அயனித் திரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயனித் திரவங்கள் (ionic liquid) எனப்படுபவை திரவ நிலையில் உள்ள உப்புகள் ஆகும். அடிப்படையில் இவை 'உருகுநிலை உப்பு'களிலிருந்து மாறுபட்டவை. பொதுவான வரையறையின்படி நீரின் கொதிநிலைக்குக் கீழே (<100 °C) திரவ நிலையில் இருக்கும் உப்புகள் அயனித் திரவங்கள் என்று பகுக்கப்படுகின்றன. சாதாரண திரவங்களைப் போலன்றி அயனித் திரவத்தில் பெயருக்கேற்றாற்போல் பெரும்பாலும் அயனிகளே இருக்கும்.

அயனித் திரவங்கள் கரைப்பான்களாகவும், மின் பகுளியாகவும் பயன்படக் கூடியவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு 801 °C வெப்ப நிலையை அடையும் போது வெறும் சோடியம் (Na+) மற்றும் குளோரைடு (Cl-) அயனிகளைக் கொண்ட ஒரு அயனித் திரவமாக மாறுகிறது. அயனித் திரவங்களோ 100 °C-க்கும் குறைவான வெப்ப நிலையிலேயே இந்தத் தன்மையை அடைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, 1-எத்தில்-3-மெத்தில் இமிடசோலியம் (EMIM) நேர் அயனிகள் மற்றும் குளோரைடு (Cl-) அல்லது புரோமைடு (Br-) போன்ற எதிர் அயனிகளக் கொண்ட சேர்மங்கள் −21 °C வெப்ப நிலையிலேயே உருகி விடுபவை [1]. இத்தகைய அயனித் திரவங்கள் எளிதில் ஆவியாகாமல் வெப்பத்துக்கு எதிரான நிலைத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. D. R. MacFarlane, J. Golding, S. Forsyth, M. Forsyth and G. B. Deacon (2001). "Low viscosity ionic liquids based on organic salts of the dicyanamide anion". Chem. Commun. (16): 1430. doi:10.1039/b103064g.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனித்_திரவம்&oldid=3713551" இலிருந்து மீள்விக்கப்பட்டது