பேச்சு:சவ்வூடு பரவல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவ்வூடு பரவல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சவ்வூடு பரவல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கலை, மிக முக்கியமான கட்டுரை இது. இக்கட்டுரையைத் தொடங்கினமைக்கு மிக்க நன்றி. இப்பொழுதுதான் முதன்முதலாக Osmosis என்பதற்கு பிரசாரணம் என்று ஒரு சொல் இலங்கையில் வழங்குகின்றது என்று அறிகின்றேன். பிரசாரணம் என்னும் சொல்லின் பொருள் என் போன்றோருக்கு விளங்கவில்லை. தமிழ் விக்சனரியில் சில சொற்கள் கொடுத்துள்ளனர்: ஊடுபரவல்; சவ்வூடுபரவல். அவையும் முற்றிலும் பொருந்தாவிடினும் ஓரளவுக்கு என்னவென்றாவது புரிகின்றது. பிரசாரணம் என்றால் ஆசுமாசு (ஓசுமாசு) என்றால் எவ்வளவு புரியாமல் இருக்கின்றதோ அதே அளவு புரியாமல் உள்ளது. ஆகவே வேறு சொல்லால் குறிக்கலாமா? சவ்வூடுபரவல் என்பதை இப்போதைக்கு தலைப்பாக வைத்துக்கொள்ளலாமா? --செல்வா 21:47, 25 மார்ச் 2010 (UTC)

ஆங்கில விக்கியில் உள்ள தொடக்க வரிகளும் தெளிவாக இல்லை. ஊடுருவக்கூடிய மென்படலம் (சவ்வுப்படலம்) வழியாக கரைப்பான் பரவிச்செல்வதையும், கரைபொருள் தடுக்கப்படுவதையும் இவ் விளைவு குறிக்கும். கரைப்பான் இங்கு நீராகமட்டும் இருக்க வேண்டியதில்லை. எந்தவொரு நீர்மப் பொருளாக இருந்தாலும் போதும். நீரழுத்தம் என்பதெல்லாம் முதலில் சொல்லிக் குழப்பத் தேவை இல்லை. என்ன நிகழ்கின்றது என்று அறிந்தபின் பிற விளைவுகள் பற்றிக் கூறலாம். தாமசு கிராம் (Thomas Graham) என்பார் முதன் முதல் இந்த ஓசுமாசு (osmose) என்னும் சொல்லை 1854 இல் பயன்படுத்தினார், பின்னர் (1863 இல்) இது ஓசுமாசிசு (osmosis) என்று அழைக்கப்பட்டது. ஓசுமாசு (osmose) என்னும் சொல் கிரேக்கச் சொல் ώσμός என்பதில் இருந்து உருவானது. இந்த கிரேக்க மொழியில் ώσμός என்றால் உந்து, தள்ளு (thrust, push) என்று பொருள் (பார்க்க ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி (OED)). ஆகவே சவ்வுப் படகத்தின் வழியே நீர்மம் உந்திச்செல்லும் விளைவு (கரைபொருள் பெரிதாக இருப்பதால், சவ்வுப்படலம் வ்ழியே புகுந்து செல்ல இயலாமல் இருக்கும்). இதுவே முதல் நிலைக் கருத்து.--செல்வா 22:08, 25 மார்ச் 2010 (UTC)
செல்வா! கட்டுரையைப் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொன்னதற்கு முதலில் நன்றி. 'பிரசாரணம்' என்பது இலங்கையில் (மட்டும்) வழக்கிலுள்ள சொல் என்பது எனக்கு தற்போதுதான் தெரியும். இலங்கையில் பாடப் புத்தகங்களில் இந்தச் சொல்லே Osmosis என்பதற்கு இணையாக சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சொல்லின் பொருள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டது என்ற விபரம் தெரியாது. ஆராய வேண்டும். யோசித்துப் பார்த்தால் ஊடுபரவல், சவ்வூடு பரவல் என்னும் சொற்களின் பொருளைப் பார்த்தாலும், பொதுவான (sounds like more general word for 'diffusion' through a membrane) சொற்களாகத் தெரிகின்றன. ஆனால் Osmosis என்பதில், குறிப்பிடப்படும் சவ்வு, தேர்ந்து புகவிடும் மென்சவ்வாக இருத்தல் அவசியம். அத்துடன் Osmosis என்பது தனித்தன்மை கொண்ட பரவல் என்பதும், அறிவியலில் பயன்படுத்தப்படும்போது, அங்கே ஒரு கரைப்பானாக நீர் மூலக் கூறுகளே பொதுவாக இருக்கும் என்பதும், இவ்வகை பரவல் பொதுவாக உயிரினங்களில் மட்டும் நிகழும் நிகழ்வென்பதும் எனது புரிதல். தேடிப் பார்த்ததில் கிடைத்தவை கீழே. 1, 2, 3, 4, 5. எனது புரிதல் தவறாகவும் இருக்கலாம். ஆங்கில விக்கிபீடியா உட்பட பல இடங்களிலும் Osmosis க்கான வரைவிலக்கணத்தில் கரைப்பானாக நீர் மூலக் கூறுகளையே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தேடிப் பார்க்க வேண்டும்.--கலை 23:23, 25 மார்ச் 2010 (UTC)
செல்வா! பிரசாரணம் என்ற சொல்பற்றி விக்சனரி குழுமத்தில் கேட்டிருந்தேன். சவ்வூடுபரவலே பொருத்தமான பெயர் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், 'பிரசாரணம்' என்ற சொல்லின் மூலம் வடமொழியாக இருக்கலாம் என்கின்றார்கள். அதனால் நீங்கள் கூறியபடி சவ்வூடு பரவல் என்ற தலைப்பையே பயன்படுத்தலாம். தலைப்பை யாராவது மாற்றி விடுங்கள். எனக்கு எப்படி மாற்றுவதெனத் தெரியவில்லை. ஆனால் நீர் மூலக் கூறுகளின் அசைவையே இங்கே குறிப்பிடுகிறோம் என நினைக்கிறேன். அதுபற்றி உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள். --கலை 23:19, 29 மார்ச் 2010 (UTC)
பிரசாரணம் என நாம் முன்னர் படித்திருந்தாலும், பின்னர் இது சவ்வூடு பரவல் என்றே படித்த ஞாபகம். தலைப்பை மாற்றுவதற்கு மேலேயுள்ள "நகர்த்துக" என்பதை சொடுக்கி வேண்டிய தலைப்புக்கு மாற்றலாம்.--Kanags \உரையாடு 00:41, 30 மார்ச் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சவ்வூடு_பரவல்&oldid=604471" இலிருந்து மீள்விக்கப்பட்டது