செல்வம் அடைக்கலநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வம் அடைக்கலநாதன்
2015 இல் அடைக்கலநாதன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2000
தொகுதிவன்னி மாவட்டம்
இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்
பதவியில்
1 செப்டம்பர் 2015 – 2 மார்ச் 2020
முன்னையவர்முருகேசு சந்திரகுமார்
பின்னவர்அங்கஜன் இராமநாதன்
தலைவர் தமிழீழ விடுதலை இயக்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1986
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அமிர்தநாதன் அடைக்கலநாதன்

10 சூன் 1962 (1962-06-10) (அகவை 61)
இறப்புappointer
இளைப்பாறுமிடம்appointer
அரசியல் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பெற்றோர்
  • appointer
வாழிடம்மன்னார்

செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan; பிறப்பு: சூன் 10, 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் முன்னாள் போராளியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வடக்கு இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த அடைக்கலநாதன், தனது 15வது அகவையில் டெலோ இயக்கப் போராளியாக இணைந்தார்.[2] டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 மே 5 இல் கொல்லப்பட்டதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் அவ்வியக்கத்தின் தலைவரானார்.[2]

அரசியலில்[தொகு]

செல்வம் அடைக்கலநாதன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈதேசவிமு/ஈமபுவிமு/டெலோ/தவிகூ கூட்டு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். க்ட்டணி வேட்பாளர்களில் மூன்ற்ஃபாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்றிருந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4] இவர் மீண்டும் 2000 தேர்தலில் டெலோ வேட்பாளராகப் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்றம் சென்றார்.[5]

2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.[6][7] அடைக்கலநாதன் 2001 தேர்தலில் டெலோ சாஅர்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8] இவர் மீண்டும் 2004,[9] 2010,[10][11] 2015 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[12][13] இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் 2014 செப்டம்பர் 1 இல் கூடிய போது, இவர் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[14][15]

அடைக்கலநாதன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16][17][18]

தேர்தல் வரலாறு[தொகு]

செல்வம் அடைக்கலநாதனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
1989 நாடாளுமன்றம்[3] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் ஈ.என்.டி.எல்.எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/
தவிகூ
5,771 தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றம்[5] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் 15,490 தெரிவு
2001 நாடாளுமன்றம்[8] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28,548 தெரிவு
2004 நாடாளுமன்றம்[9] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 39,535 தெரிவு
2010 நாடாளுமன்றம்[19] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17,366 தெரிவு
2015 நாடாளுமன்றம்[20] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26,397 தெரிவு
2020 நாடாளுமன்றம்[21] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18,563 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory of Members: Selvam Adaikkalanathan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  2. 2.0 2.1 "We are on the correct path'". புரொண்ட் லைன் 21 (21). 9 அக்டோபர் 2004. http://www.frontlineonnet.com/fl2121/stories/20041022000905200.htm. 
  3. 3.0 3.1 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Colombo Sri Lanka: Associated Newspapers of Ceylon Limited. பக். 184 இம் மூலத்தில் இருந்து 23 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf. 
  4. "Results of Parliamentary General Election – 1989" (PDF). Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. p. 33. பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
  5. 5.0 5.1 "Parliamentary General Election - 2000 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
  6. D. B. S. Jeyaraj (27 March 2010). "Tamil National Alliance enters critical third phase – 1". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html. 
  7. "Tamil parties sign MOU". தமிழ்நெட். 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400. பார்த்த நாள்: 25 September 2020. 
  8. 8.0 8.1 "Parliamentary General Election - 2001 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
  9. 9.0 9.1 "Parliamentary General Election - 2004 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 199. Archived from the original (PDF) on 4 March 2010.
  10. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1649/2. Colombo, Sri Lanka. 12 April 2010. p. 4A. பார்க்கப்பட்ட நாள் 25 April 2010.
  11. "General Elections 2010 -- Preferential Votes". Sunday Times (Colombo, Sri Lanka). 11 April 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. பார்த்த நாள்: 25 September 2020. 
  12. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1928/3. Colombo, Sri Lanka. 19 August 2015. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
  13. "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 25 September 2020. 
  14. "Thilanga appointed Deputy Speaker". Daily Mirror (Colombo, Sri Lanka). 1 September 2015. http://www.dailymirror.lk/85591/thilanga-appointed-deputy-speaker. பார்த்த நாள்: 25 September 2020. 
  15. "Thilanga appointed Deputy Speaker". Ceylon Today (Colombo. Sri Lanka). 1 September 2015 இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923202034/http://www.ceylontoday.lk/16-102533-news-detail-thilanga-appointed-deputy-speaker.html. 
  16. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  17. "General Election 2020: Preferential votes of Vanni District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 25 September 2020. 
  18. டி. பி. எஸ். ஜெயராஜ் (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 25 September 2020. 
  19. "Parliamentary General Election - 2010 - Vanni Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. Archived from the original (PDF) on 13 May 2010.
  20. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 25 September 2020. 
  21. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 25 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வம்_அடைக்கலநாதன்&oldid=3926320" இலிருந்து மீள்விக்கப்பட்டது