாக்கலாம். எடுத்துக்காட்டு.தனிப்பட்ட செய்தி ஒன்று விக்கியில் இருப்பின் இடைமுகத்தில் வரும் செய்தியாக வருவதற்கு அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மொழிபெயர்ப்பு துப்புரவு[தொகு]

மொழிபெயர்ப்பு விக்கி இடைக்காலத்தில் தான் வந்தது என்பதால், அதற்கு முன்னரே இங்கு மீடியாவிக்கி பக்கங்களில் மொழிபெயர்ப்பு நடந்தது. பின்னர் மொழிபெயர்ப்பு விக்கியிலும் இப்பொழுது மீடியாவிக்கி-கரு வில் 95% மேல் நாம் மொழிபெயர்த்துவிட்டோம். ஆனால் வெவ்வேறு நபர்கள்/வெவ்வேறு காலங்களில் நடைபெற்றதால் மொழிபெயர்ப்புகள் சீராகவும் செம்மையாகவும் இல்லை. அவைகளை ஆராய்ந்த பொழுது(செய்திகளை சிறப்பு:AllMessages பக்கத்தில் பார்க்கலாம்) அனைத்து வித செய்தி மொழிபெயர்ப்புகளைக் கீழ்காணும் வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.

  • மொழிபெயர்ப்பு விக்கியிலும், தமிழ் விக்கியிலும் ஒரு செய்திக்கு ஒரே மொழிபெயர்ப்பு தான் உள்ளது.
செய்யவேண்டியன : தமிழ் விக்கியில் அப்பக்கங்களை விரைந்து நீக்கவேண்டும். ஏனெனில், நாளை இச்செய்திகள் மாறினால் மொழிபெயர்ப்பு விக்கியில் நாம் மாற்றுவோம், ஆனால் அவை இங்கு தெரியாது (தனிப்பட்ட செய்தி எனக்கருதி இங்கிருக்கும் பழைய செய்திக்கு முன்னிலை தரும், அது பிழையான மொழிபெயர்ப்பாக இருக்கும்). அதற்கான பட்டியல் பயனர்:Logicwiki/Same_Message.
  • மொழிபெயர்ப்பு விக்கியிலும், தமிழ் விக்கியிலும் ஒரு செய்திக்கு வேறு மொழிபெயர்ப்பு உள்ளது. அவை தனிப்பட்ட செய்தி அல்ல. இவ்வாறிருக்கும் செய்திகளை மூன்றாகப் பிரிக்கலாம்.
  • 1 மொழிபெயர்ப்பு விக்கியிலுள்ள மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளவை.
செய்யவேண்டியன : தமிழ் விக்கியில் அப்பக்கங்களை விரைந்து நீக்கவேண்டும்.
  • 2 தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளவை.
செய்யவேண்டியன : தமிழ் விக்கியில் இருக்கும் அச்செய்தியை மொழிபெயர்ப்பு விக்கிக்கு மாற்றவேண்டும். பிறகு தமிழ் விக்கியில் அப்பக்கங்களை நீக்கவேண்டும்.
  • 3 இரண்டிலும் சரியாக இல்லை.
செய்யவேண்டியன : மொழிபெயர்ப்பு விக்கியில் சரியான மொழிபெயர்ப்பை இற்றைப்படுத்திவிட்டு, தமிழ் விக்கியில் அப்பக்கங்களை நீக்கவேண்டும்.
  • மொழிபெயர்ப்பு விக்கியிலும், தமிழ் விக்கியிலும் ஒரு செய்திக்கு வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் உள்ளன. அவை தனிப்பட்ட செய்தியே.
செய்யவேண்டியன : அப்படியே விட்டுவிடலாம்.
  • துப்புரவு செய்யும் பொழுது இதைப் போன்ற suffix உடன் வருவதை ஒரு சீராக மாற்ற வேண்டும்.இதற்கு வழிகாட்டிகள் வரவேற்கப் படுகின்றன.

பங்கேற்போர்[தொகு]

  1. ஸ்ரீகாந்த் 19:11, 22 பெப்ரவரி 2012 (UTC)
  2. செல்வா 22:50, 22 பெப்ரவரி 2012 (UTC)
  3. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  4. பாலாஜி (பேச்சு) 19:05, 24 மார்ச் 2012 (UTC)

இதையும் பார்க்க[தொகு]