இந்திய பொது சேவை மையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய மின்வழி அரசாங்க திட்டத்திற்கு உயிர் கொடுக்க இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு மே மாதம் அனைத்து மாநிலங்களிலும் பொதுச்சேவை மையங்களை (Common Service Centers) அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. பொதுச்சேவை மையம் என்பது தேசிய மின்வழி அரசாங்க திட்டத்தில் உள்ள 23 திட்ட பணிகளுள் ஒன்றாகும். இந்த சேவையை சிறந்த முறையில் நிறுவி நடத்திச் செல்ல, இந்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் கூட்டாக ஈடுபட்டு வருகிறது.

குடிமக்களுக்கு அரசு சார்ந்த சேவைகளை எளிதில் கொண்டு சேர்க்க உதவும் வாயிலாக இருப்பது உறுதி.

இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 5440 பொது சேவை மையங்கள் (கிராம பகுதிகளில்) உருவாகிக் கொண்டிருக்கின்றன.

பிற இணைப்புகள்[தொகு]

[1] பரணிடப்பட்டது 2008-10-18 at the வந்தவழி இயந்திரம் [2] esevai maiyam