வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரில் கொல்லப்பட்ட சிறுவன் விஜயகுமார் தனுசன்.

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது. மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன.